ஜப்பானின் இருகுதிரை சவாரி!
ஜப்பானின் நட்பு!
அமெரிக்காவின் வரிவிதிப்பு அனைத்து
நாடுகளையும் அதனோடான உறவு குறித்து யோசிக்கவைத்திருக்க, ஜப்பான் அமெரிக்கா மற்றும்
சீனாவுடன் அரசுரீதியான உறவை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது.
ஜப்பானிய மக்கள் 11% சீன அதிபர் ஜிங்பிங்கையும், 24% பேர் அமெரிக்க அதிபர்
ட்ரம்பையும் நம்புவதாக Pew நிறுவன ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா – சீனா
அடித்துக்கொண்டாலும் இருநாடுகளையும் ஜப்பான் கரிசனத்தோடு அணுக 20% ஏற்றுமதி தொழில்
லாபம் இவ்விரு நாடுகளிலும் உள்ளது என்பதுதான் காரணம்.
ஷின்ஸோ அபே, பிறநாட்டு தலைவர்களை
விட அமெரிக்க அதிபர் ட்ரம்பை நம்பி அதிகமுறை சந்தித்திருக்கிறார். இதன்விளைவாக வர்த்தக
கழகம் பல்வேறு தொழில்துறைகளுக்கு வழங்கும் சலுகையை குறைக்க வற்புறுத்தியுள்ளார். இது
சீனாவுக்கு எதிரான முயற்சி என்பது அபேவுக்கு தெரியாததல்ல; அமெரிக்காவில் அலுமினியம்,
இரும்புக்கு எதிரான வரிவிதிப்புகளுக்கு பதில் கூறாத அபே, சீனாவுக்கு பல்வேறு நிறுவனங்களின்
பிரதிநிதிகளுடன் சென்றுள்ளார். ஆசிய அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் ஜப்பான்
இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் கணக்குகள் கணம்தோறும் மாறக்கூடியவைதானே?