இடுகைகள்

வெப்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன மரத்தின் எமோஜி!

படம்
      இறந்துபோன மரத்தின் எமோஜி! இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும...

சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்க சன்ஸ்க்ரீன் மாத்திரைகள்!

படம்
        சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் இறந்தும் வருகிறார்கள். இதற்கு என்ன செய்வது? சூரிய கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் க்ரீம்களை வாங்கி தடவலாம். சந்தையில் க்ரீம், லோஷன் என நிறைய விற்கிறது. இப்போது சூரியவெப்பத்திலிருந்து ஒருவரைக் காக்க மாத்திரைகள் கூட வந்துவிட்டது. இந்த மாத்திரைகளை அமெரிக்காவின் ஃஎப்டிஏ அங்கீகரிக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அங்கீகாரம் எல்லாம் தேவையில்லை. இனாம் கொடுத்தால் கிடைத்துவிடும். தடை செய்தால் கூட மாத்திரைகளை வாங்கிக்கொள்ள முடியும் வசதி, நம் தாய்நாட்டில் எப்போதும் உண்டு. மாத்திரை வசதிகளைப் பார்ப்போம். மாத்திரை ஆய்வில் இருக்கிறது. ஆன்டிஆக்சிடன்டுகளான பாலிபோடியம் லியுகாடமோஸ், பீட்டாகரோட்டின், அஸ்டாசாந்தின் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கின்றன. தோலுக்கு பாதுகாப்பு தரும் மெலனின் நிறமிகளை ஊக்கப்படுத்தும் பகுதிப்பொருட்களும் உள்ளன. க்ரீம்களில் ஜிங்க் ஆக்சைடு, டைட்டானியம் டையாக்சைடு ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை மாத்திரைகளை விட பயன்தரக்கூடியவ...

காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க.....

படம்
              காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கோணுங்க..... மிளகாயின் காரம், உடலில் வெப்பத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட மக்கள் அதை உணவில் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக காரம் கொண்ட சிவப்பு மிளகாய், சீனி மிளகாய் என எந்த ரகம் வந்தாலும் அதில் தூள் வாங்கி அல்லது நேரடியாகவே வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த காரசார மோகம்? அண்மையில், டென்மார்க் நாட்டின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தென்கொரிய நாட்டின் மூன்று வகை நூடுல்ஸ் வகைகளை விஷத்தன்மை கொண்டதாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம், அந்த மூன்று வகை நூடுல்ஸ்களுமே அதீத காரச்சுவையைக் கொண்டவை. குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் வகைகளை உண்ணக்கொடுப்பது ஆபத்து. இதில் காப்சைசின் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதுவே காரத்தன்மையை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.  தெற்கு, மத்திய அமெரிக்காவிலிருந்து மிளகாய் செடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், கிறிஸ்டோபர் கொலம்பஸ். இவர் மூலமே காப்சிகம் என்ற அறிவியல் பெயர் கொண்ட மிளகாய், சந்தையில் இருக்கிறது. நம் உணவிலும் காரச...

காட்டுத்தீக்கு காரணம் என்ன?

படம்
  காட்டுத்தீக்கு காரணம் என்ன? அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது. காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது.  இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது....

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச...

2053ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பங்கள்! - போன், கார், உயிர் பிழைக்கும் தொழில்நுட்பம், டிவி

படம்
  2053ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் போன் உங்கள் கையில் உள்ள போனைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது? இதில் செய்யவேண்டிய அனைத்தையும் 99 சதவீதம் செய்துவிட்டோம் என்றுதானே? இதுபற்றி ஆராய்ச்சியாளர் நீல் ஷா, எதிர்காலத்தில் போன் என்பது ஹெட்செட்டாக காதில் அல்லது மூளையில் பொருத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார். வீடு, அலுவலகம், சாலை என பல்வேறு டிஜிட்டல் கருவிகளோடு இணைந்திருக்கும். இதனால் அடுத்தடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை போன் அறிந்து இருக்கும். போன் என்பது குறிப்பிட்ட நீள அகலத்தில் திரை கொண்டதாக இருக்காது. போனுக்கான சர்க்கியூட் போர்ட்டைக் கூட நீரில் கரையும் தன்மை கொண்டதாக தயாரிக்க வாய்ப்புள்ளது. சோபி சராரா டிவி இன்று டிவி சேனலின் இடத்தை இணையம் எடுத்துக்கொண்டுவிட்டது. ஆனால் டிவி என்பது வீட்டில் ஹாலில் வைத்திருப்பது என்பதைக் கடந்ததாக மாறிவிட்டது. உள்ளங்கை அளவு கொண்டதாக போனை மடித்துவைத்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் காரில் உள்ள திரைகளை டிவியாக கருதலாம். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை, ஜெஃப் பெஜோசிஸின் ப்ளூஒரிஜினல்ஸ் டிவி சேவை ஆகியவை எதிர்காலத்தில்...

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார...

இருபது ஆண்டுகள் கிரையோஜெனிக் கேப்சூலில் வைக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வந்தால்... மெல்டிங் மீ சாஃப்ட்லி

படம்
  31.5 டிகிரி தாண்டினால் ஆபத்து  மெல்டிங் மீ சாஃப்ட்லி - கே டிராமா மெல்டிங் மீ சாஃப்ட்லி கொரிய டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   டிபிஓ என்ற டிவி சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிப் பிரிவில் மா டோங் சான் என்ற இளைஞர் வேலை செய்கிறார். புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இவர் கிரையோஜெனிக் மூலம் தன்னை 24 மணிநேரம் உறைய வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார். அதை டிவியில் ஒளிபரப்புவதுதான் பிளான்.   இவருடன் ஓ மிரான் என்ற இளம்பெண்ணும் காசு கிடைக்குமென பரிசோதனைக்கு சம்மதிக்கிறாரர். ஆனால், இந்த சோதனை துரதிர்ஷ்டவசமாக 20 ஆண்டுகள் வரை நீண்டுவிடுகிற்றது. 1999 தொடங்கி 2019இல் தான் இருவரும் கண் விழிக்கிறார்கள். டிவி தொடர் அவர்களது வாழ்க்கை, கொடுத்த வாக்குறுதி, குடும்பத்தினரின நிலை என பல்வேறு விஷயங்களை உணர்வுப்பூர்வமாக பேசுகிறது. கிரையோஜெனிக் அறிவியல் சோதனை, அதை முடக்கும் சர்வதேச சதிகள் என கதை சென்று சற்று ஆவலை ஏற்படுத்துகிறது. ஆனால், கதை திடீரென யூ டர்ன் போட்டு திரும்பி காதல் என்ற பைபாஸ் சாலைக்கு மாறி தேங்கி விடுகிறது. அதிலும், எந்தளவு ஆழமாக...

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில க...

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்...

கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

படம்
  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம் கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்ப...

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட...

காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!

படம்
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை. அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது பிரச்னைகள் தொடங்குகின்றன. வளிமண்டலத்திற்ள் ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை. காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம் கொண்டவை. வெப்பமோ வெப்பம் வெப்பம் அதிகமாகிக்கொண்டே செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்...