இடுகைகள்

தனியார் மயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் தத்துவம்

படம்
அரசு வியாபாரம் செய்யக்கூடாது என்பது எங்கள் கொள்கை! இந்திய அரசு பொதுத்துறைகளில் முதலீடு செய்வதைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை முதலில் அமல்படுத்த உள்ளது பெட்ரோலியத்துறையில்தான். இத்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை சந்தித்து இதுபற்றி பேசினோம். பெட்ரோலியத்துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பின் எதற்கு அதனை விற்க நினைக்கிறீர்கள்? இந்திய அரசு எந்த வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட விரும்பவில்லை. எங்கள் பிரதமர் இதனை சுலோகனாக சொல்லவில்லை. வழிகாட்டுதல் நெறிமுறையாக வைத்திருக்கிறார். இதுவே பாஜக கட்சியின் தத்துவமும் கூட.  நாங்கள் இதை நம்புகிறோம். இந்நாட்டிலுள்ள எளிம மனிதனுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேரவேண்டுமே? நிறுவனத்தை அரசு நடத்தினால் என்ன, தனியார் நடத்தினால் என்ன? மக்களுக்கு நன்மை கிடைப்பதுதானே முக்கியம். நாங்கள் இந்த விற்பனையை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் நடத்த உள்ளோம். அரசுக்கு அதிக வருவாய் தரும் துறை எண்ணெய் துறை. அதிலிருந்து அரசு தன் பங்கை விலக்கிக் கொள்வது ஏன்? அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகள