நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

 

 

 


 

 

 
நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

நோபல் பரிசை இந்தியா ஐந்துமுறை பெற்றுள்ளது. மீதிமுறை எல்லாம் இந்திய வம்சாவளி என தலைப்பு எழுதி இந்திய கைக்கூலி ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொண்டன. மற்றபடி கல்வி ஆராய்ச்சிகளுக்கே பெரிய அளவு வரிவிதிப்பு விதிக்கப்பட்டு வருகிற நிலையில் நோபல் பரிசு என்ன, ஆராய்ச்சி செய்பவனுக்கு மரியாதையே சமூகத்தில் இருக்காது. அறிவியலாளர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய இடத்தில் மத தலைவர்கள், சாதி தலைவர்கள், பார்ப்பன பூசாரி, பண்டாரங்கள் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான மத அடிப்படைவாத சிக்கல்கள் இருந்தாலும் டாப் 10 நோபல் பரிசு பட்டியலில் இந்தியா வந்துவிடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். இப்போதைக்கு நோபல் பரிசு பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

ஆதிவாசி, பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு நிதியை பசுமாட்டு மடங்கள் கட்ட மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதர்கள் அழிந்து மாடுகள் மட்டுமே வாழும் சூழ்நிலை இந்தியாவில் ஏற்படக்கூடும். 3 சதவீத இனம் மட்டும் பிழைத்து வாழ்ந்தால் நோபல் பரிசு வாங்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதற்கான ஆலோசனைகள் இதோ....

குறையும் நிதியுதவி

பிரிக்ஸ் நாடுகளிலேயே இந்தியா மட்டுமே அறிவியல் ஆராய்ச்சிக்கு மிக குறைவான நிதியை ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா, அதிக நோபல் பரிசுகளை பெறுகிறதை மட்டும் பார்க்க கூடாது. அதற்கு நிதி ஒதுக்கி, திறமையானவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களின் சாதி, மதம், இனம் பார்க்காமல் அரவணைக்கிறது. அதனால் அந்த நாடு முன்னேறி வருகிறது. இந்தியாவிலுள்ள இந்து பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ், கல்வியை முழுக்க களங்கம் செய்துவிட்டது. ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான, இந்து பேரினவாத கட்சி, அரசியல்வாதிகளை அனைத்து அறிவியல் அமைப்புகளிலும் நியமித்து கண்டுபிடிப்புகளை அழித்து வருகிறது. எனவே,  இந்துத்துவவாதிகளை நீக்கினாலே இப்போதுள்ள அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறைய சாதனைகளை படைக்க முடியும்.

உலகளவிலான ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு

பாலஸ்தீனியர்களை அழிக்க இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. கூலிப்படையாக இளைஞர்களை பல்வேறு நாடுகளின் போர்களுக்கு அனுப்பி வைக்கிறது. இதுபோல அழிவுப்பூர்வமாக அல்லாமல் ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புக்காக இந்தியா ஏதேனும் யோசிக்கலாம். குறிப்பாக, நோபல் பரிசு வென்ற ஆராய்ச்சியாளர்களிடம் கற்க மாணவர்களை அனுப்பி வைக்கலாம். இதன்மூலம் இந்தியா, காப்பியடிக்காமல் புதிய நுட்பங்களை உருவாக்க முடியும். அனைத்து வணிகங்களையும் நகல் செய்து பிழைப்பது வெகுநாட்களுக்கு நாட்டிற்கு நன்மை தேடித்தராது.

சவால்களை சந்திப்போம்

சம்பாதிப்பதற்கு என்ன வேலை செய்யப்போகிறாய்? என்பதே இந்தியாவில் பள்ளிகளில் கேட்கப்படும் கேள்வி. இதற்கு, அறிவியல் ஆராய்ச்சி, இசைக்கலைஞர் என பதில் சொன்னால் கொலைக்குற்றம் செய்தவர்கள் போல பள்ளி மாணவர்கள் நடத்தப்படுவார்கள். அறிவியலுக்கு இந்தியாவில் அந்தளவுதான் மரியாதை. கைநிறைய காசு சம்பாதித்தால் போதும். அதை பக்கோடா விற்று செய்தால் என்ன, போதை மருந்து விற்று செய்தால் என்ன என்பதே இந்திய மனநிலை. இந்திய ஆட்சித்தலைவர், வெளிப்படையாகவே இந்தியர்கள் பக்கோடா, வடை என சுயமாக தொழில்செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என கூறி அரசு வேலைகள் கிடைக்காது என கூறிவிட்டார்.

