இடுகைகள்

இம்பேக்ட் 50! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செமாரூ நிறுவனத்தின் வருமானத்தை அதிகரித்த தலைவர் இவர்தான்! கிராந்தி கடா

படம்
      கிராந்தி கடா   கிராந்தி கடா சீப் ஆபரேஷன் ஆபீசர், செமாரூ என்டர்டெய்ன்மெண்ட் கிராந்தி,  200 வல்லுநர்கள் கொண்ட படையை வைத்துள்ளார். செமாரூ நிறுவனத்திற்கு போன்கள் டிஜிட்டல், டிடிஹெச், கேபிள் என பல்வேறு வணிகங்கள் உண்டு. 2018ஆம் ஆண்டு கிராந்தியின் திறமையால் நிறுவனத்தின் வருமானம் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் டிடிஹெச்களில் பல்வேறு சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர். எவர்க்ரீன் கிளாசிக், டாடா ஸ்கை மராத்தி சினிமா, காமெடி கல்லி, ஹமார் சினிமா ஆகியவைதான் அவை. இவை மட்டுமன்றி மினிபிளெக்ஸ், டாடா ஸ்கை காமெடி, டாடா ஸ்கை டிவோஷன், சதபாபர் ஹிட்ஸ் ஆகியவை சிறப்பான வெற்றி பெற்றிருக்கின்றன. அடுத்து பக்தி ஸ்டூடியோ என்பதை உருவாக்கியுள்ளார்.ஆன்மிக துறையில் பாடல்களை பாடுபவர்களை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சி இது என சொல்கிறார் கிராந்தி. Impact magazine  

ஊடகங்களின் அத்தனை பிரிவுகளிலும் பணியாற்றிய பெருமை கொண்டவர்! - அபர்ணா புரோகித், அமேசான் ஒரிஜினல்ஸ்

படம்
    அபர்ணா புரோகித்         அபர்ணா புரோகித் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா, இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் இவரது தலைமையின் கீழ் அமேசானில் ப்ரீத், காமிக்ஸ்தான்,ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர், மேட் இன் ஹெவன், தி ஃபேமிலி மேன், பாதாள் லோக் ஆகிய தொடர்களை வெற்றிகரமாக உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படத்துறையில் பரத் பாலா, அபர்ணா சென் ஆகியோருக்கு கீழே உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அபர்ணா. பின்னாளில் படத்தின் தயாரிப்பு விஷயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இப்படித்தான்  2006ஆம் ஆண்டு சோனி டிவிக்குள் நுழைந்தார். சிஐடி, ஃபியர் பேக்டர், கைஸா யே பியார் ஹை ஆகிய தொடர்களுக்கு எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக செயல்பட்டார். அதன் பின்னர் யூடிவி மோஷன் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட், மும்பை மந்திரா மீடியா லிட். மகிந்திரா குழுமத்தின் சினிஸ்தான் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். இவை மட்டுமன்றி, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். அடுத்து எப்எம் கோல்டு, ரெயின்போ, டில்லி ஆகியவற்றிலும் பணியாற்றினர். விளம்பர நிறுவனங்களிலும் பணிபுரிந்த அனுபவத்த

பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சத்யமேவ ஜயதே ! மோனிகா செர்ஜில்

படம்
    மோனிகா செர்ஜில் இம்பேக்ட் இதழில் முக்கியமான சில பெண்கள்! தொடரில் 50 பெண்களைப் பற்றி எழுதினோம். இதில் தேர்வாகாத சில பெண்களும் ஊடகத்துறையில் உள்ளனர். அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இது. மோனிகா செர்ஜில் இயக்குநர் இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ், நெட்பிளிக்ஸ் இந்தியா பத்திரிகையாளர், டிவிகளில் ஆக்கத்தலைமை என பொறுப்பேற்று ஜீடிவி, ஸ்டார் பிளஸ், வெப் நிறுவனமான வூட் ஆகியவற்றில் பணியாற்றிய 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். வயகாம் 18 நிறுவனத்திலும் பணியாற்றியவரின் சிறப்பு, சீரியல் அல்லாத நிகழ்ச்சிகளை சிறப்பாக ஆலோசனைகளை வழங்கி உருவாக்குவதுதான். அதனால்தான் நெட்பிளிக்சில் அவருக்கு இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ் இயக்குநர் பொறுப்பை அளித்திருக்கிறார்கள்.  இவர் தயாரித்த சத்யமேவ ஜயதே தொடர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ஆகும். இதில் இந்தி நடிகர் அமீர்கான், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தையே மாற்றினார். பின்னாளில் இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை கொண்டது. வூட் வெப் நிறுவனத்தில் இவர் தேர்ந்தெடுத்து உருவாக்கிய தொடர்கள், நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீத த்திற்கும் மேல் உயர்த

ஐபிஎம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவாக்கிய விற்பனைப்பிரிவு ஆளுமை! தீபாளி நாயர்.

