உங்களை தப்பிக்க வைக்க உதவும் பொருட்கள்! - கிண்டில் பேப்பர்வொயிட், ஆக்குலஸ், சோனி ஹெட்போன், எக்ஸ்பாக்ஸ், நின்டெண்டோ
ஆக்குலஸ் க்வெஸ்ட் 2
முதலில் வெளியான விஆர் ஹெட்செட்டை விட சிறப்பாக இருக்கிறது. மேலும் இதில் வயர் கிடையாது என்பதால், கம்ப்யூட்டர் கன்சோல் என எதிலும் சிக்க வேண்டியது இல்லை. ஜாலியாக சூழலிலிருந்து தப்பி இன்னொரு உலகிற்கு செல்லலாம். இதன் நினைவகமும் 64 லிருந்து 128 ஜிபியாக மேம்பட்டுள்ளது.
விலை 29,900
நின்டெண்டோ ஸ்விட்ச்
இதனை விளையாட பெரிய ஓஎல்இடி திரை எல்லாம் தேவையில்லை. எடுத்து டிவியில் பொருத்தி விளையாட வேண்டியதுதான். ப்ரீத் ஆப் தி வைல்ட், மெட்ராய்ட் டிரெட் ஸெய்டா என ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. விளையாட்டுத்தனம் கொண்டவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொருத்தமான சாய்ஸ் இது.
விலை 25,900
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்
தரத்தில் இதனை அடித்துக்கொள்ள முடியாது. இப்போது நெட்பிளிக்ஸில் கூட கேம்களை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். இதையும் எக்ஸ்பாக்ஸ் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.
8 கே தரத்தில் விளையாட்டுகளை விளையாடலாம். மைக்ரோசாப்டின் பெஸ்ட் கன்சோல் என்று இதனைக் கூறலாம்.
விலை 49,900
சோனி டபிள்யூஹெச் 1000 எக்ஸ் எம்4
இரைச்சல் குறைவாக கேட்கும் ஹெட்போன். ஆகாய விமானத்தில் சென்றால் கூட அதன் இரைச்சலை மிகவும் மட்டுப்படுத்தி விக்னேஷ் சிவனின் பாடல்களை இனிமையாக கேட்கலாம். ஒலியின் தரத்தையும் சோனி சிறப்பாக மேம்படுத்தியுள்ளது.
விலை 29,900
கிண்டில் பேப்பர்வொயிட்
இதில் சிக்னேச்சர் எடிஷன் வாங்கினால், 32ஜிபி நினைவகம் இலவசம், சார்ஜ் செய்வது கூட வயர்லெஸ்தான். இதில் தானியங்கி முறையில் ஒளி குறைகிறது. 330பிபிஐ தரத்தில் உள்ள ஸ்க்ரீன் நூலை படிப்பது போன்ற மாயத் தன்மையை ஏற்படுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், பத்து வாரங்கள் தாங்கும் என்கிறது அமேசான்.
விலை 17,999
டி 3 இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக