வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

 








கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட்

ஜென்னி பியர்சன்

ஓவியம் டேவிட் ஓ கானல்

அஸ்பார்ன் புக்ஸ்




ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை. 






ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட்

கேரி பால்சன்

மேக்மில்லன் 

பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை. 




கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ் 

சாம் கோப்லேண்ட்

ஓவியம், சாரா ஹோம்

கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க்கிறாள். இந்த சக்தியை வைத்து  தனது பாட்டியை வீட்டிற்கு கூட்டி வர முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை. 

தி ரோலர்கோஸ்டர் பாய்

லிசா தாம்சன்

ஓவியம் ஜெம்மா காரல்

டாட், லாரி ஆகியோரின் அப்பா தூங்குவதில் புகழ்பெற்றவர். எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறார். இவர் தனது பிள்ளைகளை சுற்றுலா கூட்டிச்செல்கிறார். அதிசயமான இடத்திற்கு கூட்டிச்செல்வார் என்று பிள்ளைகள் நினைக்க, குப்பையான இடத்திற்கு கூட்டிச்செல்கிறார். கதையில் வரும் மர்மம் ஒன்றை அவர் தீர்க்க முயல, அதற்கு பிள்ளைகளும் உதவுகிறார்கள். அதுதான் இந்த நூலை வாசிக்க வைக்கிறது. 




எ ஸ்ட்ரோம் ஆப் சிஸ்டர்ஸ்

மிச்செல் ஹாரிசன்

சைமன் ஸ்ஹஸ்டர் 




பின்ச் ஆப் மேஜிக் நூலின் தொடர்ச்சி. விதர்ஷைன் சகோதரிகள், தங்களது பாட்டியோடு சகோதரி கிளாரிசாவை தேடி பயணிக்கிறார்கள். போகும் இடங்களில் மக்களே இல்லாமல் பயமுறுத்தும் படி நிலைமை இருக்கிறது. பனிப்புயல் வரும் நிலையில் தங்களது பாட்டியை சகோதரிகள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே கதை. 

தி வீக் ஜூனியர் இதழ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்