துயரத்தின் நிழலில்: இந்தியா - பாக். பிரிவினை


டிஜிட்டல் ரத்தசரித்திரம்! - .அன்பரசு




Image result for 1947 partition



வரலாற்று சம்பவங்களை நூலாக பதிவு செய்வதை வரவேற்கலாம் என்றாலும் அதனை சுட்டியின் ஒரு க்ளிக்கில் அணுக முடியாது என்பது டிஜிட்டல் காலத்தில் குறைதானே? 1947 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த இந்து, முஸ்லீம் என இரு தரப்பினருக்கும் நடந்த வன்முறைக் கலவரங்களின் ரத்த ஈரத்தை சதத் ஹசன் மண்டோ, குஷ்வந்த்சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் நூல்களில் வேதனையும் கண்ணீருமாக எதார்த்தமாக பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து விஷயங்களையும் ஒரே இடத்தில் தேடிப்பெற 1947 ஆர்ச்சீவ் என்ற தன்னார்வ அமைப்பு உதவுகிறது.

உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அதனை நேர்காணல், திரைப்படம், நூல்கள், ஆவணப்படம் வழியாக அறிய 1947partitionarchive.org எனும் இணையதளம் உதவுகிறது. இத்தகவல்தளத்தை 1947 ஆர்ச்சீவ் எனும் தன்னார்வ தொண்டுநிறுவனம் 2011 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. "இத்தளத்தில் பிரிவினை பற்றி மட்டுமல்ல பிரிவினைக்கு முன்னிருந்த இந்திய வாழ்க்கை குறித்த தகவல்களையும் மக்கள் வீடியோ, ஆடியோ, நேர்காணல் வடிவில் பதிவு செய்யலாம்" என்கிறார் இத்திட்டத்தின் இயக்குநரான குனிதாசிங் பல்லா.

Image result for 1947 partition




பிரிவினை பற்றிய தகவல்களை ஒன்றாக திரட்டுவதன் அவசியம் என்ன? விழிப்புணர்வுக்காகவே. கூடுதலாக, பிரிவினை தொடர்பான 1947 ஆர்ச்சீவ் தளத்திலுள்ள பல்வேறு வகை ஆவணங்களை ஆராய்ச்சி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு. வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை கடந்தாண்டில் இருந்தே பெறத்தொடங்கியுள்ளனர். தளத்தில் குறிப்பிட்ட தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் மேக கணிணியகம் வழியாக மேலும் தகவல்களை வழங்குவது இவர்களின் அர்ப்பணிப்புக்கு சான்று

2009 ஆம் ஆண்டு பஞ்சாபின் ஃபரித்கோட்டுக்கு வந்த குனிதாசிங், பாட்டியின் சகோதரர் ஹரவ்தார் சோதியின் நினைவுகளை சோனி கேமரா மூலம் பதிவு செய்தவர், அப்போது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இயற்பியலில் பிஹெச்டி படித்துக்கொண்டிருந்தார். "சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியா சென்றபோது கேமரா எடுத்துச்செல்ல மறந்த எனது தவறால் பாட்டியின் சகோதரர் ஹரவ்தாரின் நினைவுகளை சரியாக பதிவு செய்ய முடியாததோடு கூறப்படாத வரலாற்று நிகழ்வுகளோடு அவரும் இறந்துபோனார்" என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறார் குனிதாசிங். இந்நிகழ்வே பல்கலைக்கழக நண்பர்களின் உதவியைப் பெற்று இணையதளத்தை தொடங்க காரணமானது.

Image result for 1947 partition


தெற்காசியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் திரண்ட ரத்தமும், கண்ணீரும் கூக்குரலும் கொண்ட கதைகளின் எண்ணிக்கை 6 ஆயிரம்.  

இத்திட்டத்தில் இணைந்து தன்னார்வலர்களாக பணிபுரிபவர்களுக்கு 1947 ஆர்ச்சீவ் அமைப்பு  கணிசமான உதவித்தொகையையும் வழங்குகிறது. ஆங்கிலம், உருது, இந்தி, குஜராத்தி, பெங்காலி, சிந்தி, காஷ்மீரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பிரிவினைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்து ஆவணங்களை பதிவு செய்ய இத்தளம் ஊக்குவிக்கிறது. அரசியல்வாதிகள் தன் நலனுக்காக வரலாற்றை மாற்றினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பொய் கூறாது என்பதை பிரிவினைக்கதைகள் உணர்த்தியுள்ளன.

Image result for 1947 partition

நினைவுகளின் சேமிப்பு!

12 நாடுகளிலுள்ள 600 நகரங்களில் பெறப்பட்ட பிரிவினைக்கதைகளின் எண்ணிக்கை 6 ஆயிரம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உழைப்பில் சாத்தியமாகியுள்ளது. ஏடிஇ சந்திரா பவுண்டேஷன், அசோகா பல்கலைக்கழகம் அமெரிக்க- இந்தியன் பவுண்டேஷன் ஆகியவை இத்திட்டத்திற்கு நிதியுதவியை வழங்கியுள்ளன.   

நன்றி: பிஸினஸ் ஸ்டாண்டர்ட் 

 

  

    

பிரபலமான இடுகைகள்