இடுகைகள்

கேப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!

படம்
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும்  பார்த்து அதிர்ந்து போனார்கள். வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம். இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா? அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் எ