மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!
ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்! ஷி ச்சின்பிங் சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது. இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது. 2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்...