இடுகைகள்

தியானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிழக்கத்திய ஞானத்தை உளவியலுக்கு கொண்டு சென்று ஆராய்ந்த உளவியலாளர் ஜோன் கபாட்ஸின்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் கிழகத்திய ஆன்மிக கருத்துகளை, பாடல்களை இலக்கியங்களை நாடத் தொடங்கின. இந்த வகையில் பௌத்த மதத்தின் தியானம், உடற்பயிற்சிகளை வெளிநாட்டினர் ஆராயத் தொடங்கினர். அப்போது பெரிதாக அதன் ஆய்வுப்பூர்வ நிரூபணத்தை கூற முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதன் பலன்களை அடையாளம் கண்டு கொண்டனர்.  அமெரிக்க உயிரியலாளர், உளவியலாளரான ஜோன் கபாட்ஸின் என்பவர், மைண்ட்ஃபுல்னஸ் என்ற மன அழுத்தம் குறைக்கும் முறையை உருவாக்கினார். இதில் தியானம் முக்கியமான பங்கு வகித்தது.  ஒருவர் கூறும் கருத்துகளை, செய்யும் செயல்களை முன்முடிவுகள் இன்றி அதை ஏற்பது, அந்த செயல்பாடுகளில் இருந்து தன்னை பிரித்து வைத்து இயங்குவது, மையமாக இன்றி தனித்த இருப்பது ஆகியவற்றை ஜோன் இதில் முக்கியமாக கருதினார். அதாவது, உடல் அப்படியே நிலையாக இருக்க மனம் என்ன சிந்திக்கிறது என்பதை கவனமாக பார்க்குமாறு சூழலை உருவாக்கினார். இந்த முறையில் சிந்தனைகளை எந்த கட்டுப்பாடும் செய்யாமல் அப்படியே உருவாக விடுவது, அதைப்பற்றிய எந்த முடிவும் கூறக்கூடாது.  நான் தோற்றுப்போனவன், வாழ்க்கை எனக்கு இல்லை என எந்த முடிவுக்கும் வராமல் நிகழும

டீ இசம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு

படம்
  டீ இசம் நூல், தேநீர் அருந்துவதில் உள்ள விழிப்புணர்வை பற்றி பேசுகிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அகாகுரா, மேற்கு நாட்டினருக்கு தேநீர் அருந்துவது பற்றிய கலாசாரத்தை பற்றி விளக்கிப் பேசுகிறார். ஜப்பான் நாட்டில் இன்று வரை டீ செரிமொனி முக்கியமானதாக கடைபிடிக்கப்படுகிறது.  தேநீர் அருந்துவதை ஜென், தாவோயிசம் ஆகிய மதங்கள் எப்படி வளர்த்தெடுத்தன என்பதை வரலாற்று கண்ணோட்டத்தில் சான்றுகளோடு அகாகுரா நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலை படித்தபிறகு நீங்கள் தேநீர் குடிப்பதை மனமார்ந்து விழிப்புணர்வோடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஜென், தாவோயிச மடாலயங்களில் தேநீர் அருந்துவது, முக்கியமான தியான சடங்குகளில் ஒன்று.  பத்திரிகையாளர் த. சக்திவேல் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம். அவரது நட்பு மற்றும் ஆதரவில்தான், நான் ஏராளமான தேநீர் கடைகளுக்கு சென்று பல்வேறு விதமான தேநீரை சுவைக்க முடிந்தது.  நூலை வாசிக்க க்ளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B0CHFJ22QQ

ஆன்மிக உள்ளொளி கொண்ட இந்தியா - நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ

படம்
  நான் நேசிக்கும் இந்தியா - ஓஷோ படம் - பனுவல் நான் நேசிக்கும் இந்தியா ஓஷோ கண்ணதாசன் பதிப்பகம் ரூ.75 பொதுவாக இந்தியா பற்றி மேற்குல ஆராய்ச்சியாளர்கள் சுற்றுலா பயணிகள் மனதில் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய கருத்துகள் தவறு என்று கூறி அதற்கான பல்வேறு தகவல்களை ஓஷோ முன்வைத்து பேசியுள்ள நூல்தான் நான் நேசிக்கும் இந்தியா.  இந்தியாவை ஒருவர் எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது என பல்வேறு விஷயங்களை  நூலில் எளிமையாக சொல்லிச் செல்கிறார். இதன் தன்மை நாம் ஊழல், ஒழுங்கின்மை, அழுக்கு என்று சொல்லும் தேசத்தின் அடிப்படை என்னவென்று புரிந்துகொள்ள உதவுகிறது.  இதில் நிறைய சிறு குறு கதைகள் உள்ளன. அவற்றில் சுவேதகேது பற்றிய கதை முக்கியமானது. கல்வி என்பது என்ன என்பதை இந்தியாவிலும் மேற்குலகிலும் வேறுமாதிரி பார்க்கின்றனர். எது கல்வி என்பதை அவர் குரு மூலம் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியை அறியும் இடம் அற்புதமானது.  இன்னொரு கதை பலரும் அறிந்ததுதான். அக்பரின் அவையில் இருந்த தான்சேன் என்ற இசைக்கலைஞரைப் பற்றியது. யாருடைய இசை உயர்ந்தது என்று பேசும்போது தான்சேன் எந்த ஆணவமுமில்லாமல், தனது குரு ஹரிதாசரின் இசைதான் உ

மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆப்கள்!

படம்
  போர்ட்டல் இயற்கையான அழகிய காட்சிகள் எப்போதும் மனதை ரிலாக்ஸ் செய்யும். அப்படி உலகம் முழுக்க உள்ள அனைத்து அழகான அருவி, மலைத்தொடர், புல்வெளி ஆகியவற்றை இந்த ஆப்பில் பார்த்து ரசிக்கலாம். பக்கத்தில் எரிச்சலூட்டும் நண்பர்களின் பேச்சிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்க முடியும்.  இந்த ஆப் ஆண்ட்ராய்ட் , ஆப்பிளிலும் இலவசமாக கிடைக்கிறது.  ஸ்மைலிங் மைண்ட் உங்கள் குடும்பமே மன அழுத்தத்தில் தவித்தாலும் இந்த ஆப், உங்களை அதிலிருந்து மீட்கும். தியானம் செய்வதற்கான ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அதைப் பயன்படுத்தி தினந்தோறும் ஆப்பை திறந்து வைத்து உழைத்தால் மன அமைதி கிடைக்க வாய்ப்புள்ளது.  பிக்மென்ட் தினத்தந்தி தங்க மலரில் வரும் வண்ணமடிக்கும் பகுதிதான். ஆனாலும் மன அழுத்தத்தை சிறப்பாக போக்குகிறது. ஆப்பை திறக்கிறீர்கள். பூசணி, பப்பாளி என இஷ்டம் போல பெயிண்டை சிதறடித்து வண்ணம் பூசலாம். மெல்ல கஷ்டங்கள் குறையும் வாய்ப்பிருக்கிறது.  டோகா லைப் வேர்ல்ட் இது ஒரு பொம்மை வீடு. இங்கு ஏராளமான கதை மாந்தர்கள் உண்டு. இங்குள்ள சில டாஸ்க்குகளை முடித்தால் சுவாரசியமாக பொழுது போக்கும். வீட்டையே இரண்டாக மாற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆ

மார்க்கெட்டுக்கு புதுசு ஜூன் 2019

படம்
மார்க்கெட்டுக்கு புதுசு BenQ GV1 projector வீட்டில் ரெட்மீ டிவி மாட்டுவதற்கு வாட்டமான இடம் இல்லை. ஆனால் சினிமா போன்ற எஃபக்ட் வேண்டும் என்ன  செய்வது? அப்போது பென்க்க்யூ ப்ராஜெக்டரை நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும்.  போனிலிருந்து இணைத்து தமிழ்ராக்கர்ஸ் வீடியோக்களையும் பிளே செய்து மகிழலாம். இதற்கு முக்கியத்தேவை சுவர்தான். அதனை மட்டும் அழுக்காக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். போதும். முக்கியமான இதிலுள்ள ஸ்பீக்கர் பாடாவதி என்பதால் நல்ல கம்பெனி ஸ்பீக்கர்களை வாங்கி இணைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.  Muse 2 meditation headband கண்களை மூடினாலே சொப்பனசுந்தரி கனவுகளுக்குள் மூழ்கி குறட்டை விடும் ஆட்களுக்கானதல்ல இந்த பேண்டு. இதனை ஸ்கூல் பிள்ளை போல நெற்றியில் மாட்டி காதில் அமுக்கி விட்டால் இந்த யோகா தினம் மட்டுமல்ல பிற நாட்களிலும் கூட தியானத்தில் மூழ்கலாம்.  பேண்டை காதில் மாட்டினால் எப்படி தியானம் வரும் என்றெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா தேச துரோக வழக்கு உங்கள் மீது பாயும். கம்பெனிக்காரங்க தூத்துக்குடி வழியாக ஷார்ட் ரூட் பிடித்து தியானம் உங்கள் மூளைக்குள் பாய வழி இரு

தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது? கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள்.  உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது.  பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது.  சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. இதன் பின்னர் விஷயங்