இடுகைகள்

அறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

படம்
  காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார்.  குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப் பொறுத்த

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்து இணையத்தில்

கற்ற அறிவை நினைவில் வைத்து செயல்படும் விலங்குகள்! - எட்வர்ட் டோல்மனின் ஆய்வு

படம்
  அமெரிக்காவில் புகழ்பெற்ற உளவியலாளர் என எட்வர்ட் டோல்மனை உறுதியாக சொல்லலாம். இவர் முன்னர் நாம் பார்த்த உளவியல் ஆய்வாளர்களான தோர்ன்டைக், வாட்சன் ஆகியோரை விட வேறுபட்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இவர் குணநலன் சார்ந்த உளவியலை அறிவியல் அணுகுமுறை சார்ந்துதான் அணுகினார். கோணம், அறிவாற்றல், ஊக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டார். ஜெர்மனியில் கெசால்ட் உளவியல் முறையை கற்று பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து பர்பஸிவ் பிஹேவியரிசம் என்ற கோட்பாடை உருவாக்கினார். இதை தற்போது காக்னிட்டிவ் பிஹேவியரிசம் என அழைக்கின்றனர்.  டோல்மன், குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்து விலங்குகளின் மீது செய்யும் சோதனைகளை நம்பவில்லை. ''விலங்குகளுக்கு உணவை பரிசாக கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய வைத்தாலும் அவற்றால் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்'' என்று கூறினார். இப்படி கற்ற அறிவை சேர்த்து வைத்து விலங்குகள் பின்னாளில் பயன்படுத்துகின்றன என்றார். எலிகளுக்கு சில புதிர்களை விடுவித்தால் உடனே உணவும், மற்றொரு குழு எலிகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உண

டிஜிட்டல் பாகுபாடுகளால் பாதிக்கப்படும் ஏழை, வயதான மக்கள்!

படம்
  இப்போது நீங்கள் படிக்கும் கட்டுரை டிஜிட்டல் உலகில் ஏழைகள், கல்வியறிவற்றவர்கள் படும்பாடுகளைப் பற்றியது. அண்மையில் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அனைத்து கடைகளிலும் க்யூஆர் கோட் முதன்மையாக இருந்தது. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடை ஒன்றில் சாப்பிட்டு 30 ரூபாயைக் கொடுத்தபோது, 24 ரூபாய் போக , ஆறு ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய்தான் கிடைத்தது. ஒரு ரூபாய்தான் நஷ்டம். ஆனால் அது உணவக உரிமையாளருக்கு அல்ல எனக்கு நேரிட்டது. க்யூ ஆர் கோடு வழியாக பணத்தை கட்டுவது எளிதானது. ஆனால் அதற்கு கட்டணம் விதிக்கும்போது நிலைமை என்னாகும்? வலுக்கட்டாயமாக ரொக்க பரிமாற்றத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. திருவண்ணாமலையில் எனக்கு டீ வாங்கிக்கொடுத்து அவரது அலுவலக அறையில் தங்க வைத்தவர், செய்த செலவுகள் அனைத்தும் க்யூஆர் கோட் வழியாகத்தான். நான் பணமாகவே எடுத்து அனைத்து செலவுகளையும் செய்தேன். நண்பர் தனக்கு நன்கறிந்த குறிப்பிட்ட ஆவின் பார்லர் கடையில் டீ அருந்துகிறார். சீனிவாசா உணவகத்தில் பட்டை சாதம் சாப்பிடுகிறார்.   எனவே, டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எனக்கு அதெல்லாமே அந்நிய இடங்கள்தா

மனிதர்கள் தங்களை மறக்க நினைப்பது ஏன்? ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி இரவு கிளப்புகளில், பொழுதுபோக்கு பூங்காக்களில், பயணத்தில் செல்வச்செழிப்பானவர்கள் தங்களை மறக்க நினைக்கிறார்கள்.   சற்று தந்திரமானவர்கள், தங்களை மறக்க புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.   முட்டாள்கள், தங்களை மறக்க மக்கள் கூட்டத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் ஆன்மிக குரு, அவர்களுக்கு எப்படி, என்ன செய்யவேண்டுமென கூறுகிறார். பேராசை கொண்டவர்கள் தங்களை மறக்க ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.   நாம் அனைவருமே முதிர்ச்சியானவர்களாக வயதானவர்களாக மாறிக்கொண்டே நம்மை நாமே மறக்க முயல்கிறோம். வாரணாசி 22 ஜனவரி 1954 லீவிங் ஸ்கூல்- என்டரிங் லைஃப்                அமைதியில்லாத மனம், தொடர்ச்சியாக தனது உணர்வு மற்றும் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால், அது நிரம்பியதாக அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தோன்றும். பல்வேறு உணர்ச்சிகள், கடந்து செல்லும் ஆர்வங்கள், கிசுகிசு ஆகியவை மனதை நிரப்புகின்றன. பிறர் சார்ந்த விஷயங்களே ஒருவரின் மனதை அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. வார, மாதம இதழ்கள், நாளிதழ்களில் கிசுகிசு பத்திகள், கொ

புலனுணர்வு சார்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாதது, வெறுமையானது - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  மனிதர்கள் வாழ்வதற்கான பொருள்தான் என்ன? நீங்கள் இதற்கான பதிலைத் தேடாமல் இருக்கலாம். அதை புறக்கணிக்கலாம். இருபது அல்லது முப்பது ஆண்டுகளை செலவழித்து இயற்பியல், தத்துவம், சமூகவியல், உளவியல் என பலவேறு துறை சார்ந்த விஷயங்களைக் கற்கலாம். ஆனால், ஒருநாளை அல்லது ஒரு மணிநேரத்தைப் பயன்படுத்தி நீங்கள் யார், எதற்காக இங்கு வாழ்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புவதில்லை. ஐஐடி பாம்பே 7 பிப்ரவரி 1984 வொய் ஆர் யூ பீயிங் எஜூகேட்டட்?   நாம் நமது வாழ்க்கையை வீணடித்துக்கொண்டு இருக்கிறோமா? பல்வேறு தொழில் சார்ந்த துறைகளில் ஒட்டுமொத்த ஆற்றலையும் சிதறடித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற அர்த்தத்தில் இதைக் கூறுகிறேன். நம் முழு இருப்பையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோமா?   நான் நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். அதுதான் பெரிய சந்தோஷம். அல்லது உங்களுக்கு உள்ள திறமை என்பது ஒரு பரிசு. அதை ஆன்மிக வாழ்க்கைக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. எனவே, அதை குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்.   குறிப்பிட்ட துறையில் திறமையைப் பயன்படுத்துவது என்பது துண்டுகளாக ஒருவரின் ஆற்றலை சிதறடிப்பது. எனவே நீங்கள்

ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

படம்
  பார்டர் கோலி நாய் இனம் டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.   இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம். டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது. உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித இனமே தேர்

விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

படம்
  ஆக்டோபஸ் விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?   இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது. அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின்களின் மொ

சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்   முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்   ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு

பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து… தமிழாக்கம் வெற்றியும் பயமும் பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக   முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது. வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதலிடத்தை பி

அரசு, அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத மனத்தை அடைவது சாத்தியம்தான்! ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி ஜே கே கிருஷ்ணமூர்த்தி பெரும்பாலான மாணவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து விசாரணை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேள்வி  கேட்பதை பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஊக்குவிப்பதில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர்களாக அதிருப்தி கொண்டவர்களாக இருப்பது பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிள்ளைகள் இனி எப்போதும் கேள்வி கேட்காத முறையில் யோசிக்க தெரியாத அளவில் அவர்களை மாற்ற முயல்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறக்கணித்து அவர்களை மந்தமான மனிதர்களாக மாற்றுகிறார்கள். தங்களது வாதங்களை பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் முன்வைக்க கலாசாரம். தொன்மையான பாரம்பரியம், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள். இதில் வயதானவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிள்ளைகளை மந்தமானவர்களாக மாற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர் மேற்சொன்ன முறைகளை கைவிட்டு பிள்ளைகளை, மாணவர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும். சிறுபிள்ளைகள் உயிருடன் வாழ்கிறார்கள் என்றால் அதிருப்தி கொண்டவர்களாக அதேநேரம் நம்பிக்கையுடன்தான் இருக்கமுட

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை ம

ஒழுக்கம் போதித்தால் குழந்தைகளின் மனம் என்னவாக மாறுகிறது? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஒழுக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு   அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்து ஒழுக்கம் என்பது முக்கியமானது. தற்போதையை சமூக அடிப்படையிலும் உளவியல் ரீதியாகவும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. ஒழுக்கம் என்பதை ஒருவர் கடைபிடித்தால் செயலின் இறுதியில் முடிவு எளிதாக கிடைத்துவிடும். இப்படிக் கிடைக்கும் முடிவு எளிதாக இருந்தாலும் இதற்கான அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டும். அதில்தான் பிரச்னை உள்ளது. ஒழுக்கம் மூலம் முடிவு கிடைத்தாலும் அர்த்தம் என்பதே செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில் உள்ள ஆபத்துகளில் ஒன்று, மனிதர்களை விட அமைப்பு முறை முக்கியத்துவம் பெற்றுவிடுவதுதான். ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களின் இதயம், அன்பை இழந்து வெறுமையாகிவிடும். சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் காரணமாக வருவ தில்லை. சுதந்திரம் என்பது ஒருவர் தன் வாழ்வில் இறுதியாக அடையும் லட்சியம் அல்லது குறிக்கோள் அல்ல. வாழ்வில் சாதிக்க நினைக்க தொலைவில் உள்ள லட்சியம் என சுதந்திரத்தை நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளும் பாராட்டு சான்றிதழ் அல்லது பிறர் புகழ்ந்து பேசும் வார்த்த

சுதந்திரமான மனதை பெறுவது எப்படி? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்   கலாசாரங்களைப் பின்பற்றும் சமூகத்தில் இருந்துகொண்டு நாம் எப்படி சுதந்திரமான மனதைக் கொண்டிருப்பது? முதலில் சுதந்திரமாக சிந்திப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். வானில் பறவை பறப்பது போல, ஆற்றில் நீர் நுரையுடன் பெருகி பாய்வது போல உங்களுக்கு ஆர்வம் இருக்கவேண்டும். சுதந்திரமடைவதற்கு உங்களிடம் இப்படி ஒரு வேட்கை உண்டா? அப்படி இருந்தால் எது உங்களை தடுத்துவிடும்? சமூகம், பெற்றோர்   உங்களை மாற்றுவதற்கு முயல்வார்கள். அவர்களை எதிர்க்க முடியுமா? அதை செய்ய உங்கள் மனதில் உள்ள பயம் உங்களைத் தடுக்கிறது. எனவே, உங்கள் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்க்க முடியவில்லை. உங்களைச்சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று பயம் உங்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் உங்களை சுதந்திரமடைவதிலிருந்து தடுக்கிறது. இதனால்தான் பெற்றோர், சமூகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வது நடக்கிறது. நான் பட்டினியாக கிடந்தாலும் அழுகி கிடக்கும் சமூகத்திற்கு எதிராக போராடுவேன் என்று உங்களால் கூறமுடியுமா, எது நடந்தாலும் எத்தனை சவால்கள் வந்தாலும் நான் தட

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவாத கல்வி ஏற்படுத்தும் பாதிப்பு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பல்வேறு இடங்களில் ஏற்படும் பேரழிவுக்கு காரணம், கல்வியாகவே இருக்கிறது. நாம் கல்வி என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது எதற்கு? அவர்களை கற்றவர்களாக மாற்றுவதற்காகவா? பள்ளியில் குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அது அவர்களுக்கு லாபம் தரும் வேலையைப் பெற்றுத் தருகிறது. இப்படி கல்வி கற்று கிளர்க்காக திறன் பெற்றவர்கள் நிர்வாக ஏணிப்படிகளில் ஏறி திறன் பெற்றுவிட முடியுமா? ஏழாவது பாகம், தி கலெக்டட் வொர்க்ஸ் தொகுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சில பகுதியினருக்கு பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால் அதேசமயம் ஆழமான பிரச்னைகளையும் உருவாக்குகிறது. வளர்ந்துவரும் பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ஒருவரின் வாழ்க்கை இருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் இதுதான்.  தொழில்நுட்ப ரீதியாக நாம் பெறும் அறிவு, நமது மனதிற்குள் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை, தர்க்க ரீதியான அழுத்தங்களை தீர்க்க உதவாது. வாழ்க்கையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளாமல் நாம் பெறும் தொழில்நுட்ப அறிவு மெல்ல நம்மையே அழிக்கத்தொடங்குகிறது. அணுவை எளிதாக பிளக்