பாலியல்தளங்களை மூடுவது நன்மை தருமா?
பாலியல் தளங்களுக்கு பூட்டு!
இந்திய அரசு பாதுகாப்பு தொடர்பாக
காரணங்களுக்காக விரைவில் பாலியல் இணையதளங்களை தடை செய்யவுள்ளது.
உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் இதுதொடர்பான
வழக்கில் பாலியல் தளங்களை தடைசெய்ய செப்.28 அன்று உத்தரவிட்டுள்ளதை தொலைத்தொடர்பு அமைச்சகம்
விரைவில் நாடெங்கும் அமுல்படுத்தவுள்ளது.
30 இணையதளங்களைத் தவிர்த்து ஆபாச
வீடியோக்களை பதிவேற்றியுள்ள 827 செக்ஸ் இணையதளங்கள் இனி இந்தியாவில் தெரியாது. இதுதொடர்பான
சுற்றறிக்கையை தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து இணையசேவை நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக்கு சூழல் நிதி!
ஐ.நா சபை வெப்பநிலை உயர்வை தடுப்பதற்காக
ஒரு பில்லியன் டாலர்களை வளரும் நாடுகளுக்காக ஒதுக்கியுள்ளது.
பத்தொன்பது திட்டங்களின்
கீழ் இந்நிதியை வளரும் நாடுகளுக்கு ஐ.நா சபை வழங்கும். இதில் இந்தியாவின் பங்கு ரூ.4.34
கோடி
வெப்பநிலை உயர்வால் முதலில் பாதிக்கப்படுவது
கடல்புற மக்கள் என்பதால் அவர்களுக்கான திட்டங்களுக்கு இந்நிதி முதலில் ஒதுக்கப்பட்டு
செயல்பாடுகள் தொடங்கும்.
பஹ்ரைனின் மனாமா நகரில் நடந்த பசுமை சூழல் நிதி போர்டு கூட்டத்தில்
வளரும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் டாலர்களை ஒதுக்க முடிவாகியுள்ளது. ஐ.நாவின் மேம்பாட்டு
திட்டத்தில்(UNDP) 2030 ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை உயர்வை குறைப்பதோடு வறுமை, பட்டினிச்சாவுகளை
குறைக்கவும் அஜெண்டாவை ஐ.நா சபை உருவாக்கியுள்ளது. பசுமை போர்டு சூழல் மேம்பாட்டுக்கு
4 ஆயிரத்து 244 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
1.7 மில்லியன் மக்கள் பசுமை திட்டங்களின்
வழியாக பயன்பெறுவார்கள் யுஎன்டிபி அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. 3.5 மில்லியன் டன்
கார்பன் வெளியீட்டை அடுத்த 30 ஆண்டுகளுக்குள் தடுப்பது இத்திட்ட நோக்கம். ஒடிஷா, மகாராஷ்டிரா,
ஆந்திரா கடல்புறங்களை பாதுகாக்கும் திட்டங்களை இந்திய அரசு தயாரித்து வருகிறது.
பிஎஸ்-6 வாகனங்களை கேட்டு வாங்குங்கள்!
–- ரோனி
மாசுக்கட்டுப்பாட்டு நெருக்கடி
காரணமாக பிஎஸ்-4 தரம் கொண்ட வாகனங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 தேதிக்கு பிறகு விற்பனை
செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாகன தயாரிப்பாளர் சங்கத்தின்
மனு மீதான விசாரணை தீர்ப்பில் நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா
ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பிஎஸ் 4 வாகனங்களை 2020 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திற்கு பிறகு
விற்ககூடாது என கூறினர்.
“எரிபொருட்களை தூய்மையாக்கும்
தொழில்நுட்பத்தில் ரூ.28 ஆயிரம் கோடி முதலீட்டை எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன. எனவே
உடனே பிஎஸ்4 வாகனங்களை தடை செய்வது வாகனம் மற்றும் எண்ணெய் விற்பனையாளர்களுக்கு சிக்கலை
உண்டாக்கும்” என பெட்ரோலியத்துறை கூறியது.
இதற்கு எதிராக பிஎஸ் 4 தரம் கொண்ட வாகனங்களை தயாரிப்பதையும்
விற்பதையும் விரைவில் தடைசெய்யவேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் கோரியுள்ளது. “வருமானம்
குறைவதை மட்டுமே அரசு கணக்கில்கொள்கிறது. பாதிக்கப்படும் மக்களை அல்ல” என கவலைப்பட்டிருக்கிறார்
உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த அபராஜிதா சிங். எரிபொருட்களை மேம்படுத்தவும்,
வாகனங்களை புதிய விதிகளின்படி தயாரிக்க கூறுவதும் அரசின் பாடு.