சமூகநீதி பேசும் கலகக்காரி - வோக் - டைட்டானியா மெக்ரத்
வோக்
டைட்டானியா மெக்ரத்
கட்டுரை நூல்
ப.103
இந்த நூல் சமூக நீதியை எந்த சமரசமும் இல்லாமல் பாசாங்கு இல்லாமல் பேசுகிறது. எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் நூல் முழுக்க தனது வசை கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை அவரது கருத்துகளை முழுமையாக சுருக்கமாக புரிந்துகொள்ள உதவக்கூடும். ஃபயர் பிராண்டு என்பார்களே, அதேதான். கட்டுரையோ, கவிதையோ, பிற எழுத்தாளர்களின் மேற்கோள்களோ அனைத்திலும் நெருப்பு பொறிகள் பறக்கிறது. இது ஒரு கட்டுரை நூல்தான். தொடக்கத்தில் இந்த நூலை படிக்கும்போது வோக் - சமூக நீதியைப் பேசுபவர்கள். இன்றைக்கு இந்த சொல்லை அமெரிக்காவில் ஒலிகார்ச் எனும் பணக்கார குழுவினர் கெட்ட வார்த்தை போல உச்சரிக்கிறார்கள். ஆனால், அப்படி ஒரு சொல்லை வைத்து என்னென்ன விஷயங்களை செய்யலாம், தான் செய்தேன் என்பதை எழுத்தாளர் டைட்டானியா மெக்ரத் கூறியுள்ளார்.
காலம் மாறும்போது சிந்தனைகளும் மேம்பாடு அடையவேண்டும். பாலை கற்களின் மேல் ஊற்றிவிட்டு மூத்திரத்தைப் பிடித்து குடிக்க கூடாது. அந்த வகையில், பழைமைவாத சிந்தனைகளை முதலில் கூறிவிட்டு அதற்கு எதிர்ப்பாக தனது சிந்தனைகளை டைட்டானியா முன் வைக்கிறார். இதில், வசைக்கவிதைகளை அவர் நூலகத்தில் வாசிக்கும்போது கூட பழமைவாதிகளால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதையும் அவர் பெரிய உறுத்தலின்றி பதிவு செய்கிறார். எதையும் மறைக்கவில்லை. எந்த புனிதமும் செய்யவில்லை. தன்னைப் பற்றிய காழ்ப்புணர்வோ, கழிவிரக்கமோ கூட அவருக்கு இல்லை. அவர் தன்னுடைய எழுத்தில் சிந்தனைகளை அப்படியே சொல்லிக்கொண்டே செல்கிறார். ஒரு கட்டுரையில் பெண்களே இல்லாத ஆண்கள் மட்டுமே கொண்ட சமூகம் வேண்டும் என்று கூறும் ஆண்களை இலக்கிய படைப்பாளர்களை வரிசைப்படுத்துகிறார். அவர்களின் சிந்தனை என்னவாக உள்ளது என கட்டுடைத்து பேசுகிறார்.
நூலில் திருமணம் பற்றிய அத்தியாயம் உண்டு. திருமணம் என்பது எதனால் பெண்ணுக்கு பெரிய விலங்காக மாறி அவளைக் கட்டுப்படுத்துகிறது. சிறை செய்கிறது என தன்னால் இயன்ற வரையில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
டைட்டானியா இப்படி தனது கருத்துகளை சுதந்திரமாக கூறுவதால், இணையம், நேரடியாக மறைமுகமாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இணையத்தில் கருத்துகளை தெரிவிக்கும்போது வரும் மிரட்டல், கேலி கிண்டல்களையும் கூட நூலில் எழுதியுள்ளார். இதை நாம் பெண்களை சொத்தாக அடக்கியாளும் மனப்பான்மையாகவே கருதவேண்டும். இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது, சமூகத்தை விட தனிநபரின் சிந்தனை எந்தளவு முக்கியம்,அந்த கருத்துகளை யோசிக்காமல் கருத்தை கூறியவரை இழிவுபடுத்தி அவமானப்படுத்துவதில் உள்ள பொருளின்மை, அரசியல் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். நூலை வாசிக்க அதிக நேரம் ஆகாது. ஆனால், டைட்டானியா எழுதியுள்ள கருத்துகளை முழுவதுமாக புரிந்துகொள்ள உணர அதை நடைமுறைப்படுத்தத்தான் அதிக காலம் தேவை.
கோமாளிமேடை குழு
#பெண்ணுரிமை #இணைய அச்சுறுத்தல் #வசை #கவிதை #அதிகாரம் #பன்னாட்டு நிறுவனங்கள் #பெண்ணுரிமை
#woke #slam poetry #titania mcgrath #women #life #literature #power #politics

கருத்துகள்
கருத்துரையிடுக