முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?
கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.
இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.
ஹிஜாப்
நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.
நிகாப்
இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.
பர்கா
இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்கும். மற்றபடி முழுக்க தேங்காய்ப் பருப்பை மழைவந்தால் தார்பாயில் மூடுவார்களே அப்படித்தான் இருக்கும்,.
சாடோர்
இதில் முகத்தை மட்டும் விட்டுவிட்டு உடலை முழுக்க மூடியிருப்பார்கள். இதில் முகத்தை மூடுவதற்கான அமைப்பும் இணைக்கப்பட்டிருக்கும்.
இங்கு கூறியிருப்பது கூட சில வகைகள்தான். இவையின்றி இன்னும் நிறைய உடை மாடல்கள் உள்ளன. சாய்லா, அபாயா என சில வகைகளும் உண்டு. பர்கா என்பது பெரும்பாலும் நீல நிறத்தின் அடிப்படையாகவே இருக்கும். நிலப்பரப்பு, கலாசாரம், நவீன நாகரிகம் பொறுத்து உடையில் நிறைய மாற்றங்கள் உண்டு.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக