இடுகைகள்

குழந்தை நூல்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளுக்கான நூல்கள்!

படம்
புத்தகம் புதுசு ! The Parker Inheritance by Varian Johnson 352 pages Arthur A. Levine Books அமெரிக்காவின் சவுத் கரோலினாவிலுள்ள வீட்டில் உள்ள நூலில் கடிதம் ஒன்று காத்திருக்கிறது . யாருக்காக ? கேன்டிஸ் மில்லருக்காக . பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அநீதியை கண்டுபிடிக்கும் புதிரை அவிழ்க்கும் வாய்ப்பு கேன்டிஸ் மில்லரின் பாட்டிக்கு முன்பு கிடைத்தாலும் அதில் அவர் தோல்வியுறுகிறார் . கேன்டிஸ் மில்லர் தன் தோழன் பிரான்டன் ஜோன்ஸ் மூலம் அப்புதிரை எப்படி கண்டறிகிறாள் என்பதே கதை . The Sky at Our Feet by Nadia Hashimi 304 pages HarperCollins ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஜேசன் , தந்தை படுகொலையானபின் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக வாழத்தொடங்கிய தாயின் மூலம் பிறந்தவன் .  இந்த விஷயங்கள் தெரிந்தபின் இருவரும் பிரிந்துவிடுகின்றனர் . நியூயார்க்கிலுள்ள தன் அத்தையுடன் வாழும் ஆசையில் பயணிக்கிறான் ஜேசன் . அப்போது சாலையில் நேரும் விபத்தில் ஜேசன் சிக்க , மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான் . அங்கு நட்பாகும் மேக்ஸ் என்ற சிறுமி மூலம் மருத்துவமனையிலிருந்து தப்புபவன் த