மனிதர்களின் அனுபவ ஒன்றிணைவு 2: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்







ப்ளோரினா பகுதி வரும் படத்தின் முன்பகுதி நம்பகத்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. குறிப்பிட்ட பகுதியின் தேவாலய ஆயர் தங்கி இருக்கும் அவர் தன் முழு செல்வாக்கைப் பயன்படுத்தி நாரையின் தடுக்கப்பட்ட பாதை படத்தினை திரையிடுவதை தடுக்க முயற்சிக்கிறார். படம் எடுக்கும்போது பொருட்படுத்த வேண்டியதல்லாத ஒரு நிகழ்வு அதற்கு காரணமாகிறது. மேம்பாடு தேவைப்படும் திரையரங்கு ஒன்றில் படத்திரையிடல் நடைபெறுகிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் வெளியேதான் நிற்கிறார்கள். காட்சி ஒன்றில் தேவாலய மணி ஒலிக்கும் ஒலி அவர்களை தொந்தரவு செய்ய அதனை கவனிக்கிறார்கள். கிரீஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் திரையிடுதலை ஊக்குவிப்பது போல இதிலும் நீங்கள் கலந்து கொண்டு உள்ளீர்கள். ஒரு திரைப்பட இயக்குநருக்கு அடிப்படையாகவே வணிகரீதியான அம்சங்களில் இன்றைய காலகட்ட சினிமா தேவைகளுக்காக தனிப்பட்ட ஆர்வம் தேவைப்படுகிறதா?

      முதலில், திரைப்படங்களுக்கான பிரச்சனைகள் மற்றும் உண்மையிலே அவற்றினை எதுவென அடையாளம் கண்டிருக்கிறோம். பல்வேறு ஆண்டுகளாக நான் பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள், சந்திப்புகள் போன்றவற்றில் நவீன சினிமாவின் சிதைவுகள் குறித்து விவாதித்து வருகிறேன். இது ஒரு நாகரிகமான பண்பாட்டு நிகழ்ச்சியாக வளர்ந்துவருகிறது. இதில் ஜாக்யுஸ் லாங்(அப்போது ப்ரெஞ்ச் கலாச்சார அமைச்சர்) மற்றும் ஐரோப்பிய முன்னணி இயக்குநர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொருவரும் சினிமா சிதைவில் சிக்கி இருப்பதை ஒப்புக்கொள்வதோடு, அது முழுவதுமாக அழிவிற்கு முன் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து விவாதிப்போம். அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வாழும் உலகம் எப்படி என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே தற்போதைய காலகட்ட சினிமாவின் இருப்பு குறித்து சரியாக அறிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட முறையில் கலாச்சாரங்கள், மொழிகள், தேசிய மரபுகள், செயல்பாடுகள், உருவகங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் போராடவேண்டிய சூழல் உள்ளது. கவனமாகவும், இயல்பானதாகவும் சினிமா இருக்கவேண்டுமானால் அது சுதந்திரமாக செயல்படுவதற்கான இடத்தினை அளிக்க வேண்டும். திரைப்பட இயக்குநர்கள் தங்களின் படங்களின் மூலம் மக்களுக்கு அவற்றின் மூலம் எவ்வளவு ஈர்ப்பினை கவர்ச்சியினை ஏற்படுத்த முடியுமோ அந்தளவு ஏற்படுத்தவேண்டும்.  அதுதான் அவர்கள் தம் படத்திற்கு செய்யவேண்டியது. நான் எனது படத்திற்கான பார்வையாளர்களை உலகம் முழுவதும் சென்று சந்தித்து வருகிறேன். கிரீஸின் ஒவ்வொரு மூலையிலும் எனது படங்களைக் குறித்து பார்வையாளர்களிடம் விவாதித்து உள்ளேன். ஆனால் இதை அனைத்து சினிமா இயக்குநர்களும் செய்ய முடியும் என்று நான் கூறவில்லை.

யுலிஸஸ் படத்தினை மற்ற விஷயங்களைவிட அது ஒரு காதல்கதை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அது உண்மையில்  காதல் குறித்ததா? அல்லது காதலின் இயலாமை குறித்ததா? படத்தில் ஒரு காட்சியில் நாயகன் ‘என்னால் உன்னை காதலிக்க முடியவில்லை என்பதால் அழுகிறேன்  என்று குறிப்பிடுகிறாரே?

