இடுகைகள்

ஈதன் ஹாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிச்சமிருக்கும் 24 மணிநேரத்தில் எதிரியை அழித்து, கடத்தப்பட்ட சிறுவனை மீட்க முடியுமா? 24 ஹவர்ஸ் லைவ்

படம்
              24 ஹவர்ஸ் லைவ் கூலிக்கு கொலை செய்யும் ஆள் , ஈதன் ஹாக் . மெல்ல தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வருபவருக்கு இன்டர்போல் ஆட்களிடம் உள்ள ஒருவரைக் கொல்ல உத்தரவு வருகிறது . தினசரி பத்து லட்சம் ரூபாய் என பேரம் பேசுகிறார்கள் . இதனால் சபலப்பட்டு ஒத்துக்கொள்ளும் ஈதன் இந்த முயற்சியில் சொதப்பல் செய்ய அ்வரின் உயிர் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொள்கிறது . எப்படி அந்த ஆபத்துகளை சமாளித்து வெளியே வருகிறார் . அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்று ரத்தம் தெறிக்க துப்பாக்கி முழங்க சொல்லியிருக்கிறார்கள் . ட்ராபிஸ் என்ற பெயர்தான் ஈதனுக்கு சூட்டியிருக்கிறார்கள் . அவரைத் தேடி வரும் ரகசிய படுகொலை அமைப்பின் ஆட்களை பாத்ரூமில் வைத்து காட்டு காட்டு என காட்டிவிட்டு வெளியே வரும்போது எதிரே மது அருந்துவதே வேறு யாருமல்ல உயிர்த்தோழன்தான் . அவன் கொடுக்கும் வேலையை காசுக்காக ஏற்கிறார் ட்ராபிஸ் . இதில் சொதப்பலானால் என்னாகும் என்பதை அவன் நண்பன் சொல்லுவதில்லை . படுகொலை அமைப்பின் முன்னாள் பணியாளரான டிராபிஸ் வேலை காரணமாகவே தனது மனைவி குழந்தையை பறிகொடுக்கிறார் . இதனால் அடிக்கடி அவர