இடுகைகள்

சைகிக் பவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னை ஏற்க மறுத்து மோசடி ஆட்களோடு போராடும் நாயகன்! ரெட் லைட்ஸ் -

படம்
  ரெட்லைட்ஸ்  இயக்கம் - தயாரிப்பு - ரோட்ரிகோ கார்டெஸ்  தனக்குள் இருக்கும் மனோசக்தியை ஏற்காமல் மறுப்பவன், மெல்ல அதை   உணர்ந்துகொள்வதுதான் படத்தின் கதை. உளவியல் துறை பேராசிரியர் மார்க்கரேட், அவரது உதவியாளர் இயற்பியலாளர் டாம் பக்லி ஆகியோர் அறிவியலுக்கு புறம்பான நான்தான் கடவுள் என்று சொல்லுகிற ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்கள். அந்த மோசடிக்காரர்களை காவல்துறை சிறையில் அடைக்கிறது. உண்மையில் மார்க்கரேட் பல்வேறு மோசடிகளைக் கண்டுபிடித்து தடுத்தாலும் அவரது சொந்த வாழ்க்கை மெல்ல நசிவிற்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான காரணம், அவரது மகன். நான்கு வயதிலிருந்து கோமாவில் இருக்கும் அவனை வெண்டிலேட்டர் வைத்துத்தான் பாதுகாக்கிறார். அவன் வாழ்வது என்பது மார்க்கரேட் உயிருடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று.   அறிவியல்தான் நிஜம். கடவுள் என்பது கிடையாது என மார்க்கரேட் நம்புகிறார். மோசடியான சாமியார்கள் உலகம் முழுக்க உண்டு. இவர்கள் எப்படி ஜிம்மிக்ஸ் வேலையைச் செய்கிறார்கள், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை படம் நெருக்கமாக நின்று ஆராய்கிறது. அதேசமயம் மனோசக்தி