      அந்த வார்த்தை ஹோமரின் ஒடிஸியிலிருந்து எடுக்கப்பட்டது. யுலிஸஸ் ஏழு ஆண்டுகள் கலிப்ஸோ தீவில் இருந்துள்ளான். பிறகு அவன் கடலைப் பார்க்க கிளம்புகிறான். அப்போது அழுகிறான். காரணம் அவன் கலிப்ஸோ வை விரும்பவில்லை. அவன் அங்கிருக்கும்போது பெனலோப் குறித்துத்தான் சிந்தித்தான். அவன் அவளை விரும்ப நினைத்தாலும் அது இயலாததாக இருக்கிறது. படம் முடியும்போது நாயகன் தனது முதல் காதலை மீண்டும் சந்திக்கிறான். இந்தப்படத்தின் முக்கியமான விஷயமே வாழ்க்கையில் ஒருவர் சந்தித்து அனுபவப்படும் முதல் விஷயங்கள் குறித்தது. முதல் பார்வை, முதல் காதல், முதல் உணர்ச்சிப் பெருக்கம் என இவை ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

படத்தில் பல்கேரியன் நகரமான ப்ளோதிவ் என்பதை இருமுறை குறிப்பிட்டாலும் அதனை கிரீக் பெயரான பிலிப்பவுலிஸ் என்று குறிப்பிடுகிறீர்கள் ஏன்?

      ஆம். அது உண்மைதான். மாசிடோனியா மன்னரான அலெக்ஸாண்டரின்  தந்தை காலத்தில் உருவாக்கப்பட்ட நகரமான அதில் இன்றும் மக்கள் வசித்து வருகிறார்கள். பல்கேரியர்கள் அதன் பெயரை பின்னர் மாற்றிவிட்டாலும், பழைய தொன்மையான பெயருக்கு மாற்றிவிடவே இப்போது எண்ணுகிறார்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது. படம் எடுக்கப்பட்டபோது, மக்கள் அவ்விடத்தை பிலிம்பாபவுலிஸ்  என்று அதிகாரப்பெயர் குறித்து கவலைப்படாமல் அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். எல்லையில், ஏ என்பவர் கிரீக் பெயரை பயன்படுத்தினால் சுங்க அதிகாரிகள் அவரை ப்ளோதிவ் என்று கூறுமாறு திருத்திக் கூறுவார்கள்.

இந்த முறையில் பல்வேறு பால்கன் இன மக்களை ஒன்றாக கலந்து வாழும் தன்மையில் அவர்களை ஒரே மக்கள் என்று கூறுகிறீர்களா?

      துருக்கி தவிர்த்து துருக்கியின் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போராடும் ஒவ்வொருவரின் கனவாகவே பால்கன் நாடுகளின் ஒற்றுமை இருந்துவருகிறது. அந்த சமயத்தில் துருக்கியர்கள் பால்கன் நாடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆண்டு வந்தனர். தனிப்பட்டரீதியாக துருக்கி சேர்ந்ததாக ஒருங்கிணைந்த பால்கன் நாடுகளாக உருவாவது எதிர்காலத்திற்கான கருத்தியல் என்று கூறலாம்.

பால்கன் நாடுகளின் சூழ்நிலையை உலகம் எப்படி புரிந்துகொள்ளும் என்று நம்புகிறீர்கள்?

      இப்படத்திற்கான படப்பிடிப்பின்போது நீங்கள் இப்படத்தை திரையில் கண்டு சிந்தித்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதை விட அதிகமான விஷயங்களை அதன் செயற்களத்தில் நான் அடையாளம் கண்டு உள்வாங்கிக்கொள்ள உணர முடிந்தது. பால்கன் குறித்து யாரேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் அப்பகுதிக்கு நிச்சயம் பயணம் செய்யவேண்டும். மக்கள் அவர்களின் பிரிவுகள் என அவர்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். ஒரு கவிதை கூறுகிறது. அதிகம் அறிந்தால் நீ நேசிப்பாய், நேசித்தால் அதிகம் அறிந்துகொள்வாய் என்று.  நான் சூழ்நிலையை முழுக்க ஆய்வு செய்துவிட்டதாக கூறமாட்டேன். படத்தின் கதாபாத்திரங்களின் வழி என்னுடைய உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வருகிறேன். திரைப்படமானது முதல் பார்வையில் வெகுளித்தனத்தைக் கொண்டிருப்பது சினிமாவிற்கானது மட்டுமல்ல. முதல்முறையாக முன்கூட்டிய முடிவுகள் கருத்துகள் இல்லாமல் உலகினைப் பார்ப்பது என்னும் பொதுவான தேவை என்றே கூறலாம். இத்தகைய மனப்பாங்கினை பழைய படங்களில் காணலாம். இன்று வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும் பழைய நினைவுகளைக் கொண்ட படங்கள் மற்றும் பார்வையாளர்கள் இன்றும் உள்ளனர்.


பிரபலமான இடுகைகள்