சாதி மேலாதிக்கம், தொழில்களை தொடங்குவதில் வங்கி நிதியுதவி கிடைக்காமை, அரசு உரிமம் கிடைப்பதில் சிக்கல் என நிறைய பிரச்னைகள் உள்ளன. உங்களுக்கு அரசியல் ரீதியாக, சாதி, மதரீதியாக செல்வாக்கு இருந்தால் தொழில் செய்யலாம். இல்லையெனில் மாதசம்பளத்திற்கு வேலையில் சேர்ந்து ஜிஎஸ்டி கட்டி நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பாக உதவுங்கள். ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதியுதவிகள் குறைந்து வருகிற சூழலில், மாணவர்களை ஆராய்ச்சி செய்யுங்கள் என்று கூறுவது, நீங்களாகவே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதற்கு சமம்.  

அறிவியல் கல்வி

இந்திய அரசு, குலக்கல்வி திட்டத்தை வடமொழி சுலோகனை சொல்லி பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்த நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. இந்த வகையில் சூத்திரர்கள் அவர்களின் அப்பா, தாத்தா செய்த ப்ளூகாலர் வேலைகளுக்கு திரும்பிவிட்டால், மீதியுள்ள வேலைகளை மூன்று சதவீத இனக்குழுவிற்கு எளிதாக வழங்கலாம். இந்த கல்வி சீர்திருத்தம் மூலம் நெய்யூற்றி வளர்த்த மூளைகளை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி நோபல், ரெபல், ஆஸ்கர், பாஸ்கர், செவாலியே பல விருதுகளை தட்டித் தூக்கலாம். மேல்சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கலவரம் செய்வது கடந்து நேரமிருந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்தால் அவர்களை ஆராய்ச்சிக்கு ஊக்கப்படுத்தலாம்.

அறிவியலில் பாய்ச்சல்

உலகளவில் இந்தியா, ஆராய்ச்சி செய்யும் நாடுகளில் பெருமைக்குரியதாக 81ஆவது இடத்தில் உள்ளது. பத்து லட்சம் பேருக்கு 260 பேர்கள் என்ற எண்ணிக்கையில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். மேற்கு நாடுகளில் நான்காயிரம் என்ற எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். ஒன்றும் பிரச்னையில்லை. அவர்கள் கண்டுபிடிக்கட்டும். சந்தையில் வந்தவுடன் இந்தியா அதை காசு கொடுத்து வாங்கிக்கொண்டால் பிரச்னை தீர்ந்தது. இதற்காக நிதி ஒதுக்கி, எதற்கு மூளையை கசக்கி ஆராய்ச்சி செய்யவேண்டும்?

அடிப்படை கட்டமைப்பின்மை, குறைந்த மாத சம்பளம், வேலைவாய்ப்பும் குறைவு என்பதால், ஆராய்ச்சியாளர்கள் க்யூவில் பலமணிநேரம் நின்று விசா வாங்கியாவது அமெரிக்கா சென்று விடுகிறார்கள். இந்த வகையில் இந்தியா மேற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவி வருகிறது. இதற்காக எதிர்காலத்தில் ராயல்டி தொகை ஏதேனும் வசூலிக்கலாம்.


what indian can do to end science nobel drought - v ramgopal rao 13.10.2024

பகடி கட்டுரை
தீரன்







 

 

 

 https://tenor.com/view/vadivelu-cup-parade-gif-15500520

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.youtube.com/watch%3Fv%3DA2B-E1L_ji0&ved=2ahUKEwj-sZfX94yJAxX7ha8BHXduKiIQh-wKegQIJhAD&usg=AOvVaw3vycGMP8Yx8tj7_tUbh_aW

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்