ரத்தம் உறையவைக்கும் அமானுஷ்ய படங்கள்!
எல்லாம் பயம்!
அமெரிக்காவின் நியூயார்க்கில்
வாழும் இசையமைப்பாளர் ஜான் ரஸ்ஸல் தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது ஏற்படும்
விபத்தில் மனைவி, மகன்களை பறிகொடுக்கிறார். நினைவுகள் துரத்த சியாட்டிலுள்ள வீட்டில்
தங்க அங்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களே கதை. சிறந்த திரைக்கதைக்கான விருதுபெற்ற படம்.
இலினாய்ஸைச் சேர்ந்த ஆறுவயது மைக்கேல்
மையர்ஸ் பதினேழு வயது அக்காவை வன்மத்துடன் குத்திக்கொல்கிறார். 15 ஆண்டு சிறைதண்டனை
முடியும் முன்பே சிறையிலிருந்து தப்பும் 21 வயது மைக்கேல் திரும்ப கொலைக்கணக்கை விட்ட
இடத்திலிருந்து தொடர்வதே வெற்றிப்படத்தின் கதை. வசூல் 3 லட்சம் டாலர்களுக்கும் அதிகம்.
எழுத்தாளர் வில்லியம் பீட்டர்
பிலாட்டியின் நாவலைத் தழுவி உருவான படம், நடிகையின் மகளுக்கு ஏற்படும் அமானுஷ்ய அனுபவங்களை
பேசி மக்களை பயத்தில் உறைய வைத்து வசூல்மழை பொழிந்தது.
இதோடு ரிச்சர்ட் டானரின் தி ஓமன்(1976),ஸ்டான்லி
குப்ரிக்கின் தி ஷைனிங்(1980), மனோஜ் நைட் சியாமளனின் சிக்ஸ்த் சென்ஸ்(1999) ஆகிய படங்களும்
மறக்கமுடியாத பயத்தை ஏற்படுத்திய கிளாசிக் அமானுஷ்ய உளவியல் படங்கள்.