நேரத்தை மாற்றினால் இந்தியாவுக்கு 29 ஆயிரம் கோடி லாபம்!





Image result for ist time





இந்தியாவுக்கு நஷ்டம் 29 ஆயிரம் கோடி!


Image result for cornell university jagani
மாலிக் ஜக்னானி


செய்தி: இந்தியாவில் ஒரே காலநேர அட்டவணையைப் பின்பற்றுவதால் ஆண்டுதோறும் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கார்னெல் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தகவல் கூறியுள்ளது.

கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி தனது (PoorSleep: Sunset Time and Human Capital Production) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே இந்திய காலநேர அட்டவணையால் ஆண்டுதோறும் பெருமளவு நிதியிழப்பு ஏற்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி மாலைவேளையில் மேற்குப்புற இந்தியாவை விட கிழக்குப்புற இந்தியாவில் 90 நிமிடங்களுக்குப் பிறகே சூரியன் மறைகிறது. ஒரே காலநேரத்தைப் பின்பற்றும்போது கிழக்குப்புற மக்களுக்கு 90 நிமிடங்கள் தூக்க இழப்பு ஏற்படுகிறது. ”உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இதன் அளவு 0.2 சதவீதம். மொத்தமாக வீணாகும் மனிதவளத்தின் மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் ” என திகைக்க வைக்கிறார் ஆராய்ச்சியாளர் மாலிக் ஜக்னானி.

காலநேர அட்டவணை

ரயில்வே மற்றும் விமான சேவைகளுக்காக உலகமெங்கும் 24 காலநேர அட்டவணைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் பதினைந்து டிகிரி தீர்க்கரேகை அளவில் நேர வித்தியாசம் காட்டுபவை.  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, நியூசிலாந்து, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் பல்வேறு காலநேர அட்டவணைகளைப் பின்பற்றி வருகின்றன.

வடக்கு, தென் ஆப்பிரிக்க நாடுகள் கோடைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஒருமணிநேரம் முன்னதாக நேரத்தை(daylight saving time DST) மாற்றிக் கொள்கின்றனர். என்ன லாபம், கூடுதலான பகல் நேரத்தில் உழைக்கலாமே? இதில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் காலநேர அட்டவணையையும் டிஎஸ்டி முறையையும் பின்பற்றுகின்றன. உலக நாடுகளில் மேற்சொன்ன அட்டவணைகளை எழுபது நாடுகள் பயன்படுத்துவதில்லை. அதில் இந்தியாவும் ஒன்று.

முந்தும் சூரிய உதயம்

புவியியல் ரீதியாக, கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசமும், குஜராத்தும் 30 டிகிரி வித்தியாசத்தில் உள்ளன. இதன் விளைவாக, கிழக்கில் சூரிய உதயம் வேகமாக நடக்கிறது. மறைவு, மேற்கிலுள்ள குஜராத்தில் தாமதமாக நடைபெறுகிறது. இதன்காரணமாகவே அரசு இரண்டு நேரகால அட்டவணையைப் பின்பற்றினால் மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்தியாவுக்கு இது புதிதல்ல. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பாம்பே, மற்றும் கல்கத்தா என இரண்டு காலநேர அட்டவணைகள் இருந்தன. க்ரீன்விச் நேரத்தை(GMT) விட 5.5மணிநேரம் முன்னதாக இருக்கும்படி 82.5 டிகிரி தீர்க்கரேகையில் அமைந்த நேரத்தை(Indian Standard Time) இந்தியா பின்பற்றுகிறது. 
பாதிப்புகள் என்ன?
இந்திய நேரப்படி குஜராத்தில் காலையில் 8 மணிக்கு சூரியன் தோன்றுகிறது. அங்குள்ள பள்ளிகள் தொடங்கி இயங்கும் நேரம், 8.30 ஆக உள்ளது. இதனால், மாணவர்களின் உடல் இயக்க கடிகாரம் திகைத்து தடுமாறும். மாலையில் சூரியன் அஸ்தமனமாவது இரவு 8 மணி என்றால், பள்ளிகள் அலுவலகங்கள் 5 அல்லது ஆறுமணிக்கு மூடப்பட்டுவிடுகின்றன. குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த நேர அட்டவணையைப் பின்பற்றாததால் சூரியனின் ஆற்றலும் வீணாவதோடு, நம்முடைய பணிகளும் முடங்குகின்றன. மேலோட்டமாக பார்த்தால் இதன் பாதிப்புகள் தெரியாது. ஆனால் தினசரி 30 நிமிடங்கள் வீணாகின்றன என்றால் ஓர் ஆண்டுக்கணக்கு போட்டுப்பாருங்கள். மேலும் மாணவர்களுக்கு தூக்கப்பற்றாக்குறை பிரச்னைகளும் இதில் உண்டு.

பகல்நேரம் இழப்பு

“சூரிய அஸ்தமனம் தாமதமாக நிகழும்போது, மாணவர்களும் அதற்குப் பிறகே தூங்கச்செல்வார்கள். இதைப் பொறுத்தே அவர்கள் காலையில் எழும் நேரமும் அமையவேண்டும். ஆனால் இம்முறை உடையும்போது படிக்கும் நேரம் குறைவது, தூக்க பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு அவர்களின் கல்விச்செயல்பாடு முடங்கும் அபாயம் உள்ளது” என்றார்  மாலிக் ஜக்னானி.

இதேபோல நேர அட்டவணை தொடர்ந்தால் பள்ளியில் மாணவர்கள் செலவழிக்கும் நேரம்  தோராயமாக 0.8 அளவில் குறைகிறது. மேலும் மாணவர்களின் வருகைப்பதிவும் பதினொரு சதவீதம் மட்டுப்பட்டு கணித மதிப்பெண்களும் கீழிறங்கிவிடுகிறது என்கிறது ஜக்னானியின் ஆய்வறிக்கைத் தகவல்.  இதுபோல சூரியன் தாமதமாக மறையும் பகுதிகளில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்கலாம் என அமெரிக்காவின் குழந்தைகள் அகாதெமி(American Academy of Pediatrics, ) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவின் காலநேர அட்டவணை மாற்றப் பரிந்துரைகளை நேஷனல் அட்வான்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் டி.பி.சென்குப்தா, திலீப் அகுஜா ஆகியோர் முன்னமே கூறியுள்ளனர். 

தகவல்:Indiaspends,EPW Engage