இடுகைகள்

மனிதன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐ சாட்பாட்களை விரும்பும் மனிதர்கள் ! - நட்பா, காதலா என்ன தேவை?

படம்
  காதல் செய்யும் ரோபோ...தேவைதான் வா வா.... இன்றைய நவீன காலத்தில் நிரந்தர நண்பர்கள் யாருமில்லை. பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் இருக்கமாட்டார்கள். கல்லூரி நண்பர்கள், வேலைக்கு சென்றபிறகு தொடரமாட்டார்கள். திருமணமானால் நட்புகள் இன்னும் சுருங்கும். பிறகு, வாட்ஸ் அப் குழு, பள்ளி, கல்லூரி ரீயூனியன் சூழலில் மட்டுமே நண்பர்களை சந்திக்கலாம். அதிலும் கூட யார் பெரியவன், வசதி யார் என்று போட்டியிடும் நிலைமைதான் இருக்கும். பிறகு நட்பை எங்கே தேடுவது? இன்றைய சூழலுக்கு, குறிப்பிட்ட இடத்தில் உதவுகிற நண்பனா என்றுதான் பார்த்து பழக வேண்டியிருக்கிறது. அலுவலக உறவுகளை நட்பாக நினைப்பது பேராபத்து. அப்படி நினைத்தால், நண்பன் போல சிரித்து பழகி பயன்களைப் பெற்றபிறகு பணபலன்களை அடைந்த பிறகு ஓடிவிடுபவர்களே அதிகம்.  அதிலும் சிலர், மனைவிக்கு, மகனுக்கு வந்த நோய்களை கூட தனக்கு விசிட்டிங் கார்டாக பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். சாதி, மத, இன அடையாளம் கூட பிரபலமாவதற்கு பயன்படுமா பயன்படுத்தலாம். நண்பன் பிரயோஜனப்பட்டால் அவனையும் டெபிட் கார்ட் போல போகுமிடமெல்லாம் தேய்த்து பயன்படுத்தவேண்டியதுதான். வினோந உலகம். வினோத குணச...

காட்டுத்தீக்கு காரணம் என்ன?

படம்
  காட்டுத்தீக்கு காரணம் என்ன? அண்மையில் நீலகிரியில் உள்ள குன்னூர் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. அதை அணைக்க இந்திய விமானப்படையின் உதவி வழங்கப்பட்டது. மாநில வனத்துறையும் தீயை அணைக்க பாடுபட்டனர். இதற்காக எம்ஐ 17 வி5 என்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. பம்பி பக்கெட் மூலம் பதினாயிரம் லிட்டர் நீர் செலவானது. காட்டில் உள்ள தீயை அணைக்க நிலப்பரப்பு வழியாக வீரர்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் பம்பி பக்கெட் பயன்படுத்தப்படுகிறது. குளம், ஏரியில் இருந்து நீரை எடுத்து வந்து அப்படியே தீ மீது ஊற்றுகிறார்கள். இதற்கென பக்கெட்டில் கீழ்ப்புறம் சிறப்பு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் நவம்பர் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவு காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கிறது. அதிலும் பிப்ரவரி, ஏப்ரல் மே மாதங்களில் காட்டுத்தீ பாதிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது.  இந்திய வன ஆய்வுத்துறை, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி, 36 சதவீத காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. 4, 6 சதவீதம் என்று ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே தீவிரமானவையாக உள்ளன என அறிக்கையில் தெரிய வந்துள்ளது....

பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

படம்
  பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா? தேனீகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் மாறுகின்றன. இதில் சில பொம்மைகளோடு விளையாடும் இயல்பு கொண்டுள்ளன. கரப்பான் பூச்சிகளுக்கு ஆளுமைகள் உள்ளன. பழ ஈக்களுக்கு பய உணர்வு உள்ளது ஆகிய உண்மைகள், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிந்துள்ளது. பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உள்ளது என்பது புதிய சிந்தனை கிடையாது. 1872ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வின்   பூச்சிகளுக்கு பயம், பீதி, பொறாமை, காதல் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று கூறியுள்ளார். இப்போதுவரை பூச்சிகளின் மூளையில் என்ன சிந்தனை ஓடுகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நரம்பியல் ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் இந்தக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு சயின்ஸ் இதழில் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் கட்டுரையாளர்களான ஃபிரான்ஸ் டே வால், தத்துவ பேராசிரியர் கிரிஸ்டன் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பூச்சிகளுக்கு உணர்வுகள் இருப்பது உண்மையென்றால், அவைக்கு குண இயல்புகளும் உண்டு என அர்த்தமாகிறது என கூறியிருந்தனர். மனிதர்கள் என்றால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்று கூற...

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இ...

விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

படம்
  ஆக்டோபஸ் விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?   இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது. அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின...

செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்

படம்
பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத் அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.   மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றா...

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ர...

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/an...

பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த வேதிப்பொருட்கள் (Aluminium, Iron,Sodium Salicylate, potassium perchlorate) ஏராளமாக உள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்தவேண்டும். பட்டாசுகளில் உள்ள உலோகங்கள், வேதிப்பொருட்கள் தனியாக இருந்தால் அதனை மறுசுழற்சி செய்யலாம். இப்பொருட்கள், பட்டாசில் வெடிமருந்தாக ஒன்றாக கலந்துவிட்டால், அதனை மறுசுழற்சி செய்வது கடினம்.   நீர்யானைய விட மனிதரால் வேகமாக ஓட முடியுமா?  உண்மை. யானைக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பெரிய விலங்கு, நீர்யானை. இதன் எடை 1,800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், நீர்யானை காட்டில் மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில்தான்  ஓட முடிகிறது.  https://www.fswaste.co.uk/can-you-recycle-fireworks/ https://www.smithsonianmag.com/arts-culture/14-fun-facts-about-fireworks-180951957/ https://www.britannica.com/story/how-fast-is-the-worlds-fastest-human#:~:text=Since%20many%20people%20are%20mor...

