தொழிலதிபர்களை மிரட்டும் வரி!
தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...