நாய், பூனையை வீகனுக்கு பழக்கலாமா?




Portrait of Basset hound, with food in his red bowl.





ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி


நாய்களை வீகன் டயட்டிற்கு பழக்க முடியுமா?


தியரியாக சூப்பர்தானே என நினைக்கலாம். ஆனால் நடைமுறையில் சால கஷ்டம் சாரே..


நாய்கள் மனிதனுடன் பழகி அதன் உடலில் தாவர ஸ்டார்ச்சுகளை செரிமானம் செய்யும் என்சைம்கள் உருவாகி உள்ளன. பதினான்காயிரம் ஆண்டு நட்புறவின் விளைவு இது. சைவ உணவுகளை நாய்களுக்கு பழக்குவது கருத்தியல் சார்ந்தல்ல உடல் இயக்கம் சார்ந்த நாய்களுக்கு ஆபத்து தரும். 2015 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி செய்த ஆய்வில் நாய்களுக்கு வழங்கப்பட்ட சைவ உணவுகளில் அமினோ அமிலங்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதிலும் நாய்களுக்கு டயட் விதிமுறைகளை விதிப்பது அதிலும் பெருஞ்சோகம்.  `1998 ஆம் ஆண் இப்படி வீட்டில் நாய்களுக்கு சைவ உணவுகளைப் பழக்கியதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.


பூனைகள் சைவ உணவுக்கு ஏற்றவை அல்ல. அதன் உடலில் டாரின் எனும் அமிலம் தேவை. இது இறைச்சியில் மட்டுமே இன்றுவரை கிடைக்கிறது. இது உடலில் குறைந்தால் இதயச்செயலிழப்பு, பார்வை இழப்பு ஏற்படும். எனவே பூனையை சுத்த சைவாக்கும்போது கவனமாக இருங்கள் கனவான்களே


நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம், தகவல்)