படம்
      தீபாளி நாயர் ஐபிஎம் விற்பனைபிரிவு இயக்குநர், தெற்காசியா, இந்தியா பிரிவு எல்அண்ட் டி, மகிந்திரா ஹாலிடேஸ், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில் நிதி சார்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஐபிஎம் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை சமாச்சாரங்களை கவனிக்கிறார். இத்துறையில் நாயருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு. ஐபிஎம் காரேஜ் என்ற திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தார். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎம் இப்போது தனது வணிகத்தை மீண்டும் செய்து வருகிறது. இவரது தலைமையிலான விற்பனைக் குழு கிரியேட்டிவிட்டி சார்ந்தும், விற்பனை சார்ந்து நல்ல நிலையில் உள்ளது. ஏராளமான விருதுகளையும் கூட வாங்கியுள்ளது. இம்பேக்ட் இதழில் 2018,2019 ஆகிய ஆண்டுகளிலும் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் தீபாளி நாயர் இடம்பெற்றுள்ளது அவரது திறமையை உலகிற்குச் சொல்லும். 6 அபர்ணா அகார்கர் நிகழ்ச்சி ஆக்கத்தலைமை, ஜீ5 இந்தியா ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டைம்ஸ் குழுமத்தில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். அண்மையில் இ வணிகம் சார்ந்த டிப்ளமோ ஒன்றை படித்துள்ள

இந்தியாவின் உள்ளூர் விஷயங்களை நிறுவனத்தின் பலமாக மாற்றியவர்! - டெபோஸ்மிதா மஜூம்தார் - புமா இந்தியா

படம்
    டெபோஸ்மிதா மஜூம்தார்   டெபோஸ்மிதா மஜூம்தார். விற்பனைப்பிரிவு தலைவர், புமா இந்தியா இந்தியா போன்ற நாடுகளில்தான் ஷூக்களுக்கு அதிக தேவை இருக்கும். அதனை குறிவைத்துதான் தனது விளம்பரங்களை அமைத்துக்கொள்கிறார். இப்படித்தான் ஷூக்கள் அணிவதற்கான குழுக்களை தொடங்கி வளர்த்து வருகிறார். விராட்கோலி, சாரா அலிகான், மேரி கோம், டூட்டி சந்த் ஆகியோரை புமா நிறுவனத்திற்கான தூதர்களாக ஒப்பந்தம் போட்டு இந்தியர்களுக்கு நெருக்கமான பிராண்டாக மாற்றியிருக்கிறார் டெபோஸ்மிதா. புமா நிறுவனம், பிற நிறுவனங்கள் செய்யும் மரபான விளையாட்டை மையப்படுத்திய விளம்பரங்களை செய்வதில்லை. இந்தியா சார்ந்த உள்ளூர் விஷயங்களை விளம்பரத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். கிரிக்கெட் அல்லாத பல்வேறு விளையாட்டுகளை புமா அளவுக்கு வேறு எந்த பிராண்டும் விளம்பரப்படுத்தவில்லை. பெண்களுக்கான விளையாட்டு விதிமுறைகளைப் பற்றிய புமாவின் பிரசாரம் உலகம் முழுக்க் பேசப்பட்ட தனித்தன்மையாக பிரசாரமாக அமைந்துபோனது.டெபோஸ்மிதா புமாவின் விற்பனை தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு அவரின் தலைமைத்துவ திறன்தான் காரணம்.

