உரையாடல் போல அமைதியும் அர்த்தம் கொண்டதுதான் தொடர்ச்சி 2











1999 ஆம் ஆண்டினை படத்தில் அதிக இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அது என்ன முக்கியமான விஷயத்தை கூறவருகிறது?

அது ஒரு புனைவாக ஒன்று. மூடுபனிநிலம் படத்தில் சிறுவர்கள் ஜெர்மனி சென்று சேர முயலும் புனைவியல் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு 1999 புதிய தலைமுறையின் தொடக்கமாக, தனிப்பட்ட, சிறிய வலிமையற்ற வன்முறையும் நிரம்பிய இன்றைய நாள் போல இல்லாமல் இதற்கு பதிலாக உலகம் முழுவதும் ஒரு கனவை அனைவருமாக பகிர்ந்துகொள்வதுபோல் இருக்கவேண்டும். மக்கள் செர்ப்ஸ், க்ரோட்ஸ், துர்க்ஸ், அல்லது வேறு இதுபோன்ற கனவுகளைக் கொண்டிருக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு செர்பிய மனிதனும் கொசோவோ பகுதியைச்சேர்ந்த முஸ்லிம் பெண்ணுக்கும் நிகழும் காதல் உறவு குறித்த கதை கொண்ட யூகோஸ்லேவ் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன் (ஸ்ட்ஜன் கரனோவிக்கின் ‘ஃபிலிம் வித் நோ நேம்) இது போலவே அமைந்திருந்த இஸ்ரேலியர் ஆண் ஒருவரும்  அரேபிய பெண் ஒருவரும் காதலிப்பது போன்ற கதையில் அமைந்த இஸ்ரேலியப் படம் ஒன்றையும் பார்த்தேன்(நிஸிம் தயனின் ‘எ வெரி நேரோ ப்ரிட்ஜ்) இது போன்ற கொள்ளை நோயிடமிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டும். மதங்களுக்கிடையே சண்டை நிகழ்ந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து இந்த புதிய நூற்றாண்டிலும் நம்மை இவற்றிலிருந்து மீட்க புனிதப்போராளிகள் வரவேண்டிய தேவையிருக்கிறது. ஆனால்  இது மிகவும் முட்டாள்தனமான ஒரு சூழல் என்றே கூறலாம்.

கிரீசில் படமாக்கப்பட்ட தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் படம் மதம் குறித்து பேசுவது தொடர்பான அவதூறு உருவாகியுள்ளது. மத தூற்றல் இருப்பதாக வதந்திகள் உருவாகியுள்ளன. ஆனால் படத்தில் அவர்கள் பேசுவதை புரிந்துகொள்வதே கடினமாக உள்ளது.

      இதனைச்செய்வது படமாக்கப்பட்ட ப்ளோரினா நகரைச்சேர்ந்த திருச்சபை ஆயரான ஒரு தனி நபர்தான். எனது படத்தில் காட்டப்படும் காட்சிகளின் பாதிப்பினால் அவரது அதிகாரம் பாதிப்பிற்குள்ளாகும் என்று அவர் அஞ்சுகிறார். தொன்மையான பழக்க வழக்கமாக ஒவ்வொரு அரசியல்வாதியும் அவரின் அந்த இடத்திற்கு வந்து தங்களது மரியாதையை பணிவுடன் அவருக்குத் தெரிவிப்பார்கள். அவருடைய சொல்லினை மீறி நடப்பவர்களுக்கு அவருடைய வாழ்த்துகளும் கடவுளின் உதவியும் கிடைக்காது. ஒரு உ.தா: மருந்துக்கடை வைத்திருந்த 30 வயதான நபர் நகரத்தில் ஒரு திரைப்படச்சங்கள் ஒன்றினை உருவாக்கினார். அவர் எனது படத்தை ஆதரிப்பதாகக் கூறியதும் அவரது பெயர் ஆயரின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.  நகரத்து மனிதர்கள் எவரும் அவரது மருந்துக்கடையில் எதையும் வாங்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. விரைவில் அவர் பணமில்லாது நொடித்துப்போனார். இது நடந்த உண்மை. இதுபோல கிரீசில் எப்போதும் நடப்பதல்ல என்றாலும் சில சமயங்களில் நடக்கிறவைதான்.  

உங்கள் படத்தில் வரும் ஆயரின் கதாபாத்திரத்தினை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நதிக்கரையின் ஒரு புறத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்க ஜோடிகள் மறுபுறம் இருக்க, தேவாலயமே அவர்களை ஒன்றிணைக்க உதவுகிறது. உங்களது படத்தின் நிகழ்ச்சிகள் எனக்கு உண்மையில் என் வாழ்வில் நடந்த பலவற்றை நினைவுபடுத்துகிறது. கோலன் ஹெய்ட்ஸ் இல் உள்ள குடும்பங்கள் இன்று இஸ்ரேல், மற்றவர்கள் சிரியா என பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். வார இறுதியில் எல்லைக்கோடு அருகே வந்து தங்களது உறவினர்களோடு உரத்த குரலில் பேசிவிட்டு செல்ல வேண்டிய அவலம் அரசியல் நிலைமைகளால் அவர்களுக்கு உருவாகி இருக்கிறது.

