பல்வேறு மொழிகளில் பாடலைப் பாடுவது கடினமானது! - பாடகி உஷா உதூப்
பாடகி உஷா உதூப் |
உஷா உதூப்
பாடகி
அண்மையில் இவரின் தி குயின் ஆப் இந்தியன்
பாப் என்ற சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது.
நீங்கள் பதினேழு இந்திய மொழிகளிலும் நான்கு வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்கள். தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடுவது கடினமானதா?
இப்படி பல்வேறு மொழிகளில் பாடுவது கடினமானதுதான். எனக்கு தாய்மொழி அல்லாத மொழிகளில் பாடும்போது பாடலை நான் எனக்காக மூன்றுமுறை எழுதி வைத்துக்கொள்வேன். குறிப்பிட்ட வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இந்த முறை பயன்படுகிறது.
பாடலைப் பாட எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?
பணம் கிடைக்கிறது என்பது முக்கியமான காரணம். அதற்கு முன்னதாக நமக்கு ரசிகர்கள் வேண்டுமே? பாடலின் தரமும், அந்த பாடல் நமக்கு கிடைப்பதும் முக்கியமானது. ரசிகர்களின் எண்ணிக்கையை விட பாடலின் தரம் முக்கியமானது.
நீங்கள் 53 ஆண்டுகள் பாடகியாக இருந்துள்ளீர்கள். இதனை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது?
இது கனவுப்பயணம் போலத்தான் இருக்கிறது. என்னுடைய வேலையின் முக்கியமான சாதனைகள் அனைத்துமே கடுமையான சவாலாகத்தான் இருந்துள்ளது. நான் திரைப்பட பாடகியாக மாறுவதற்கு முன்னர் நேரடியாக மேடைகளில் பாடிக்கொண்டிருந்தேன். என்னை உலகம் அறிந்தது வாய்மொழியாகவும், அச்சு ஊடகம் வழியாகவும்தான். எனவே என் பாடலைக்கேட்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம் பாராட்டு என்பது மெதுவாகத்தான் வந்தது. மேலும் என்னுடைய குரல் ஆழமானது. அன்றைய பாடல் துறையில் என்னுடைய குரல் என்பது மிகவும் வேறுபட்டது. எனவே, எனக்கு வாய்ப்புகள் என்பது குறைவாகவே கிடைத்தது. எனது குரல் நூறு சதவீதம் அசலானது.
உங்களது சுயசரிதை நூலில் குயின் ஆப் பாப் என்று போட்டிருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒரு மாதிரியான சங்கடத்தை தான் தருகிறது. நான் நல்லவேளையாக எனது சுயசரித த்தை எழுதவில்லை. அப்படி எழுதினால் இப்படி என்னைக் குறிப்பிட்டிருப்பேனா என்பது நிச்சயமில்லை. இந்த தலைப்பு எனக்கு மக்களிடையே தொடர்பு கொள்ள உதவுகிறது என நினைக்கிறேன். மற்றபடி, இசை என்பது எனக்கு தொழில் அல்ல என்பதை நினைத்துக்கொண்டே இருப்பேன்.
இந்தியா டுடே
பௌலோமி தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக