மூன்றுலக கோட்பாடு எப்படி திரிக்கப்பட்டது என்பதை விளக்குகிற நூல்!

 

 

 


 

 

மாசேதுங்கும் மூன்றுலக கோட்பாடும்

சீன பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், ஆட்சியாளருமான மாசேதுங்கின் ஆதரவாளர்களால் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் மாவோவின் மூன்றுலக கொள்கை எவ்வாறு தவறாக குருச்சேவ், டெங் ஷியாவோபிங் ஆகியோரால் மாற்றப்பட்டு கூறப்பட்டது என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள தவறுகளையும் சுருக்கமாக விவரிக்கிறது.

நூல் மொத்தம் ஐம்பத்தாறு பக்கங்களைக் கொண்ட சிறு நூல்தான். அதிலேயே மூன்றுலக கோட்பாடு என்றால் என்ன, அதில் மாவோ கூறியது என்ன, பின்னாளில் ஆட்சிக்கு வந்த டெங், ரஷ்யாவின் அதிபராக இருந்த குருச்சேவ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி மாற்றினார்கள் என விளக்குகிறது. கூடவே ஆசியான் அமைப்பையும் கடுமையான தொனியில் விமர்சிக்கிறது.

நூலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. தலைவர்கள் கூறிய கருத்துக்கு ஆதரவான விஷயங்களை மக்கள் தினசரி உள்ளிட்ட பத்திரிகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சீன பொதுவுடைமைக் கட்சி பற்றி தமிழில் படிப்பது நன்றாக உள்ளது. அதன் நோக்கத்தை, மாவோவின் லட்சியத்தை புரிந்துகொள்ள நூல் உதவுகிறது.

உலகளவில் ஐக்கிய முன்னணி என கூட்டணி உருவாவதன் பின்னணி, அதிலுள்ள நாடுகளின் அரசியல் நோக்கம் பற்றிய விளக்கம் சிறப்பானது. அமெரிக்க ஆதரவில் நாடுகள் அணிவகுப்பதை நூல் கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எதிர்ப்பவர்களை அவன் இவன் என்றே ஏசுவதற்கு தயங்குவதில்லை. இந்தியாவைச் சேர்ந்த சத்தியநாராயணன் சிங் என்பவரும் ஐக்கிய முன்னணி அமைப்பிற்காக பிரசாரம் செய்தார் என்பதற்காக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். நூலாசிரியருக்கு மனதில் எந்தளவு கோபமோ, அத்தனையையும் கொட்டி தீர்த்திருக்கிறார்.

கோமாளிமேடை குழு 

மா.சே.துங்:-

1, முரண்பாடு பற்றி (கீழைக்காற்று வெளியீட்டகம்)

2, நடைமுறை பற்றி

3, மக்கள் மத்தியில் முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி

4, மனிதனின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன?

 

https://in.pinterest.com/pin/471118811030155308/

thanks

senthalam.com

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்