      இப்படி நிறைய விஷயங்களை நான் கண்டிருக்கிறேன். அஸெர்பைஜான், ஈரானிடையே உள்ள எல்லையான அஸெரிஸ் எனும் எல்லைப்பகுதிகள் இடையே பிரிந்த தமது குடும்பங்களை சந்திப்பவர்களை நான் நாளிதழ்களின் புகைப்படங்களின் வழி அறிந்துள்ளேன். என்னுடைய படங்களில் வருவது போல அந்த இடத்தில் ஒரு சிறு நதி உண்டு. அங்கிருப்பவர்கள் 1949 ஆம் ஆண்டு எல்லை உருவாக்கப்பட்ட பிறகு அல்பேனியர்கள் அங்கே தொடர்புகொள்வது முழுமையாக தடுக்கப்பட்டது என்று அங்கு வசிப்பவர் அது குறித்து எனக்கு தகவல் தெரிவித்தார்.

      எல்லைப்பகுதி நிலங்களே கூட அந்த இடத்தில் சந்திக்கும் குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்திருக்கலாம். திடீரென ஏற்படும் மாற்றத்தினால் ஒரு நாளில் அந்த இடம் இரு நாடாக மாறிவிடுகிறது. மீண்டும் ஒருவரையொருவர் சந்திக்க நாற்பது ஆண்டுகள் கூட ஆகலாம். எனவேதான் புதிய உறவினர்களை கண்டறிய பழைய புகைப்படங்களைக் கொண்டு இருபுறமும் அதனை மேலே தூக்கிக் காட்டியபடி தன் உறவினர்களைத் தேடும் காட்சி பெரும் அவலமாக நிகழும். இது தினந்தோறும் நடக்கின்ற மோசமான சூழலாக என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. பயணிக்கும் வீரர்கள் படத்தினை ப்ரெஞ்ச் மக்கள் பார்க்கும் போது அதனோடு உணர்வுபூர்வமாக ஒன்றாமல் அதனை அறிவுப்பூர்வமாக காண்பார்கள். உடல்ரீதியாக எந்த ஒட்டுதலையும் உணரமுடியாது. ஆனால் இதனையே இத்தாலிய மக்கள் பார்க்கும்போது ப்ரெஞ்ச் மக்களை விட நெருக்கமாக படத்தினை உணர்வார்கள். அதற்கு காரணம் பாசிசம், முசோலினி, ஜெர்மன் நாட்டின் ஆக்கிரமிப்பு என பலவற்றையும் கடந்து வந்த காரணமாகவும் இருக்கலாம். ஹிரோஷிமாவில் அருங்காட்சியகம் ஒன்றினைச் சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தபோது வியட்நாமிய பயணி ஒருவர் என்னைச்சந்தித்தார். அவர் என்னுடைய பயணிக்கும் வீரர்கள் படத்தினைப் பார்த்திருக்கிறார். அது அவரது குடும்ப வரலாறு போலவே இருந்ததாகவும் கூறினார். அவரது நெகிழ்ச்சியான பேச்சு அறிவுஜீவித்தனமானது இல்லை. பிரிட்டிஷ் மக்களைக் குறித்த பகடிகளை அவர்கள் ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இப்படத்தினை இயல்பாக இது கொண்டுள்ள விஷயங்கள் அடிப்படையில் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் இப்படம் ஏற்படுத்தும் உணர்ச்சிவெளிப்பாடுகளின் தீவிரம் இடத்திற்கு இடம் சூழல் போல மாறுபடக்கூடியதாக உள்ளது.

உங்களுடைய முந்தைய படங்கள் கிரீக் புராணங்களை மையமாக கொண்டு உருவாகியிருந்தன. இப்படத்தில் அதுபோல புராண புனைவுகளை பயன்படுத்தியுள்ளீர்களா?

      இல்லை . இப்படத்தில் அத்தகைய புனைவுகளுக்கு இடமில்லை.

இந்தப்படம் உங்களுடைய மற்ற படங்களைப் போலில்லாது அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து மிக குறைவாக பேசுகிறது?

      உண்மைதான். அரசியல் பேசுவதற்கான அம்சங்களை இப்படம் நிராகரிக்கிறது. படத்தில் மாஸ்ட்ரோய்யன்னி கூறுவார்: ‘மழைத்துளியின் இசையைக் கேட்க நமக்கிருந்த அமைதி கட்டளையிட்ட காலங்கள் இருந்தன. இதன் உண்மையான அர்த்தம் போலியான அரசியல் கருத்தியல்கள் காலப்போக்கில் பயன்ற்றுப் போனதோடு வாழ்வின் இசைவான இசையைக் கேட்க இயலாமல் அதனை தடுத்தும் விடுகிறது என்பதுதான்.

ஏன் நீங்கள் அந்த முடிவிற்குச் சென்றீர்கள்? உங்களுடைய படங்கள் அனைத்துமே வலிமையான அரசியல் கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. அனைத்தும் வீண் என்று சிலர் கூறுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

நான் அதை ஏற்கவில்லை. ஆனால் அது போலான சூழலை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இதற்கு நான் என்ன செய்யமுடியும்? அரசியல் என்பதை அரசியல் என்பதைத் தொழிலாக கொள்ளாத போதும் அது குறித்த கனவு ஒன்று அனைவருக்கும் இருந்தது. அதனை பேராசை, உண்மை கருத்தியல் என்று கூற கொள்ளமுடியும். ஆனால் அண்மைய ஆண்டுகளில் அரசியல் என்பதை தொழிலாக கருதி நான் என்னை சமாதானம் அல்லது சமரசப்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான்.