இடுகைகள்

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் தொடர் ஆக்கம்:லாய்ட்டர் லூன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 4- தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
வாழ்க்கையில் நாம் பெரும்பகுதி அந்நியர்களாக அகதிகளாகவே வாழ்கிறோம் என்கிறீர்களா?       நாமாகவே அந்நியராக வாழ்கிறம் என்று கூறமுடியாவிட்டாலும், ஒருவகையில் இதற்கு ஆம் என்றே பதில் கூறவேண்டும். எ.கா: என்னை நான் கிரீசில் ஒரு அந்நியராகவே உணர்கிறேன். இது என் நாடில்லை என்ற நிலையும், எனக்கென வீடு இல்லாத நிலையும் இருக்க நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில்(டு மீட்டீயோரோஷமா டோ பெலர்கோவ், 91) மாஸ்ட்ரோயன்னி இதனை வார்த்தையில் கூறும்விதமாக, ‘‘எல்லைகளை கடந்தும் நாம் இன்னும் இங்கேயே இருக்கிறோம். எத்தனை எல்லைக்கோடுகளைக் கடந்தால் நம் வீடு சென்றடைவோம்? ’’ கூறியிருப்பார். உங்களது படங்களில் மக்கள் ஆறு ஒன்றினால் பிரிக்கப்படும்போது ஒவ்வொருவரும் எப்போதும் நாயகன் புறமே நிற்கிறார்களே?       எனது கடைசி மூன்று படங்களில் முக்கியமாக இடம் பெற்ற காட்சி என இதனைக் கூறலாம். குறிப்பிட்ட சூழ்நிலை ஒன்றில் உங்களை மேலும் மேலும் ஆழமாக உள்ள செலுத்திக்கொள்வதுதான் இதற்கு காரணமா? உணர்ச்சிகளை தடை செய்யப்பட்ட நாரையின் பாதை படத்தில் வெளிப்படுத்தும் மாஸ்ட்

தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
இத்திரைப்படம் கிரேக்கப்புனைவுகளை அடிப்படையாக அல்லது அதனைக் மென்மையாக கூறிச்செல்கிறதா?       எழுத்தாளர் மற்றும் கவிஞர் என வார்த்தைகளை உருவாக்கும் அதனோடு உறவு கொண்டிருக்கும் இவர்களையே படம் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. படத்தில் அலெக்ஸாண்டர் சிறுவனுக்கு கவிஞர் ஒருவரைப்பற்றிக் கூறுகிறார். அவர் கிரீசில் புகழ்பெற்ற ஒரு மனிதராவார். டையோனிஸியோஸ் சாலமோஸ் ஸ்கின்டோஸ் இல் பிறந்தவர். இத்தாலியில் வளர்ந்தவர். சில காலத்திற்கு பிறகு தன் கீரிக் அடையாளத்தை தேடுகிறார். இத்தாலியிலிருந்து திரும்பும்போது தனக்கு தெரியாத கிரீக் வார்த்தைகளை  மக்களிடம் வாங்குகிறார். 22 வயது ஆகும்போது தனது தாய்நாட்டிற்கு கிரீக்கில் கவிதைகள் எழுத முயல்கிறார். 1818 எனும் அக்காலகட்டத்தில் துருக்கியர்களுக்கு எதிரான புரட்சிப்போராட்டத்தில் தனது கவிதைகளின் வழியாக பங்கேற்க முடிவு செய்து, செயல்படும் அவரது ஆளுமையான நாட்டுப்பற்று கொண்ட காலப்பகுதி தொடங்குகிறது. சிறிய குறிப்பேட்டில் அவர் கேட்கும் வார்த்தைகளின் உலகத்தில் நுழைகிறார். இது தாந்தே – எஸ்க்யூ என்பவர்களின் சிந்தனையான கிரீஸ் மொழியை மறு இணைப்பு செய்த

தடைபடாத காலம்- முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
14 தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மை மற்றும் நாளும் ஜிடியன் பாச்மன் – 1997 ஆங்கில மூலம்: டான் ஃபைனாரு ஆண்டிற்கு ஒருமுறை நாம் சந்திக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாம் உரையாடலை பதிவு செய்து வருகிறோம். நவீன காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளாக எதனை கூறுவீர்கள்? தக்காளிச்செடி வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, தேனை அறுவடை செய்வது உள்ளிட்டவற்றை செய்யத்தெரியாத ஒருவரினால் படங்களை உருவாக்க முடியாது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தீர்கள். இன்று உங்களைப் பார்ப்பதை பத்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் நம்பிக்கை கொண்டவராக படப்பிடிப்பு அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தீர்கள்.  தனிப்பட்ட மனிதராக, இந்த 20 ஆண்டுகளில் என்ன மாதிரியான வளர்ச்சியை பெற்றிருக்கிறோம் என்று கூற முடியுமா?       மிகவும் உறுதியான கருத்துக்களைப் பற்றிப் பேசுவதற்கு சரியான நேரம் நீங்கள் படத்தினை முழுமையாக நிறைவு செய்து முடித்திருக்கிற காலம்தான். நீங்கள் உங்களது கருத்துகளை சரியான வடிவத்தில் உருப்பெறச்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பின் ஒரு பகுதியில் அதைப்பற்ற

