சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!
சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!
சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது.
பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்கு உதவியவர் என சாணக்கியர் என ஜெயின் வரலாறு, வடமொழி நாடகமான முக்த ரக்சா கூறுகிறது. கூறும் காலம் கி.பி 500 இடையில் எழுநூறு ஆண்டுகள் உள்ளன. அரசர் நன்றாகவே ஆண்டாலும் கூட அவரை விட பார்ப்பனர் பெரியவர், சூழ்ச்சி, தந்திரங்கள் செய்து அரசரை வெல்ல வைத்தார் என்று கூறி நூல்களை உருவாக்குவதில் ஆரிய பார்ப்பனர்கள் கெட்டிக்காரர்கள்.
சமண மதத்தை சேர்ந்தவர்கள் மௌரிய வம்சமே சமண மதத்தை தழுவினார்கள் என்று ஆதாரம் காட்டுகிறார்கள். ஆரிய பார்ப்பனர்கள், சாணக்கியர் என்பவரை உருவாக்கி அதன் வழியாக சந்திரகுப்தர் என்ற பெரிய மன்னருக்கே அவர்தான் வழிகாட்டினார் என்று பார்ப்பனிய மேலாதிக்கத்தை உறுதி செய்ய முயல்கிறார்கள். ஆனால், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் கூறும் அர்த்தசாஸ்திரத்திலேயே நிறைய முரண்பாடுகள் உள்ளது. சாணக்கியருக்கு கௌடில்யர் என்ற பெயரும் உண்டு. அர்த்தசாஸ்திரம் என்பதை இந்தியாவில் நீதி நூல் என்று கூறுகிறார்கள். அதாவது, பார்ப்பனிய மேலாதிக்க நீதி நூல் என புரிந்துகொள்ளுங்கள்.
இதில், சீனப்பட்டு, ரோமானிய தங்க காசுகள் பற்றிய தகவல்கள் கூறப்படுகின்றன. இதெல்லாம், கிபி 200இல் நடந்தவை. அதாவது மௌரிய கால ஆட்சி நடந்த 400 ஆண்டுகளுக்குப் பிறகு... எப்படி சாத்தியம். வேதாளர் போல கௌடில்யர் சாகாவரம் பெற்றவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
வரலாற்றில் வேகம் கொண்ட இளைஞர், அவருக்கு வழிகாட்டும் அனுபவத்தில் முதிர்ந்த வயதானவர் என்பது பொதுவான எழுத்து முறை பொருள்தான். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளை, கதைகளில் நாம் பார்க்க முடியும். நாம் எப்போது சந்திரகுப்தரைப் பேசினாலும், அவரோடு சேர்த்து சாணக்கியரை இணைத்து ஜோடியாக்கி விடுகிறோம். உண்மையில் இந்தியாவில் மட்டுமல்ல இப்படி ஜோடிப் புறாக்களாக சிலரை கூறுவது பொதுவான ஒன்றுதான். மன்னர் ஆர்தர் கதையில் அவருக்கு வழிகாட்டியாக மெர்லின் என்பவரைப் பற்றி கூறுகிறார்கள். ராஜபுத்திர வம்ச வரலாற்றில் ஹரிட் ரிஷி என்ற யோகி, பப்பா ராவல் என்ற மன்னருக்கு ஆதரவாக வழிகாட்டி உதவுகிறார்.
சமணர்கள் மட்டும் சும்மாவா? ஆச்சாரியா ஹேமச்சந்திரா என்பவர் ராஜகளை கொண்ட ஒரு அனாதைப் பிள்ளையை எடுத்து வளர்க்கிறார். அந்த பிள்ளைதான் பின்னாளில் சமண ஒழுக்கங்களை பழக்க வழக்கங்களைக் கற்று மன்னரான குமாரபாலா. இது குஜராத்திய கதை. இதுபோல நிறைய கதைகளை சொல்ல முடியும். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட டெம்பிளேட்டை எடுத்துக்கொண்டு உருவாக்கியவை என்று எளிதாக கூறமுடியும். இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுக்க இதே டெம்பிளேட்டில் நிறைய கதைகள் உள்ளன. பார்ப்பனர்கள் இந்தியாவில் வந்த பிறகுதான் சாதி, பாகுபாடு என சமூக சூழலை தங்களுடைய சுயநலத்திற்கு உயர்வுக்கு மாற்றிக்கொண்டனர். இதெல்லாம் பற்றி சாணக்கியர் பேச மாட்டார். அவர் பேசுவது அரசாட்சி நிலைக்க அதைக் காப்பாற்ற பார்ப்பன அறிவு பயன்பட்டது. பார்ப்பன சூழ்ச்சியால், அதிகாரம் காப்பாற்றப்பட்டது என நிறுவுவதே ஆகும். இன்று இவரது கொள்கைகளை உயர்வாக பேசும் மேலாண்மை நூல்கள் உள்ளன. நாவல்கள் உள்ளன. அதை குறிப்பிடாத சுய முன்னேற்ற நூல்கள் இந்தியாவில் எழுதப்படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு வலிமையான அரசன், தனது வலிமையால் படை அமைத்து வெற்றியை ஈட்டினாலும் கூட அதைக்கூட பார்ப்பனிய ஆட்கள் தங்களது அறிவு, வழிகாட்டலால் வெற்றி கிடைத்தது என வெற்றியில் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அதற்காகத்தான் சாணக்கியர் என்ற மாயையான பாத்திரமே உருவாக்கப்பட்டது.
