இடுகைகள்

அறிவியல் பிட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் பிட்ஸ்!

பிட்ஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐ.நாவின் வறுமை ஒழிப்பைச் சாதிக்க தனிநபருக்கு தலா 140 ரூபாய் தினசரி அரசு வழங்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பிற ஆசிய நாடுகளுக்கு இத்தொகை ஒரு டாலர் மதிப்பில் உள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 143 மில்லியன் மக்கள் பசி, பட்டினியில் கிடந்து உழல்கின்றனர். ஆஃப்கானிஸ்தான், சூடான், காங்கோ, நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் உணவு பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளன. 26 நாடுகள் சூழல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் 10 மில்லியன் மக்களும், உணவு பாதுகாப்பு பிரச்னையில் 23 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஹாம்ஸையர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அங்கு வாழ்ந்த 14 காட்டு தேனீக்கள் இனம் அழிந்துவிட்டது என கண்டறிந்துள்ளனர். கட்டடங்களில்  பசுமை தாவரங்களை வளர்த்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த போர்லாண்ட் பல்கலைக்கழகம் அறிக்கை அளித்துள்ளது.

கல்லீரல் என்ன செய்கிறது?

படம்
கல்லீரல் பிட்ஸ் நமது உடலிலுள்ள கல்லீரல் ரத்தத்தை சுத்திகரிக்கும் பணி உட்பட 500 க்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது. கல்லீரல் செயல்பாடின்றி மனிதர்களால் இரு நாட்கள் தாக்குபிடிக்க முடியும். மரபணுக்களை எடிட் செய்து கல்லீரல் தொடர்பான இரு நோய்களிலிருந்து தப்பிக்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு மது அருந்தி கல்லீரல் பாதிக்கப்பட்டு 37% பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 17 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர். நன்றி: க்வார்ட்ஸ்

தன் மேல் சந்தேகப்படுபவர்களுக்கு என்ன பெயர்?

படம்
பிட்ஸ் ! 1890 ஆம் ஆண்டு படிக்கத்தூண்டும் ஆராய்ச்சியற்ற வதந்தி தகவல்களை வெளியிடும் பத்திரிக்கை பணியை Yellow Journalism என்று குறிப்பிட்டனர் . அமெரிக்காவின் 1 சென்ட் நாணயத்தை வடிவமைத்தவர் , பெஞ்சமின் பிராங்ளின் . அதிலுள்ள ஃப்யூஜியோ என்ற வார்த்தைக்கு லத்தீனில் நான் பறக்கிறேன் என்று அர்த்தம் . ஸ்வீடனிலுள்ள சில பல்கலைக்கழகங்களில் இரவு பத்துமணிக்கு மாணவ , மாணவிகள் கோரஸாக கத்துகிறார்கள் . இதற்கு Flogsta Scream என்று பெயர் . மனஅழுத்தம் போக்க செய்யும் முயற்சியாம் இது . தன்மேல் சந்தேகம் கொண்டு எப்போதுமே அவநம்பிக்கையாகவே பேசுபவர்களை Nehaholics எனலாம் . கோகைன் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் மூளையின் நினைவுகள் மெல்ல அழியும் . நன்றி: முத்தாரம் தொகுப்பு: கோமாளிமேடை டீம்