இடுகைகள்

கைலி ரெய்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருட