இடுகைகள்

கிறிஸ்தவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

மிருதங்க கைவினைஞர்களின் தாழ்வுணர்ச்சி கொண்ட வாழ்க்கை! - செபாஸ்டியன் குடும்பக்கலை - டிஎம் கிருஷ்ணா தமிழில் அரவிந்தன்

படம்
  செபாஸ்டியன் குடும்பக்கலை - காலச்சுவடு செபாஸ்டியன் குடும்பக்கலை டிஎம் கிருஷ்ணா தமிழில் டிஐ அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 195 ரூபாய் டிஎம் கிருஷ்ணா புகழ்பெற்ற வாய்ப்பாட்டு கலைஞர். கர்நாடக இசை உலகில் பலரும் இவரது பாடல்களை அறிவார்கள். பாடல்களை சபாக்களைக்  கடந்து பாடும் இடங்களும் கிருஷ்ணாவின் புகழ் பரப்பின. சூழலுக்கு ஆதரவான பாடல்களை பாடும் ஆர்வமும் திறனும் கொண்டவர். அவர், மிருதங்க கைவினைஞர்களைப் பற்றி ஆய்வுகள் செய்து, நான்கு ஆண்டுகள் உழைத்து எழுதிய நூல்தான் இது.  ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழ் வடிவம். நூலின் வெளியீடு மார்ச் 3 அன்று வெளியாகிறது. சென்னை புத்தகத் திருவிழாவில் நூலை வேகமாக அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறார்கள். நூலின் ஆராய்ச்சி தகவல்கள், ரோஹினி மணியின் ஓவியங்கள், கூறுப்படும் பல்வேறு சாதி பற்றிய ஆய்வுத் தகவல்கள் வாசகர்களை வியக்க வைக்கிறது.  பறையர்கள் எனும் சாதியினர் சாதிக் கொடுமை தாங்காமல் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். இவர்கள்தான் மாடு, எருமை, ஆடு ஆகிய விலங்குகளின் தோல்களை வாங்கி மிருதங்கங்களை உருவாக்குகிறார்கள். இதனை வாசிக்கும் பிராமணர்கள், இசைவேளாளர்கள் இதற்கான அங்கீகாரத்தை

எரித்தாலும் மனிதநேயம் வாழும்!

படம்
the battle ஒடிசாவில் அந்த கொடூரம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகப்போகின்றன. கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ், அவரது பிள்ளைகளான பிலிப், டிமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக்கொன்றனர். ஒடிசாவின் புவனேஸ்வரிலிருந்து 250 கி.மீ தூரத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் நடந்த அநீதி இது. அவர் இறந்துபோனதை நம்பவே முடியவில்லை. அவர் எங்களோடுதான் சாப்பிட்டார். சந்தாலி, ஒடியா, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பேசுவார். அவரது மகன்களும் கூட இனிமையாக நடந்துகொண்டார்கள் என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிக்ரம் மராந்தி. 700 வீடுகளைக் கொண்ட பழங்குடிமக்கள் வாழும் பகுதி இது. சந்தாலி, முண்டா, கோல்கா ஆகிய இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் இங்கு இன்னுமே வறுமை உள்ளது. கல்வியும், உணவும் தரும் யார் பேச்சையும் இம்மக்கள் கேட்பார்கள். உணவு தருபவர், இந்துவோ, கிறிஸ்தவரோ அதில் என்ன பிரச்னை வரப்போகிறது என்கிறார் மிஷனரி அமைப்பைச் சேர்ந்த ரோடியா சோரன். மாற்றம் வந்திருப்பது கலாசாரம் குறித்துத்தான். யாரேனும் வெளியில் இருந்து வந்து கலாசாரத்தை மாற்ற முயன்றால் உடனே போலீசுக்கு போய்விடுகின்