இடுகைகள்

சார்லீஸ் தெரோர்ன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொன்மைக்காலத்திலிருந்து மக்களை துன்பத்திலிருந்து காக்கும் காவலர்கள்! - தி ஒல்டு கார்டு

படம்
            தி ஓல்டு கார்டு                     தி ஓல்டு கார்டு உலகை காக்கும் பணியில் ஆதி காலம் முதல் இன்று வரை ஈடுபடும் குழு ஒன்று உள்ளது. இவர்கள் ஒருவரையொருவர் கனவுகள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். தங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள். பிறருக்கு வயதானாலும் இவர்களுக்கு வயதாகாது. இவர்களின் உடலிலுள்ள மரபணுக்களை திருட மருந்து நிறுவனம் திட்டம் தீட்டுகிறது. இதற்கு காப்பான் குழுவிலுள்ள ஒருவரே உடந்தையாகிறார். அந்த சதியில் அவர்கள் வாழ்க்கை என்னவானது? துரோகியை கண்டுபிடித்தார்களா? உலகை காப்பாற்றும் பணியை தொடர்ந்தார்களா என்பதுதான் கதை படத்தின் தயாரிப்பாளரும், நாயகியும் சார்லீஸ் தெரோன்தான். எனவே அந்த குழுவின் பாஸ் கூட அவரேதான். கதை திடுக்கென தொடங்கி, குழந்தைகளை மீட்கும் பணியின்போதுதான், அவர்கள் யார், அவர்கள் சக்தி என்ன என்பது பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறது. படத்தின் சிஜி சமாச்சாரங்கள் சிறப்பாக உள்ளன. அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதற்கான அடிப்படைக் கதையை இப்படத்தில சொல்லி விட்டடார்கள். எனவே அடுத்த பாகங்கள் படமாக எடுக்கப்பட்டால் இப்படத்தை பார்ப்பது முக்கியம். கிறிஸ்துவர்கள் சிலுவைப் போரில் ஈடுபடும், மதம்தா