இடுகைகள்

சினிமா - கிளாசிக் ஹிட்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்தம் உறையவைக்கும் அமானுஷ்ய படங்கள்!

படம்
எல்லாம் பயம்! The Changeling' (1980) அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழும் இசையமைப்பாளர் ஜான் ரஸ்ஸல் தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது ஏற்படும் விபத்தில் மனைவி, மகன்களை பறிகொடுக்கிறார். நினைவுகள் துரத்த சியாட்டிலுள்ள வீட்டில் தங்க அங்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களே கதை. சிறந்த திரைக்கதைக்கான விருதுபெற்ற படம். Halloween (1978) இலினாய்ஸைச் சேர்ந்த ஆறுவயது மைக்கேல் மையர்ஸ் பதினேழு வயது அக்காவை வன்மத்துடன் குத்திக்கொல்கிறார். 15 ஆண்டு சிறைதண்டனை முடியும் முன்பே சிறையிலிருந்து தப்பும் 21 வயது மைக்கேல் திரும்ப கொலைக்கணக்கை விட்ட இடத்திலிருந்து தொடர்வதே வெற்றிப்படத்தின் கதை. வசூல் 3 லட்சம் டாலர்களுக்கும் அதிகம். The Exorcist (1973) எழுத்தாளர் வில்லியம் பீட்டர் பிலாட்டியின் நாவலைத் தழுவி உருவான படம், நடிகையின் மகளுக்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களை பேசி மக்களை பயத்தில் உறைய வைத்து வசூல்மழை பொழிந்தது. இதோடு ரிச்சர்ட் டானரின் தி ஓமன்(1976),ஸ்டான்லி குப்ரிக்கின் தி ஷைனிங்(1980), மனோஜ் நைட் சியாமளனின் சிக்ஸ்த் சென்ஸ்(1999) ஆகிய படங்களும் மறக்க

எவர்க்ரீன் ஹிட்ஸ்! - சீக்குவல் படங்கள்!

படம்
ஆல்டைம் ஹிட்! Mad Max ஆஸ்திரேலிய இயக்குநர் ஜார்ஜ் மில்லர் 1979 ஆம் ஆண்டு இயக்கு மேட் மேக்ஸ் படவரிசையில் இதுவரை 4 படங்கள் வெளியாகியுள்ளன. மெல்கிப்ஷன் நடிப்பில் இருபடங்களும்(1981-85) வெளியாகி வெற்றிகண்டது. பின்னர் டாம் ஹார்டி, சார்லிஸ் தெரோன் அதகள நடிப்பிலும், நம்ப முடியாத சிஜியிலும் வெளியாகி 6 அகாடமி விருதுகளை இத்திரைப்படம் வென்றது. Indiana Jones 1981 ஆம் ஆண்டு தொடங்கி திரைப்பட ரசிகர்களை கட்டிப்போட்ட சாகச திரைப்பட வரிசையை(4) ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும், ஜார்ஜ் லூகாஸும் உருவாக்கினர். தொல்பொருள் ஆராய்ச்சியாளராக ஹாரிசன் போர்டின் எதார்த்த நடிப்பும் கணிக்கமுடியாத திருப்பங்களும் படத்திற்கு பலம். 2008 ஆம் ஆண்டு ரிலீசான படம் மட்டுமே சுமார் விமர்சனங்களைப் பெற்றது. Harry Potter எழுத்தாளர் ஜே.கே.ரோலிங்கின் நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட பத்து ஹாரிபாட்டர் படங்களில்(2001-2011) எட்டு படங்களின் வசூல் 7.7 பில்லியன் டாலர்கள். இதனை அடியொற்றி ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.