குழந்தைகளுக்கான எளிமையான கவிதைகளை இயற்றிய அமெரிக்க கவி!

 





ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ




எளிமையான உணர்ச்சிகளை படைப்பாக்கியவர்!


இவர் காலத்தில் பலரும் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்க மெனக்கெட்டனர். ஆனால் வேட்ஸ்வொர்த் நேர்மையான மனிதர்களைக் கொண்ட சிறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகளை எழுதினார். 

இதன் காரணமாக இவரின் படைப்புகளை பலரும் குழந்தைத்தனமாக இருக்கிறது என விமர்சித்தனர். ஆனால் அன்றைய காலத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு படித்துக் காட்ட எளிதான கவிதை என்று இருந்தது ஹென்றியினுடையது மட்டும்தான். 

1807ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பிறந்தவர் ஹென்றி. அமெரிக்காவின் போர்லேண்டில் பிறந்தவர், தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்திற்காக உழைப்பது என முடிவு செய்துவிட்டார். 

ஹென்றியின் பெற்றோர் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பினார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்வான் என நம்பினார்கள். மைக்கேல் ஏஞ்சலோவின் கவிதையை சிறப்பாக மொழிபெயர்த்தார். பிறகு, டண்டே அலிகியரின் டிவைன் காமெடியை மொழிபெயர்ப்பு  செய்ததை இலக்கிய வட்டாரம் முக்கியமானது என குறிப்பிடுகிறது. 

ஹென்றிக்கு இருமுறை திருமணம் ஆனது. முதல் மனைவி குழந்தை பிறப்பின்போது உடல்நலம் குன்றி இறந்துபோனார். பிறகு, இரண்டாவது மனைவியை மணந்தார். அவர், விளக்கேற்றும்போது தவறுதலாக தன்னை நெருப்புக்கு பலியிட்டுக்கொண்டார். இப்படி சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஹென்றியின் கவிதையிலும் சோகமான கவிதைகளாக உருவாயின. ஃபுட்ஸ்டெப்ஸ் ஆப் ஏஞ்சல்ஸ், வில்லேஜ் பிளாக்ஸ்மித் என இரு கவிதைகளை நாம் அடையாளம் காட்டலாம். 

அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான கலைஞர், ஹென்றி மார்ச் 24, 1882அன்று காலமானார். 2022ஆம் ஆண்டு அவரின் 140 ஆவது நினைவுதினத்தை அனுசரிக்கிறோம். 

டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்