மோடிக்கு எது பலம்? பிளஸ் மைனஸ் பிளஸ் 2
பிளஸ் மைனஸ் பிளஸ்!
ஆயுஷ்மான் பாரத், கிராமப்புற வீடு வழங்கும் திட்டம் ஆகியவை மோடியின் பெயர் சொல்லும் திட்டங்கள். ஆயுஷ்மான் பாரத்தில் பத்து கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவப்பாதுகாப்பு உண்டு.
கடந்த 4 ஆண்டுகளில் 1.24 கோடி வீடுகள் கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன.
சௌபாக்யா திட்டத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மின்சார வசதி என்ற லட்சியத்தில் செயல்பட்டு வருகிறது. டிச.31, 2018 என்பது இதன் டெட்லைன்.
முத்ரா கடனில் வாராக்கடன் விவகாரத்தை மறந்துவிட்டு பார்க்கலாம். பனிரெண்டு கோடி மக்களுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பயன்பெற்ற 75% பெண்களில் 55 சதவிகிதம் பேர் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக 18% பேர் எஸ்சி, 5% பேர் எஸ்டி என பயன்படுத்தியுள்ளனர்.
இந்து மக்களுக்கான அரசு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது மோடியின் வெற்றி ரகசியம்.
4.87 கோடிப்பேர் ஃபாசல் பீமா யோஜனா எனும் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். ஜன்தன் யோஜனா எனும் ஜீரோ இருப்புத்தொகை கணக்கை 31 கோடிப் பேர் தொடங்கி 7,200 ரூபாய் சேமித்துள்ளனர்.
ஜெயித்தது முதல் தற்போதுவரை பாஜக மற்றும் அரசின் முகமாக மோடி மட்டுமே உள்ளார். அவரின் கவர்ச்சியே வெற்றி சீக்ரெட். மற்றபடி பிறரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதகம்.