இடுகைகள்

முத்தாரம் - உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக நாடுகளுக்கு ரஷ்யா என்ன செய்தது?

படம்
ரஷ்யாவே வெளியேறு ! அமெரிக்கா தன் நாட்டிலுள்ள அறுபது ரஷ்ய அதிகாரிகளுக்கு தம் குடும்பத்துடன் ஆறுநாட்களில் வெளியேற கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது . ஐரோப்பியாவைச் சேர்ந்த பதினெட்டு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய அதிகாரிகள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது . ஏன் ? இங்கிலாந்திலுள்ள தன் முன்னாள் உளவாளிக்கு நச்சு கொடுத்த பிரச்னையால் . இதில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்தான் நோவிசோக் . நான்காம் தலைமுறை வேதிப்பொருளான நோவிசோக் (Novichok) கை சோவியத் யூனியன் கண்டுபிடித்தது . ஆர்கனோபாஸ்பேட் எனும் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வேதிப்பொருள் உரவகைகளில் பயன்படுகிறது . உடலுக்குள் நோவிசோக் உணவு வழியாக அல்லது வாயு வடிவில் உள்ளே செல்லும்போது நரம்பு மண்டலத்தின் என்ஸைம்களிலுள்ள புரதத்தை பாதிக்கிறது . இதனால் உடல் உறுப்புகளுக்கும் மூளைக்கும் உள்ள தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு மரணம் நேருகிறது . தற்போது இந்த நச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உளவாளி செர்ஜெல் கிரிபால் வாயில் வெண்ணிற நுரை வெளியேறி வருகிறது . அவரது மகள் யூலியாவின் கண்கள் வெள்ளை நிறமாக மாறிவிட்டன . தற்போது உலக

இம்மானுவேல் மேக்ரானின் நட்பதிகாரம்!

படம்
இம்மானுவேல் மேக்ரானின் நட்பதிகாரம் !    கடந்தாண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வலதுசாரி போட்டியாளர் மரைன் லெபெனை தோற்கடித்து நாற்பது வயதில் அதிபர் பதவியை எட்டிப்பிடித்து சாதித்தார் இம்மானுவேல் மேக்ரான் . பதவியேற்று ஓராண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எட்டிப்பார்க்கும் முதல் டூர் இது .   இந்தியாவுக்கும பிரான்சிற்குமான உறவு 1998 ஆம் ஆண்டிலிருந்து வலுப்பெற்று வருகிறது . அந்த ஆண்டில்தான் வாஜ்பாய் தலைமையிலான அரசு பொக்ரான் -2 அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தியது . உடனே பல்வேறு வல்லரசு நாடுகளும் ஐ . நாவில் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஆவேசமாக களமிறங்கின . அப்போது மேற்கத்திய நாடான பிரான்ஸ் மட்டுமே இந்தியாவிற்கு எதிராக கையெழுத்திட மறுத்தது . அன்றிலிருந்து இன்றுவரை அணுஆயுத உறுப்பினர் நாடாக , ஐ . நா . பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவது உள்ளிட்ட பல்வேறு உலகளவிலான அமைப்புகளில் இடம்பெற உதவி செய்வது வரையில் இந்தியாவிற்கு அநேக உதவிகளை செய்துவரும் பிரான்சிற்குமான அரசுரீதியிலான நட்பின் வயது 20.  2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா - இந்தியா அணுஆயுத ஒப்பந்தம் ஏற்படும்வரை