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 3 - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
லெனினின் சிலையை சுமந்து செல்லும் ஊர்வலமானது உலகில் மதம் குறித்த பெரும் விஷயங்களைக் குறிக்கிறது. கம்யூனிச மதம் வீழ்ந்தது ஒருபுறமிருக்க, விவசாய குடியானவர்கள் லெனின் சிலையுடன் கம்பீரமாக ஆற்றைத்தாண்டி வருகிறார்கள் என்பது  ஒருபுறம் நிகழ்கிறது. விரக்தியுற்ற விவசாயிகள்  மதம் தேவை என்பதை அறிந்தும் ஆனால் அது எப்படி இருக்கவேண்டும் என்று அறியாது இருக்கிறார்களா?       மதம் குறித்த விஷயங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வளம் குன்றிய விவசாயிகளுக்கு எரிச் ப்ரோம் கூறுவது போல மாய உதவி என்று மதம் குறித்து கூறலாம். ஒரு சிறு கப்பலில் பெரிய சிலையை துண்டுகளாக்கி செல்லும் காட்சியை நானே கண்டும் இருக்கிறேன். சிறு படகு ஒன்று கரும்கடலில் ரோமானிய துறைமுகமான கான் ஸ்டன்னாவினை கடந்து செல்கிறது. பேரளவிலான அழகற்ற லெனினின் உடைத்து போடப்பட்டிருக்கிற சிலைத்துண்டுகளை பார்க்கும் ஒருவன் திகிலடைந்து போகிறான். அவனைப்பார்த்து தானாக தன் நெஞ்சருகே படகோட்டும் பெண் சிலுவைக்குறி போட்டுக்கொள்கிறாள். இது போன்ற நிகழ்வுகளில் சிலுவைக்குறி போட்டுக்கொள்வது இயல்பானதாகவே உள்ளது. உங்களது அண்மைய படங்களில் நிகழ்காலத்தி

மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 2: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
ப்ளோரினா பகுதி வரும் படத்தின் முன்பகுதி நம்பகத்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. குறிப்பிட்ட பகுதியின் தேவாலய ஆயர் தங்கி இருக்கும் அவர் தன் முழு செல்வாக்கைப் பயன்படுத்தி நாரையின் தடுக்கப்பட்ட பாதை படத்தினை திரையிடுவதை தடுக்க முயற்சிக்கிறார். படம் எடுக்கும்போது பொருட்படுத்த வேண்டியதல்லாத ஒரு நிகழ்வு அதற்கு காரணமாகிறது. மேம்பாடு தேவைப்படும் திரையரங்கு ஒன்றில் படத்திரையிடல் நடைபெறுகிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கிறார்கள். காட்சி ஒன்றில் தேவாலய மணி ஒலிக்கும் ஒலி அவர்களை தொந்தரவு செய்ய அதனை கவனிக்கிறார்கள். கிரீஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் திரையிடுதலை ஊக்குவிப்பது போல இதிலும் நீங்கள் கலந்து கொண்டு உள்ளீர்கள். ஒரு திரைப்பட இயக்குநருக்கு அடிப்படையாகவே வணிகரீதியான அம்சங்களில் இன்றைய காலகட்ட சினிமா தேவைகளுக்காக தனிப்பட்ட ஆர்வம் தேவைப்படுகிறதா?       முதலில், திரைப்படங்களுக்கான பிரச்சனைகள் மற்றும் உண்மையிலே அவற்றினை எதுவென அடையாளம் கண்டிருக்கிறோம். பல்வேறு ஆண்டுகளாக நான் பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், சந்திப்புகள் போன்றவற்றில் நவீன சினிமாவின் சிதைவுக

தேசியக்கலாச்சாரம் தனிப்பட்ட பார்வை நிறைவுப்பகுதி -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்

படம்
குறியீடுகளின் மரபு குறித்த பகுதி பல குறியீடுகள் ஒன்றிணைந்ததாக உள்ளது. தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்வு போல ஒன்றிணைந்ததாகவே அது உள்ளது. ஐன்ஸ்டீன் சிந்திப்பது போல உலக சினிமா சிந்திக்கிறது என அப்படங்கள் மீதான ஈர்ப்பை நாம் கூறுகிறோம். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும்  ஒத்தமைவு தொகுப்பு குறித்தவற்றை கிரிபித்திடமிருந்து பெற்றிருக்கிறோம். மான்டேஜ் – இடைவெட்டில்லாத தொடர்ச்சியான காட்சி என்பதை நான் காட்சிக்குள் இருக்கும் ஒன்றாகவே காண்கிறேன் இது ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கிறது.       என்னுடைய படங்களில் தொடர்ச்சியான காட்சி என்பது உயிர்ப்பாக இருப்பதை அதனை வெட்டுவது என்பதோடு தொடர்புடையதல்ல. இயக்கத்தோடு தொடர்புடையது ஆகும்.  தொடர்ச்சியான காட்சி என்பது படமாக்கப்படும் காட்சிகளில் உள்ள நேரம் இயக்கம் அதோடு இடைவெளியும் தொடர்புடையனவாகும். இயக்கம் மற்றும் இசை என இரண்டிற்கும் இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.  முழுமையான விளைவு என்பதை ஏற்படுத்தும் வகையில் அவை முக்கியமானவை ஆகும். என்னுடைய படத்தின் காட்சிகள் முழுமையடைந்தனவாக உள்ளன. அவற்றின