எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100! - மலையேற்ற பயணத்தின் வரலாறு

 









எவரெஸ்ட் பயணத்திற்கு வயது 100!




நூற்றாண்டு கண்ட இமயமலை பயணம் !

கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம், இமயமலைக்கு மக்கள் பயணம் செல்லத் தொடங்கி நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. இமயமலை 8,849 மீட்டர்கள் உயரமானது. உலகின் உயரமான மலை இது. 1921ஆம் ஆண்டு முதலே இமயமலையில் மக்கள் ஏறி சாதித்து வருகிறார்கள். இன்று, ஆண்டிற்கு 500 பேர் இமயமலையை எட்டிப்பிடிக்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்கள். 

இமயமலையின் எல்லைப்பகுதியில் நேபாளமும், திபெத்தும் அமைந்துள்ளன. இமயமலையின் திபெத்திய பெயர் கோமொலாங்மா (qomolangma). இதன் பொருள் புனித அன்னை. இந்த மலை, 2414 கி.மீ. தொலைவில்  ஐந்து ஆசிய நாடுகளைச் சுற்றிலும்  அமைந்துள்ளது.

தொடக்கத்தில் நேபாளமும், திபெத்தும் அந்நியர்களை இமயமலை பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 1921ஆம் ஆண்டு திபெத்  பகுதியினர், பிரிட்டிஷ் வீரர்களை இமயமலை ஏற அனுமதித்தது. இவர்கள் மலையை ஆராய சென்றனர். இக்குழுவை சார்லஸ் ஹோவர்ட் பரி (charles howard bury) என்பவர் வழிநடத்தினார். புவியியலாளர்கள், வரைபட ஆய்வாளர்கள் குழுவில் இருந்தனர்.   இப்பயணத்தைப் பற்றி கார்டியன் பத்திரிக்கை ”சார்லஸ் எவரெஸ்டில் ஏறியது மகத்தான சாதனை. துல்லியமாக சொல்வதென்றால் அவரது காலடியில்தான் உலகமே இருப்பதை பார்த்திருப்பார் ”என்று எழுதியது. 

எவரெஸ்டுக்கு செல்லும் பயணத்தில் இடையே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கெல்லாஸ், காலமானார். ஆராய்ச்சிக்குழுவினர் அங்கு முகாம் ஒன்றை அமைத்து எவரெஸ்டை முழுக்க ஆராய்ந்தனர். மலையின் உயரத்தை அளக்க முயன்றபோது பனி, காற்று ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் பயணத்திற்கு பிறகு டென்ஸிங் நார்கே(Tensing norgay), எட்மண்ட் ஹிலாரி (Edmund hillary)ஆகிய இருவரும் 1953ஆம் ஆண்டு எவரெஸ்டின் உச்சியைத் தொட்டு சாதித்தனர். 

எவரெஸ்ட் சிகரம், நூற்றாண்டுக்கு தலா அரை மீட்டர் உயரம் உயர்ந்து வருகிறது. இதில் மிக இளம் வயதில் ஏறிய சாதனைக்கு சொந்தக்காரர், ஜோர்டன் ரோமெரோ(Jordan Romero). 2010ஆம் ஆண்டு சீன பகுதியிலிருந்து எவரெஸ்ட் மலை ஏறி சாதித்தார். அச்சமயத்தில் நேபாளம் பதினாறு வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களை மட்டுமே மலை ஏற அனுமதித்தது. இதனால் ரோமெரோ சீனப்புறத்திற்குச் சென்று சிகரம் ஏறி சாதித்தார்.  

ஆதாரம்
the week junior uk
the plan to conquere everest
the week junior uk  4.12.2021

 ---------------------------------------------------

pinterest


கருத்துகள்