இடுகைகள்

ஜெசிந்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாகத்திறன் கொண்ட பெண்மணிகள்! - ஜெசிந்தா ஆர்டெர்ன், கமலா ஹாரிஸ், ட்சாய் இங்க் வென், செலிஸ்டா பார்பர்

படம்
              சிறந்த பெண்மணிகள் ஜெசிண்டா ஆர்டெர்ன் பிரதமர் (2017 முதல் ), நியூசிலாந்து இவரையும் அந்நாட்டின் இளமையான பிரதமர் என்று கூறப்போவதில்லை . அதைத்தாண்டிய பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டவராக ஜெசிந்தா இருக்கிறார் . மக்களின் மீதான கருணை , நம்பிக்கை , சகிப்புத்தன்மை , பிற கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளுதல் என பல்வேறு குணங்களைக் கொண்ட அரசியல் தலைவராக இருக்கிறார் . இவரை உலகம் அடையாளம் கண்டுகொண்டது உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனில்தான் . கோவிட் 19 பிரச்னையில் ஜெசிந்தா எடுத்து உறுதியான விதிகள் , நடைமுறைப்படுத்திய கட்டுப்பாடுகள் , காட்டிய வேகத்தை ஊடகங்கள் மறக்கவே முடியாது . கிறிஸ்ட்சர்ச் விவகாரத்தில் ஜெசிந்தா பிற மதத்தினர் மீது காட்டிய நேசமும் , அக்கறையும் அரசியல் தாண்டியவை . மதவெறியை தூண்டும் பிரிவினைகள் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியவை . இப்படி நாம் சொன்னாலும் இவரிடமும் சில பிழைகள் உண்டு . மக்கள் அனைவருக்குமான வீடுகளை குறைந்த விலையில் கிடைக்கச்செய்வதில் தவறியது . குழந்தைகள் வறுமையில் தவிப்பதை தடுக்க முயற்சிகள் செய்யவில்லை என்று விமர்சனங்கள் வந்து