நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!
நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்!
உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.
மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.
வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால் கேரளாவில் தனிநபர் 757 கிலோவாட் மின்சாரத்தை பயன்படுத்துகிறார். குஜராத் மாநிலத்தில் அதை விட மூன்று மடங்கு (2,378 kWh) அதிகமாக நுகர்வு உள்ளது.
சரியான பயன்பாடு
மேற்கு நாடுகள் தொழில்துறை, உள்நாடு, போக்குவரத்து துறை, விவசாயம் ஆகியவற்றில் மின்சாரத்தின் பயன்பாட்டை சிக்கனமாக, சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். கார்பன் அளவை பூஜ்ஜியமாக்கும் திட்டத்திற்கு இசைந்த காரணத்தால் இப்போதே அதற்கான திட்டமிடலைத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் ஆற்றல் திறன் மேம்பாட்டு அமைப்பு(BEE), பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (PCRA), குஜராத் ஆற்றல் மேம்பாட்டு முகமை (GEDA)என்ற அமைப்புகள் சிறப்பாக ஆற்றலை பயன்படுத்த உதவி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவி குறைவாக இருந்தாலும் கூட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
எல்இடி விளக்குகளை மின் சேமிப்புக்கு பயன்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை, சிறப்பான வெற்றியை அளித்துள்ளது. மின்சாதனங்களுக்கான பிஇஇ அமைப்பின் தர மேம்பாடு மற்றும் அட்டவணைப்படுத்தல், மின்சேமிப்பிற்கு உதவியுள்ளது. மின்சார மோட்டார்கள் மின்சாரத்தை 75 சதவீதம் பயன்படுத்துகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை இந்திய அரசு வழங்கவில்லை. உலகம் முழுக்க மோட்டார்களின் மின் செயல்பாட்டு அளவு ஐஇ 3 (IE 3)என கட்டாயமாகியுள்ளது. இந்தியாவின் இந்த அளவு ஐஇ 1 என்றே உள்ளது.
நுகர்வுக்கு எல்லை
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி(SUV) வாகனங்களின் விற்பனை 30 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில் இந்த அளவு 50 சதவீதமாக உள்ளது. இதில் எலக்ட்ரிக் சாதனங்களையும் பொருத்தி இயக்குவது அதிக ஆற்றல் பயன்பாட்டையும் கார்பன் மாசையும் குறைக்கும். மின் வாகனங்களை இயக்குவதற்கான மின்சாரமும் பசுமையான வழியில் கிடைப்பது உறுதிபடுத்தவேண்டும். அப்போதுதான் மின் வாகனங்களை பயன்படுத்துவதன் பயன் மக்களுக்கு கிடைக்கும்.
பொதுப்போக்குவரத்து ஊக்கம்
சாலைப் போக்குவரத்திற்கு அதிக ஊக்கத்தை அரசு தரவேண்டும். இப்போது ஒப்பீட்டால் சாலைகளை விட ரயில்களே போக்குவரத்தில், சரக்கு கையாள்வதில் மிஞ்சி வருகின்றன. அமெரிக்காவைப் போலவே நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். இந்தியா. உள்நாட்டு நகரங்களுக்கு இடையில் உள்ள விமானப் போக்குவரத்தை அதிகரித்து வருகிறது. சூழல் அடிப்படையில் இது சிறப்பான முடிவல்ல. ஐரோப்பாவில் விமானசேவையை விட அதிகவேக ரயில் சேவையையே ஊக்குவிக்கிறார்கள். நகரத்திற்குள் சைக்கிள் பயணத்தை ஆதரிக்கிறார்கள். சீனாவும் இதேபோலவே செயல்படுகிறது.
இந்தியா, 50 முதல் 70 சதவீதம் அளவுக்கு எரிபொருளை இறக்குமதி சார்ந்தே பெறுகிறது. தனியார் வாகனப் போக்குவரத்திற்கு கட்டுப்பாட்டை விதித்து, சாலை, நடைப்பயணம், சைக்கிள் பயணங்களை அரசு ஊக்குவிப்பது அவசியம்.
மறுசுழற்சி அவசியம்
இனி அனைத்து பொருட்களையும் மறுசுழற்சி செய்வது அவசியம். எனவே, அதற்கேற்ப ஸ்டீல், செம்பு, அலுமினியம் ஆகிய பொருட்களை வடிவமைப்பது அவசியம். தேவையை விட பாதுகாப்பு என்பதை முக்கியமாக கருதவேண்டும். மின் வாகனங்களின் பேட்டரிகளுக்கு லித்தியம், கோபால் முக்கியமான பொருட்கள்.அதிகளவில் பயன்படுத்தும்போது இவற்றையும் மறுசுழற்சி செய்வது பற்றி திட்டமிடுதல் தேவை. ஆய்வுகள் ஒருபக்கம் இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்தும்போதுதான் வெளியாகும் கழிவுகள், அதன் பாதிப்புகளை ஆகியவற்றை அடையாளம் காணமுடியும்.
மூலம்
Down to earth
curb your consumption
bg desai
down to earth 1-15 dec 2021
-------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக