நீதிமன்றத்தை விட நாடாளுமன்றமே உயர்ந்த அமைப்பு


முத்தாரம் Mini


Image result for rakesh sinha



அயோத்தியாவில் ராமர்கோவில் கட்ட தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளீர்கள். இதனை விளக்குங்களேன்.

கோவிலை கட்ட 400 ஆண்டுகளாக முயற்சி நடைபெற்றுவருகிறது. இது புதியகோரிக்கை அல்ல. முகலாயர்கள், ஆங்கிலேயர்களின் வருவாய்த்துறை ஆவணங்களில் ராமர் பிறந்த இடம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 1872-2003 காலகட்ட ஆவணங்களில் கோவில் இருந்ததும், அழிக்கப்பட்ட விவரங்கள் உள்ளன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக சொல்லிவருகிறதே?

ராமர்  கோவிலை கட்டும் லட்சியத்தில் பாஜக பின்வாங்கவில்லை. அதன் நிலைப்பாடு மாறினாலும் அதன் பொறுப்பு நீர்த்துப்போகவில்லை.

ராமர்கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது தனிநபர் மசோதா எதற்கு? இது கோர்ட்டை அவமதிப்பதாகாதா?

நாடாளுமன்றம் நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய அதிகார மையம். 1950 ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையை ஒழித்தபோது கூட சரியான முடிவை நாடாளுமன்றம் எடுத்தது. தனிநபர் மசோதா கொண்டு வந்தது கோர்ட் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதோ, அவமதிப்பதோ ஆகாது. கோர்ட் தீர்ப்பை கட்சிகள் மீறப்போவதில்லை. இவ்விஷயத்தில் அவர்களின் பார்வை முக்கியம்.

-ராகேஷ் சின்கா, நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரபலமான இடுகைகள்