போலி சாராயத்தில் பறிபோகும் உயிர்கள்!


Image result for pusaina village
TOI



விதவைகள் கிராமம்

உ.பியிலுள்ள புசைனா கிராமத்தில் விதவைகள் அதிகரித்துள்ளனர். என்ன காரணம்?  மது. இங்குள்ளு 300 குடும்பங்களில் 150 குடும்பங்களில் ஆண்கள் பலியாவது, மதுவினால்தான்.  கடந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 ஆண் உறுப்பினர்கள் உயிரிழப்பது இங்கு சாதாரணமாகியுள்ளது.

போலி சாராயத்தை அருந்தியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. பத்து ரூபாய் பவுச்களில் இந்த போலி சாராயம் கிடைப்பது மரணங்களை பரவலாக்கியுள்ளது.

உ.பி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுவான மரணங்களுக்கு காரணம், போலி சாராயம்தான். புசைனா கிராம மக்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்து எட்டு. ஆண்களை இழந்து வறுமையில் வாடும் பெண்களால் இன்னும் கள்ளத்தனமாக பலரின் வாழ்வை அழிக்கும் போலி சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.

பலரும் போலிச்சாராயத்தைப் பற்றி பேச மறுக்கிறார்கள். காரணம் தெரிந்ததுதான். சாராய மாஃபியாக்களின் அச்சுறுத்தல் வாழ்வுக்கே உலை வைத்துவிடுமே? இங்குள்ள நெக்ஸி தேவி தன் கணவரை மட்டுமல்ல நான்கு பிள்ளைகளையும் போலி சாராயத்துக்கு பலி கொடுத்துள்ளார்.

சுனிலா தேவிக்கு இளம் வயதில் நான்கு பெண்கள் உண்டு. இவரது கணவர் ராஜேந்திர குமார், நாற்பது வயதில் சாக காரணம், போலி சாராயம்தான்.  என் குழந்தைகள் சிறுவர்களாக இருப்பதால் அவர்களை  வேலைக்கும் அனுப்ப முடியவில்லை. நான் வேலை செய்வது அன்றாட வயிற்றுப் பிரச்னைக்கே சரியாகப் போகிறது.

இதில் கொடுமை, போலிச்சாராய பாக்கெட்டுகளை விற்கும் வியாபாரத்தை செய்ய குழந்தைகள் தள்ளப்படுவதுதான். சோறு தின்ன வேறு வழி?  மெயின்புரி சூப்பரிடென்ட் என்ன சொல்கிறார்?

பதினொரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை சீஸ் செய்துள்ளோம். இப்பகுதியில் போலி சாராயத்தை ஒழிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம். நாங்கள் இந்த மாஃபியா கும்பல்களை ஒழிக்க முயற்சித்தாலும் விடாமுயற்சியுடன் நெட்வொர்க்கை உருவாக்கி வருகின்றனர் என்றார் அஜய் சங்கர்.


போலீஸ் அரசு ஒன்றும் இங்கு உதவ வில்லை. தினசரி பனிரெண்டாயிரம் லிட்டர்  போலி சாராயம் பிரமாதமாக விற்று வருகிறது. புசைனாவில் மட்டும் 700 லிட்டர் தயாராகி விற்கப்பட்டு வருகிறது. இதில் 70 லிட்டர் இக்கிராம கஸ்டமர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

யூரியா, வெல்லம், ஈஸ்ட் கலந்து தயாரிக்கப்படும் புசைனா போலி சாராயத்தின் ஸ்ட்ராங் லேபிளுக்கு சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு.

உள்ளூர் சரக்கு போலவே லேபிள் ஒட்டப்பட்டு வரும் இந்த போலிசாராயத்தில் யூரியா, வேதிப்பொருட்கள்கள் சேர்க்கப்படுகின்றன. மற்றப்படி தயாரிப்பு எல்லாம் உள்நாட்டு பிராண்டுகளில் தயாரிப்பு போலவேதான்.

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா -  அனுஜா ஜெய்ஸ்வால்.