இடுகைகள்

ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