சிறுதானிய சமையல் சாப்பிட ரெடியா?



சிறுதானியங்களை பிரபலப்படுத்திய சமையல் கலைஞர்கள்

அரிசி, கோதுமை ஆகிய பயிர்களை விட சிறுதானியங்களை பயிரிட 70  சதவிகித நீர் போதுமானது. ஆனாலும் இதனை பயிரிட விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது. உலகின் முன்னணி உணவு விடுதி சமையல் கலைஞர்கள் சிறுதானிய உணவுகளை சமைத்து பரிமாறி அதனை மீண்டும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.





Image result for Sri Ram, Ahaar Kuteer


Sri Ram, Ahaar Kuteer

ஹைதராபாத்தில் டெக் பணியாளராக பணிபுரிந்த ஸ்ரீராம், உணவு விடுதி தொடங்க திட்டமிட்டார். அதுவும் சிறுதானிய உணவகமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டார். விளைவு, ஆஹார் குட்டீர் பிறந்தது. காலை, மதியம், மாலை என அனைத்தும் சிறுதானிய வெரைட்டிகள்தான். 

Sabyasachi Gorai, Lavaash by Chef Saby

பிளாக் ஆலிவ் ரைசோட்டோ, கிரான்பெர்ரி லட்டு ஆகியவை இந்த உணவு விடுதியின் சிறப்பு. சபையாசாயி கோரய் தரமான ஆரோக்கிய உணவுகள் வழங்குவதில் சமரசமே செய்துகொள்ளாதவர். 

Prateek Sadhu, Masque

மும்பையின் மஸ்குயு உணவு விடுதியில் வித்தியாசமான மெனு அதன் ஸ்பெஷல். அதோடு உள்ளூர் உணவுவகைகளை சமைத்து மணக்க மணக்க பரிமாறுகிறார்கள். 

Surendra Gandharva and Manoj Prajapat, Millets of Mewar

உதய்பூரில் சிறுதானிய உணவுகளின் தனித்த அடையாளம்  இந்த உணவு விடுதி. உணவுகளோடு புத்தக அறிமுக கூட்டம், சொற்பொழிவுக்கான களம் என கலாசாரமாக உணவு விடுதி இயங்குவது ஆச்சரியம். 

Pierre Thiam, Pierre Thiam Catering

செங்கலீஸ் உணவு முறைகளை மெனுவாக்கி வயிறுடன் மனசுநிறையும்படி செய்து அனுப்புவது தியத்தின் பாணி. 










பிரபலமான இடுகைகள்