இடுகைகள்

சோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

படம்
  டிரான்சில்வேனியா 4 டிரான்சில்வேனியா 4 சோனி அனிமேஷன் டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.  படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது.  டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார்.  டிரான்சில்வேனியா 4  இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மான்ஸ்டராக மாற்றிக்கொள்ள வ

உங்களை தப்பிக்க வைக்க உதவும் பொருட்கள்! - கிண்டில் பேப்பர்வொயிட், ஆக்குலஸ், சோனி ஹெட்போன், எக்ஸ்பாக்ஸ், நின்டெண்டோ

படம்
  ஆக்குலஸ் க்வெஸ்ட் 2 முதலில் வெளியான விஆர் ஹெட்செட்டை விட சிறப்பாக இருக்கிறது. மேலும் இதில் வயர் கிடையாது என்பதால்,  கம்ப்யூட்டர் கன்சோல் என எதிலும் சிக்க வேண்டியது இல்லை. ஜாலியாக சூழலிலிருந்து தப்பி இன்னொரு உலகிற்கு செல்லலாம். இதன் நினைவகமும் 64 லிருந்து 128 ஜிபியாக மேம்பட்டுள்ளது.  விலை 29,900 நின்டெண்டோ ஸ்விட்ச் இதனை விளையாட பெரிய ஓஎல்இடி திரை எல்லாம் தேவையில்லை. எடுத்து டிவியில் பொருத்தி விளையாட வேண்டியதுதான். ப்ரீத் ஆப் தி வைல்ட், மெட்ராய்ட் டிரெட் ஸெய்டா என ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. விளையாட்டுத்தனம் கொண்டவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொருத்தமான சாய்ஸ் இது.  விலை 25,900 எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் தரத்தில் இதனை அடித்துக்கொள்ள முடியாது. இப்போது நெட்பிளிக்ஸில் கூட கேம்களை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். இதையும் எக்ஸ்பாக்ஸ் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.  8 கே தரத்தில் விளையாட்டுகளை விளையாடலாம். மைக்ரோசாப்டின் பெஸ்ட் கன்சோல் என்று இதனைக் கூறலாம்.  விலை 49,900 சோனி டபிள்யூஹெச் 1000 எக்ஸ் எம்4 இரைச்சல் குறைவாக கேட்கும் ஹெட்போன். ஆகாய விமானத்தில் சென்றால் கூட அதன் இரைச்சலை மிகவும் மட்டுப்படு

சிறந்த டிவி, கேட்ஜெட், சூழலுக்கு உகந்த நிறுவனம், பிராண்ட்! - சந்தைக்குப் புதுசு

படம்
                  சி றந்த கேட்ஜெட் சோனி பிளேஸ்டேஷன் 5 இந்த விளையாட்டு அதன் தரத்திலும் விலையிலும் கூட மக்களின் மனம் கவர்ந்துள்ளது . அதிநவீன டிவி இல்லாவிட்டாலும் அதிலும் இதனை இணைத்து விளையாட முடியும் . எக்ஸ்பாக்ஸை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுள்ளது . இந்த வகையில் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது . ஃபிட்பிட் ஏஸ் 3 குழந்தைகளின் தூக்கம் , விளையாட்டு ஆகியவற்றை இதன் மூலம் எளிதாக கண்காணிக்கலாம் . கலோரி போன்றவற்றை போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் கையில் கட்டிக்கொள்ள எளிதாக இருக்கிறது . அதிகநேரம் இதனை அணிந்திருந்தாலும் கூட எரிச்சல் ஏற்படுவதில்லை . வார நாட்களில் சில முறை சார்ஜ் செய்யும்படி இருக்கும் . சிறந்த கண்டுபிடிப்பு சாம்சங் மைக்ரோஎல்இடி எல்இடி ஓஎல்இடி போன்ற திரைகளில் உள்ள பலவீனத்தை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மைக்ரோஎல்இடி வாங்கலாம் என்று முடிவெடுக்கும்படி புதிய டிவியை உ்ருவாக்கியிருக்கிறார்கள் . ஒருவகையில் சாம்சங்கின் முடிவு எதிர்காலத்திற்கான முன்னடி என்று கூட சொல்லலாம் . பத்தாயிரம் மணி நேரங்கள் பாதுகாப்பு எ

முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்! - திரைப்பட இயக்குர் இவான் அயர்

