இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

 




ஆபிரஹாம் லிங்கன்






ஆப்ரஹாம் லிங்கன்


அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். 

தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது. 

அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர். 

இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 

1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதான்.  1864ஆம் ஆண்டு ஆப்ரஹாம் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசின் படைகள் பல்வேறு மாகாணங்கள் வெற்றி பெற்றதுதான் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமா?

1865ஆம் ஆண்டு லிங்கன் வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர்ட் நாடக அரங்கில் சுடப்பட்டார். இத்தாக்குதல் நடந்த  தேதி ஏப்ரல் 14. துப்பாக்கியால் சுடப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர், அடுத்த நாள் இறந்துபோனார். இவரை ஜான் வில்கெஸ் பூத் என்பவர் சுட்டார். இவர் அடிமைகளுக்கு எதிரான கூட்டமைப்பு தலைவர். .44 காலிபர் டெரிங்கர் பிஸ்டலால் அதிபர் லிங்கனை சுட்டார். 

பூத்தின் திட்டம் பெரியது. லிங்கன் மட்டுமல்ல. அமெரிக்க அரசின் ஆதாரமான  வில்லியம் ஹெச் சேவார்ட், ஆண்ட்ரூ ஜான்சன் ஆகியோரையும் போட்டுத்தள்ளி மீண்டும் அடிமை முறையை சட்டப்பூர்வமாக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சிகள் வேலைக்காகவில்லை. 

பூத்தின் சதித்திட்ட முயற்சியால் லிங்கன் இன்றும் வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் இடம்பிடித்துவிட்டார். மக்களுக்காக மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட்ட அதிபர்களின் ஆப்ரஹாம் லிங்கனை அமெரிக்கர்கள் மறக்கவே முடியாது. 

டெல் மீ வொய் இதழ் 

 





கருத்துகள்