மனிதனின் நல்லியல்புகளை மறுக்கும் உலகம்! - லியோடால்ஸ்டாயின் ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு

படம்
  லியோ டால்ஸ்டாய் கதைகள் - மூன்று கேள்விகள், ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு ரேவதி கேசவமணி  இதில், மூன்று கேள்விகள் என்பது குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் போன்றது. ஆனால் எழுப்பும் கேள்வியும் அதன் தாக்கமும் அபாரமானது. ஒரு விஷயத்தை செய்வதற்கான சரியான நேரம், அதை அடையாளம் காண்பது எப்படி, சரியான மனிதனுக்கு உதவி  செய்வது எப்படி என்பதை மன்னர் அடையாளம் காண்பதுதான் கதை.  நூலின் பக்கம் மொத்தம் 25 தான். மன்னர் பலரிடமும் கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் இறுதியில் அவருக்கான விடை எங்கு யாரிடம் கேட்கிறது என்பதே முக்கியமான இறுதிப்பகுதி.  நாம் எப்போதுமே பல்வேறு விஷயங்களை யோசிக்கிறோம். ஆனால் இதனால் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். இதைப்பற்றி துறவி தனது செயல்பாட்டின் வழியாக மன்னனுக்கு சொல்லித் தருகிறார்.  ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு, ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்து வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது.  நல்ல செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவரின் வாழ்க்கையும் அவரை விட கீழான நிலையில் உள்ளவர்களின் நிலையையும் ஒப்பிட்டு...

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

படம்
  நேர்காணல்  கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily) சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது.  இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா? இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை...

மனிதர்களின் உலகைப் புரிந்துகொள்ளும் டிராகுலா! - டிரான்சில்வேனியா 4

படம்
  டிரான்சில்வேனியா 4 டிரான்சில்வேனியா 4 சோனி அனிமேஷன் டிரேக் தனது ஹோட்டலை தனது மகள் மாவிஸ், மருமகன் ஜானியிடம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் மருமகன் மனிதன் என்பதால், அவனை டிரேக்கிற்கு பிடிப்பதில்லை. மேலும், ஜானி உற்சாகப்பட்டு செய்யும் பல்வேறு அட்டகாசங்களால் ஹோட்டலை அவனிடம் கொடுக்க மறுத்து டிராகுலா சட்டம் என ஒன்றை சொல்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை.  படம் தொடங்கும் டைட்டில் கார்டு தொடங்கி அனிமேஷன் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது. இந்த கொண்டாட்டமான மனநிலை படத்தின் இறுதி வரை தொடர்கிறது.  டிரேக் தனது ஹோட்டலில் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். அங்கு வரும் ஜானி, விழாவை படு உற்சாகமாக மாற்றுகிறார். ஆனால் அது மாமனார் டிரேக்கிற்கு பிடிக்கவில்லை. ஜானி உற்சாக மிகுதியில் செய்யும் விஷயங்களை மாற்றி இயல்பாக நடக்க வைக்கிறார். தனது மனைவியிடம் ஹோட்டலை அவனிடம் ஒப்படைக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இறுதியில் நிலைமை மாற தான் சொன்னதை மாற்றிக்கொள்கிறார். இதற்கு பதிலாக ஜானி, மான்ஸ்டர் கிடையாது என்பதை சொல்கிறார்.  டிரான்சில்வேனியா 4  இதனால், மனம் உடையும் ஜானி தன்னை மா...

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான...

நாயிடம் எப்படி பழக வேண்டும்? - நடத்தை உளவியல் ஆய்வு

படம்
pixabay உளவியலும் பழகும் முறையும் ஒருவர் சமூகத்தில் பழகும் முறை சார்ந்து அவரின் உளவியலை ஆராய்ச்சி செய்கின்றனர். இதற்கு பிஹேவியர் சைக்க்காலஜி என்று பெயர். உங்களுடைய நண்பர் இருக்கிறார். அவரை நீங்கள் எப்படி நண்பராக ஏற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? அவரின் பழகும் முறை, கருத்து, வெளியில் நடந்துகொள்ளும் முறை இவை உங்களுக்கு அவரிடம் பிடித்திருக்கலாம். பொதுவாக நம் கருத்துக்கு இசைந்தவர்களையே நாம் நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறோம். இதைத்தான் நடத்தை உளவியல் என வரையறுக்கலாம்.  உலகில் ஒருவர் பார்க்கும் விதம், அவரின் கருத்து சார்ந்து நடத்தை உளவியல் உருவாகிறது. இதற்கான சோதனைகள் தனியே குறிப்பிட்ட இடத்தில் நடப்பவையே. இவற்றில் நடத்தை உளவியல் சாரந்த பல்வேறு அறிஞர்களின் கோட்பாடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து ஒருவரின் நடத்தை உளவியல் தீர்மானிக்கப்படுகிறது.  1913ஆம் ஆண்டு ஜான் வாட்சன் என்ற ஆய்வாளர் நடத்தை உளவியல் என்ற பதத்தை உருவாக்கினார். இதன் செயல்பாட்டில் மனிதர்களின் பங்கு, மனம் பற்றி வரையறைகளை உருவாக்கினார். அவற்றை இன்றளவும் ஆய்வ...