படம்
    இவான் அயர் இயக்குநர் இவான் அயர் இவர் இயக்கியுள்ள மீல் பத்தார் எனும் படம் முதலாளித்துவ சமூகத்தில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பிரச்னை பற்றி பேசுகிறது . இவர் சண்டிகர் நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் . கடந்தாண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் உங்கள் படம் மீல் பத்தார் திரையிடப்பட்டது . அப்படம் பற்றி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் , எங்கே செல்லவேண்டும் என்பது பற்றி கூறுவதாக கூறினீர்கள் . கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் . படத்தலைப்பிற்கு அர்த்தம் மைல்கல் என்பது . மைல்கல் என்பதுதானே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் . எவ்வளவு தூரம் போக முடியும் என்பதைக் கூறுகிறது . இதற்காகவே படத்திற்கு மீல் பத்தார் என தலைப்பு வைத்தேன் . ஆனால் படத்தில் ஐம்பதாயிரம் மைல்களை கடந்தபிறகு அவன் , தான் என்ன சாதித்தோம் என்பதே அவனுக்குதெரியாமல் இருக்கிறது . நிலையாமை பற்றித்தான் இங்கு பேசுகிறேன் . டெல்லியில் நடைபெற்ற குழு வல்லுறவு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2018 இல் சோனி என்ற படத்தை உருவாக்கினீர்கள் . உங்களது இரண்டாவது படத்தை எப்படி இந்த முறையில் உருவாக்க முடிந்தது ? பஞ்சாபி

ஒலியின் பயணம்!- அன்றிலிருந்து இன்றுவரை

படம்
3400 ஆண்டுகள் ஆகின்றன. நாம் தகவல் தொடர்பு விஷயங்களை கண்டறியத் தொடங்கி. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என புகைப்படங்களை விட ஒலி மக்களை கவனிக்க வைக்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஒளி பாதிவேலையை செய்தால், ஒலி மீதி வேலையைச் செய்கிறது. மெசபடோமியர்கள் செய்திகளை எழுதி அதனை சத்தமாக பேசி பிறருக்கு செய்தியை கடத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட மிகத்தரமான ஒலியை நம்மால் கேட்கமுடியவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று நாம் ஸ்மார்ட்போன் அல்லது யூடிபில் 8டி ஒலியை கேட்டு மகிழ்ந்து வருகிறோம். அந்த ஒலியின் பயணத்தை நாம் பார்ப்போம். 1860 போன் ஆட்டோகிராப் 1853 ஆம் ஆண்டு எட்வர்ட் மரியன்வில்லே என்ற கண்டுபிடிப்பாளர் மனிதர்களின் குரலை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதில் பல்வேறு விஷயங்களை மேம்பாடு செய்ய முடியவில்லை. குறிப்பாக திரும்ப போட்டு பார்த்தால்தானே அதில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும். 1886 வேக்ஸ் சிலிண்டர் - போனோகிராப் இதனை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கினார். பின்னர், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மேம்படுத்தி கிராம போன் கருவியைக் கண்டுபிடித்தார். இதில்தான் பதிவு செய்த குரல்களை தி

செயற்கை நுண்ணறிவு கேள்விகள்! - பதில் சொல்லுங்க பார்ப்போம்

படம்
Pexels.com ரோபோ குறித்து மூன்று விதிகளை உருவாக்கி புகழ்பெற்றவர் இவர். இன்றுவரை இவரின் விதிகளை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவரின் லையர் என்ற சிறுகதையில்(மே 1941) இந்த விதிகள் எழுதப்பட்டன. யார் இந்த ஆளுமை? 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதர்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தக்கூடாது என்று 200 க்கும் மேற்பட்ட டெக் கம்பெனிகள் போராடினர். இந்த போராட்ட அமைப்பின் பெயர் என்ன? ஐபிஎம் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இதன் சிறப்பு, நாம் கேட்கும் கேள்விக்கு உடனே டி.ஆர் போல பதில் சொல்லி அசத்தும். மனிதர்களுக்கு சமையல் சொல்லித் தருவதில் கூட திறன் காட்டி அசத்தியது. இந்த கம்ப்யூட்டரின் பெயர் தெரியுமா? சோனி தயாரித்த ரோபோ என்பதுதான் க்ளூ. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் இதன் ஸ்பெஷாலிட்டி. தன் எஜமானருக்கு ஏற்படும் பதினான்கு நோய்களைக் கண்டறிந்து உதவும் தன்மை கொண்டது இந்த ரோபோ. இப்போது நீங்கள் பெயரைக் கண்டுபிடித்திருப்பீர்களே? ரஷ்ய பணக்காரர் 2045 இனிஷியேட்டிவ் என்ற திட்டத்தை உருவாக்கினார். மனிதர்களின் மூளையை ரோபோக்கள் கட்டுப்படுத்