அகதி கார்ட்டூனிஸ்ட்டின் அலறல்!





Image result for eaten fish cartoon

அகதி கார்ட்டூனிஸ்ட்!

2013 ஆம் ஆண்டில் ஆஸி.யின் கிறிஸ்துமஸ் தீவில் அடைக்கலம் தேடிய அலி டொரானியை அரசு, மனுஸ் தீவுக்கு மாற்றியது. பப்புவா நியூகினியாவில் நான்கு ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வாழ்ந்துவருபவர் ஓசிடி மனநல பிரச்னையில் சிக்கினாலும் தன் பிரச்னைகளை கார்ட்டூன்களாக வரைந்து புகழ்பெற்றுள்ளார். ஈட்டன் ஃபிஷ் என்ற பெயரில் அலி வரையும் படங்கள் 2013 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகி வருகின்றன.
கார்ட்டூன்கள் அலியை புகழ்பெறச்செய்தன; அதோடு மக்களை நாட்டிற்குள் அனுமதிக்காமல் முகாமில் வாழவைக்கும் ஆஸி.யின் தந்திரத்தை உலகிற்கு பட்டென சொல்லிய நறுக் படங்கள் கண்டனங்களை பெற்றுத்தந்தன.

 2016 ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட் ரைட்ஸ் நெட்வொர்க அமைப்பு துணிச்சலான கார்ட்டூனிஸ்ட் விருதை அலிக்கு வழங்கி கௌரவித்தது. காரணம், உலகப்போர்கால மக்களின் நிலைமையை அலியின் படங்கள் விவரிக்கின்றன என்பதால்தான். ஆஸி. அரசின் முகாமிலிருந்து வெளியேறிய அலி, தற்போது நார்வேயில் வசிக்கிறார். “முகாமில் நான் உயிருடன் இருந்ததற்கு காரணம், கலைதான். மனநலனை மேம்படுத்த உதவவில்லை என்றாலும் என்னை உளவியல் பிரச்னையிலிருந்து மீட்க கார்ட்டூன்களே உதவின” என்பவர் நார்வேயில் ஓவிய ஆசிரியராக உள்ளார்.


பிரபலமான இடுகைகள்