இடுகைகள்

டெல்லி பல்கலைக்கழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சேட்டன் பகத் - படிக்கும்போது கட்சிகளுக்கு உழைக்காதீர்கள்!

படம்
டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும், ஐஐடி ஆகிய இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஐஐடியில் வகுப்புகளை பங்க் செய்வது, கலாட்டா செய்வது, தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என ஜாலியாக இருப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு வேலையே கிடையாது.  அப்படி உள்ள மாணவர்கள் உடனே அந்நிறுவனத்திலிருந்து வெளியே தள்ளப்படுவார்கள். நாங்கள் படிக்கும்போது டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏக்கமாக பார்ப்பது இதற்காகத்தான். எங்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பார்கள். அவர்களும்  அங்கு படிக்கத்தான் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அனுபவித்த சுதந்திரம் எங்களுக்கு பொறாமையாக இருந்தது. அரசியல் சினிமா என அவர்களுக்கு அனைத்திலும் சுதந்திரம், தனித்தனி கருத்துகள் இருந்தன. அதனை பகிரங்கமாக அவர்கள் கூறவும் முடிந்தது. ஆனால் அதேசமயம் அவர்கள் வளாகத்தில் செய்யும் அரசியல் ரீதியான போராட்டங்களை நான் ரசிக்கவில்லை. காரணம், மாணவர்கள் கல்லூரிக்கு வருவது தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே. இதில் அரசியல் கட்சிகளுக்கு உதவும்படியான நடவடிக்கைகள் எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. கருத்து சுதந்திரத்தை