சாணக்கியரை இந்தியாவின் மாக்கியவெல்லி என்று குறிப்பிட்டு போற்றுவோரும் உண்டு. எதற்காக சாணக்கியரை இந்தளவு உயர்த்திப் பேசவேண்டும். அதற்கு காரணம், அதிகார வெறிதான். அரசர்கள் செய்யும் சீர்திருத்தங்களுக்கு செயல்பாடுகளுக்கு கோவில்கள், அதன் பூசாரிகளின் ஒப்புதல் தேவை.எனவே, கோவில்களை ஆக்கிரமித்த பார்ப்பனர்கள், அதை வைத்து தங்கள் இனத்தையே மேலே கொண்டு வந்தனர். அந்த வகையில் அவர்களது அரசியல் அதிகாரத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள சாணக்கியர் போன்ற கற்பனை பாத்திரங்கள் தேவைப்பட்டன. இப்படி கட்டுக்கதைகளை உருவாக்கி, அதை பரப்பினால்தான் பார்ப்பனர்களின் அதிகாரம் குறையாமல் வளரும். பொய் புரட்டு இல்லாமல் பார்ப்பனர்கள் இல்லை என்பதை இதை வைத்தே அறியலாம். இன்று நாடு தேசம் என்று பேசும்போதெல்லாம் சாணக்கியர் ஆங்காங்கு எட்டிப் பார்ப்பார். நிர்வாக செயல்பாடுகள், உத்திகள் ஆகியவற்றிலும் சாணக்கியரை உள்ளே நுழைக்கிறார்கள். சாணக்கியர் செய்ததை சதி, தந்திரம் என்றுதான் கூறவேண்டும். இதில், திட்டமிடல் ஏதும் கிடையாது. எது தேவையோ அதுவே தர்மம் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
சாவில் விளிம்பில் இருப்பவனைக் காப்பாற்றாமல் அவனிடம் தானம் கேட்கும் பார்ப்பானை தெய்வமாக கருத முடியுமா? ஒருவனைக் கொன்றுவிட்டு பிறகு அவனது புகழ்பாடும் வஞ்சனையை மெச்ச முடியுமா? கோவில்களை கட்டியவர்கள் யாராக இருந்தாலும் அதைக் கைப்பற்றிக்கொண்டு மக்களிடையே மூடநம்பிக்கையை விதைத்து அதை வைத்து அரசனை அடிமையாக்கி தங்களுக்கு தேவையான அனுகூலங்களைப் பெற்றவர்களே பார்ப்பனர்கள். இன்றும் அதே பேட்டர்னில் தங்களது வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதற்கு எதிரானவர்களை ஒழித்துக்கட்ட பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.இன்று இந்தியாவை ஆளுபவர்கள் வலது சாரி மதவாத பிரிவை சார்ந்தவர்கள். ஆரிய பார்ப்பனர்கள். எனவே, அவர்கள் மீதுள்ள வரலாற்று கறையை, களங்கத்தை துடைக்கும் முயற்சியில் வரலாற்றை திரித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளிலும் மழுமட்டைகளை முட்டாள்களை சுயநலமான கழுதைகளை பணியமர்த்தி வருகிறார்கள். ஏற்கெனவே நீதித்துறை மீது நம்பிக்கை போய்விட்டது. நம்பிக்கை அழிய வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமும். அப்படிச் செய்தால் சாதி பஞ்சாயத்து வைத்து பிரச்னைகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். எளிதாக தலித்துகளை பழங்குடிகளை முன்னர் போலவே சுரண்டலாம். உழைக்காமல் பிழைக்கலாம்.
இந்தியாவை கட்டமைக்க பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் உழைத்துள்ளனர். ஆனால், அதெல்லாம் கிடையாது. ஆரிய பார்ப்பனர்கள்தான் இந்தியாவின் பெருமைக்கு காரணம் என்று கூறுவது, பிற இனங்களை தாக்கி அழிப்பது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகாது. தச்சர்கள், நெசவாளர்கள், ராணுவ வீரர்கள், அதிகாரிகள்,விவசாயிகள் அனைவரும் உழைக்காமல் நாடு எப்படி முன்னேறும். ஆரிய பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அரசர்களின் வெற்றிக்கு முழுமுதல் காரணம் அவர்களேதான். ஆனால், தோல்விக்கு மட்டும் மன்னன் காரணம். வெற்றி என்றால் பங்கு, தோல்வி என்றால் தள்ளி நிற்பது என்ற போக்கை அவர்கள் அந்த இனம் ஆதிகாலம் தொட்டு கடைபிடிக்கிறார்கள். இதன் வழியாக, பார்ப்பனனை மேலே உயர்த்தி ஒற்றை மலைச்சிகரமாக காட்டுவது, மற்றவர்களை அவன் காலுக்கு கீழே காட்டுவது. 3 சதவீதம் பேர், மீதியுள்ள பெரும்பான்மையானோரை அடிமைப்படுத்தி வாழ்வது, புராணங்களில் இதிகாசங்களில் இடைச்செருகல்களை செய்தேதான். நேர்மையான முறையில் ஒன்றை செய்து வெற்றி பெறுவது அவர்களுக்கு எப்போதுமே பொருந்தி வராத அணுகுமுறை. இன்று அரசு, பார்ப்பனர்களுக்கானது. அவர்களுக்காகவே உழைக்கிறது. அவர்களைக் காக்க வன்முறையைக் கூட கையில் எடுத்து வருகிறது. இந்தியா என்றால் பார்ப்பான் என்பதே ஒற்றை அடையாளம். ஒரே நாடு என்ற ஸ்லோக வரிசையில் இதுவும் இடம்பெறும். இந்தியா என்பது பார்ப்பான், சத்திரியன், வைசியன் ஆகியோருக்கு மட்டுமானது.
தொகுப்பு
மாவேல் மாறன்
மூலம் தேவ்தத் பட்நாயக்

கருத்துகள்
கருத்துரையிடுக