மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!
பெரியார் ஆயிரம்
தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும்.
மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை.
மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது.
காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது.
நன்றி
பெரியார் ஆயிரம் வினா விடை நூல்
தொகுப்பாசிரியர் கி வீரமணி
திராவிட கழக வெளியீடு
கருத்துகள்
கருத்துரையிடுக