வளர்ச்சியடைந்த இ(ஹி)ந்தியா!
பொறுமையின் சிகரமாக வாழும் இந்தியர்கள்!
டெல்லியில் விடுமுறைக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அங்குள்ள காற்றில் மாசுபாடு 10-2.5 என்ற அளவில் அதிகரித்தது. இரண்டு வார விடுமுறையை மக்கள் பலரும் தீர்மானித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய பத்திரிகையாள நண்பர் கூட பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களோடு சேர்ந்து துருக்கிக்குச் சென்றுவிட்டார். இன்னொருவர் பின்லாந்துக்கு சென்று சான்டா கிளாஸின் ஊரான லேப்லாண்டில் இருக்கிறார். அவர் சான்டா கிளாஸை நம்பாதபோதும், அப்படி வேகமாக, ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.
வெளிநாடுகளுக்குச் சென்று வாழ முற்படும் இந்தியர்களின் ஆர்வத்தை ஈடுபாட்டை எதற்கு என்றே புரிந்துகொள்ள முடியாது. அதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்னர். அப்போது புரியவில்லை. இப்போது தெளிவாக புரிகிறது. இந்தியா ஒரு ஏழை நாடு.அதன் அடிப்படைக் கட்டமைப்பு படுமோசமாக உள்ளது. ஓடிபி என்பது மிக குறைவாகவே உள்ளது. பல கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, மக்கள் இயற்கையாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முயல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று முன்னேறிய நாட்டின் வளமை, ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அதுபற்றி நாம் இங்கு பேசப்போவதில்லை.
2025ஆம் ஆண்டு இந்தியா, அதிகாரப்பூர்வமாக விக்சித்(வளர்ச்சி/மேம்பாடு) நாடாக மாறிவிட்டது. விக்சித் - வளர்ச்சியடைந்த என்று பொருள். 2014-2025 என்ற காலகட்டம் நமக்கு எளிதாக இல்லை. நாம் கடந்து வந்த துயரங்களை திரும்பி பார்த்தால் என்ன மாதிரியான நினைவுகள் வருமோ தெரியாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை. லாக்டௌன் செயல்பாடுகள், ஜிஎஸ்டி எனும் வரி தீவிரவாதம். நான் இங்கு கூறியது சில விஷயங்கள்தான். இவற்றைக் கடந்தும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் அடிப்படை நோக்கம், இந்தியர்களை மகத்தான் பொறுமைசாலிகளாக, சகிப்புத்தன்மை கொண்டவர்களாக மாற்றுவதுதான்.
நீங்கள் எந்த ஒரு சுயமுன்னேற்ற குருக்களிடம் கேட்டுப் பாருங்கள். உயிரைக் காத்துக்கொள்ள தேவையான திறன்களை முக்கியம் என்று கருதலாம். அந்த வகையில் அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்களே மேம்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும். சகிப்புத்தன்மையை உங்களிடம் வேரூன்றி வளரச்செய்ய, தொடர்ச்சியாக பல்வேறு அடுக்கடுக்கான துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். அதனால்தான், 2025ஆம் ஆண்டு மேம்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. நாம் இதுவரை என்னென்ன சந்தித்துள்ளோம் என்பதைப் பார்ப்போம்.
தீவிரவாத தாக்குதல், மழை வெள்ளம், புயல், பாலம் உடைந்து விழுதல், கூட்டநெரிசல் இறப்புகள், நிலச்சரிவு, தொழிற்சாலை தீவிபத்துகள், விமான விபத்துகள், இணைய மோசடிகள், அதீத ஊழல், காடுகளை முற்றாக அழித்தல், போர் என பல்வேறு சோதனைகளை மக்களுக்காக வைக்கிறது அரசு. இதில்தான் அவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையை சோதிக்க வேண்டும். தனிநபராக 2025ஆம் ஆண்டுதான் அணு ஆயுத ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் வந்தது. இணையத்தில் என்னுடைய டைம்லைனில் அணுஆயுத ஏவுகணைகள் வீட்டினுள் நுழைந்தால் என்ன செய்வது என விளக்கி வீடியோ போட்டிருந்தனர். என்னுடைய மனைவி அப்படி ஏதும் பிரச்னை ஏற்பட்டால், தப்பிக்க கோ பேக் என்ற பையை தயாரித்து வைத்திருந்தார். நான் கூகுளில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால் கோ பேக்கில் என்னென்ன பொருட்களை எடுத்து வைப்பது என்று தேடினேன். அப்படியும் கோ பேக்கில் எனக்கென எடுத்து வைத்திருந்த மூன்று டப்பா மைசூர் பாகை மனைவி வெளியே எடுத்து வைத்துவிட்டார்.
ஒரு பேரழிவு நடக்கும் ஏற்படும் மனநிலை பதற்றத்தை தவிர்க்க குறிப்பிட்ட உணவுகளை தயாராக எடுத்து வைத்துக்க்கொள்ள வேண்டும் என்ற பர்பிளக்சிட்டி ஏஐயின் பரிந்துரையை மனைவியிடம் காட்ட முயன்றேன். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தார். ஆபத்தான நிலையில் மைசூர் பாகு சாப்பிடுவது என் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.
2025ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஹெச்பிஏ1சி விசாவின் கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் கடினமாக உழைப்பது இந்தியர்கள்தான். ஆனால், அவர்கள் விசாவின் கட்டணத்தை உயர்த்த, அமெரிக்கர்கள் சிறிது கூட தயங்கவில்லை. இந்தியாவில் புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, தொழிலாளர் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்யவேண்டும்.இதையும் இந்தியர்கள், முதல்தர சகிப்புத்தன்மை மூலம் எதிர்கொண்டனர். இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் புதிய சட்டங்களுக்கு எதிராக பெரிதாக போராடவில்லை. அடுத்து, இண்டிகோ விமான சேவை நிலைகுலைந்தபோது, மத்திய தர வர்க்கத்தினர் கூட விமானநிலையத்தில் அமைதியாக காத்திருந்தனரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.விமானநிலை பணியாளர்களோடு சண்டையிடாமல் 22 மணி நேரம் அப்படியே, விமானநிலையத்தில் உட்கார்ந்திருந்தனர். இவர்களுக்கு இப்படி என்றால் பிற இந்தியர்களுக்கு எதிர்கொள்ள பிரச்னைகள் இல்லாமல் இல்லை. காற்று மாசுபாடு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என கவலைப்பட நிறைய விஷயங்கள் புதிதாக தோன்றிக்கொண்டே இருந்தன.
பெருமை மிக்க இந்தியர்களாக நாம் வாழ்கிறோம். அதில் எந்த சந்தேகமுமில்லை. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலுக்கான சீர்திருத்தங்களை வெளியிட்டது. முக்கியமாக, ஆணையம் தானே வழங்கிய அடையாள அட்டை செல்லாது என்று அறிவித்தது. பட்டியலில் நாம் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக, பலரும் அமைதியாக கொள்ளுத் தாத்தாவின் பத்தாவது மதிப்பெண் பட்டியலைக் கூட தேடி எடுத்து வாக்குரிமையைப் பெற முனைந்தனர்.
அடுத்து காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம். ஏற்கெனவே, இதற்கான திட்டநிதி சுருக்கப்பட்டு வந்தது. இப்போது, திட்டத்தின் பெயரில் இருந்த காந்தியின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசிடம் இருந்த திட்டச்செலவு இம்முறை மாநில அரசின் தோள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வைத்தே கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிழைத்து வந்தனர். இது மட்டும் அல்ல. இன்னும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல், பாகுபாடாக நடத்தப்படும் தேர்தல், பணக்கார சுயநலக்குழு ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது என அனைத்தையும் மக்கள் அறியாமல் இல்லை, ஆனால் அறிந்தாலும் கூட அமைதியாக இருந்தனர். அளவு கடந்த அமைதியைக் கைக்கொண்டனர். இதோ கண்முன் ஆண்டு ஒன்று கடந்திருக்கிறது. ஆனால், மக்களாகிய நம் வாழ்க்கையில் எந்த மாற்றமுமில்லை. இதோ அடுத்த ஆண்டும் வந்துவிட்டது. இதிலும் போன ஆண்டைப் போலவே நிறைய சம்பவங்கள் நடக்கலாம். அதையும் எதிர்கொள்ள நமக்கு சகிப்புத்தன்மை தேவை. அது ஏற்கெனவே நம்மிடம் இருக்கிறதே?
ஜி சம்பத், இந்து ஆங்கில நாளிதழில் எழுதிய கன்கிராட்ஸ் யூ ஆர் நவ் விக்சித் என்ற கட்டுரையை ஆதாரமாக கொண்டது. டிச28, 2025
கருத்துகள்
கருத்துரையிடுக