பொழுதுபோக்கு நிறுவனங்களை வளர்ச்சி பெறச்செய்தவர்! அதிதி சிரிவஸ்தவா

படம்
        அதிதி சிரிவஸ்தவா     அதிதி சிரிவஸ்தவா துணை நிறுவனர், பாக்கெட் ஏசஸ் பாக்கெட் ஏசஸ், என்பது டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனம். பில்டர் காபி, டைஸ் மீடியா, கோபிள், ஜம்போ, நட்செல், லோகோ விளையாட்டு என பல்வேறு சேனல்கள் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை அடைந்துள்ளது. மும்பை, பெங்களூரு, டில்லி ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் 185 நபர்கள் பணிபுரிகிறார்கள். பல்வேறு விளம்பர நிறுவனங்கள், நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றுக்கு நெருக்கமாக உள்ளார். அதிதி குவைத்தில் பிறந்து வளர்ந்தவர். தற்போது மும்பையில் வசிக்கிறார்.கடந்த ஆண்டில் நிறுவனத்திற்கான வருமானத்தை நூறு கோடியாக உயர்த்தியுள்ளனர். இவரது உழைப்பினால் கடந்த ஆண்டு செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். இதோ இந்த ஆண்டும் அதிதி இடம்பிடித்திருப்பதை நாம் எழுதிக்கொண்டிருப்பதுதான் அவரது சாதனை.  

பிஸ்லரியின் வடிவமைப்பு விற்பனை முறைகளை மாற்றி சந்தையில் வென்ற பெண்மணி - அஞ்சனா கோஷ்

படம்
        அஞ்சனா கோஷ்     அஞ்சனா கோஷ் விற்பனைப் பிரிவுத் தலைவர், பிஸ்லரி இன்டர்நேஷ்னல் கோஷ் உருவாக்கிய ஹர் பானி கி பாட்டில் பிஸ்லரி நஹி என்ற விளம்பரம் நாடெங்கும் பிஸ்லரிக்கான மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இவரின் நிறுவனம் இத்துறையில் 14 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. இதோடு நிற்காமல் குளிர்பானங்களை மூன்றை தனித்துவமாக உருவாக்கி விற்று வருகின்றனர். சமூக பொறுப்புணர்வு திட்டமாக கோஷ் உருவாக்கிய பாட்டில்ஸ் ஃபார் சேஞ்ச் என்ற திட்டம் மூலம் மும்பையில் மட்டும் 4800 கோடி டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன.   இரும்பு தொழிலில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர், 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிஸ்லரி நிறுவனத்தில் இணைந்தார். அவரது முயற்சியால்தான் நீலநிறமாக இருந்த பிஸ்லரி இன்று பச்சை நிறமாக ஒட்டகம் கூட தேடிப்பிடித்து குடிக்கும் குடிநீராக உள்ளது. சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை தூக்கி ஓரம் வீசிவிட்டு பிஸ்லரி முக்கியத்துவம் பெற விற்பனையில் அஞ்சனா கோஷ் செய்த பல மாற்றங்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

நெஸ்லே இந்தியாவின் களங்கம் துடைத்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர்! - ராசி கோயல், வர்ஜினியா சர்மா

படம்
          ராசி கோயல்   இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் ராசி கோயல் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், நெஸ்லே இந்தியா ராசி கோயலுக்கு பொருட்கள் விற்பனைத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. லோரியல், கார்னியர், லக்மே, குளோஸ்அப் ஆகிய பிராண்டுகளை சிறப்பாக விற்பனை செய்து பிராண்டிங் செய்துள்ளார். இந்தியாவில் நெஸ்லே பிராண்டுதான் ஆறாவதாக விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்யும் பிராண்டாக உள்ளது. அதனை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஆஸ்க் நெஸ்லே என்ற இணையத்தளத்தை தொடங்கினார். இதில் பெற்றோர்  குழந்தைகளுக்கு எந்த விதமான உணவுகளைத் தயாரித்து தருவது என பல்வேறு தகவல்களை இடம்பெற  வைத்தார். நெஸ்லே இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவு, சாக்கெட்டுகள், உணவுப்பொருள் என பல்வேறு வகைகள் உண்டு. அவற்றையும் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றார். நிறுவனத்தின் விளம்பரங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கியமான பங்கு வகித்து வருகிறார். வர்ஜினியா சர்மா ஜியோ சாவன், பிராண்ட் சொல்யூஷன், துணைத்தலைவர் விளம்பரத்துறையில் சர்மாவுக்கு 17 ஆண்டுகள் அனுபவம் உண்டு. 2020ஆம் ஆண்டு மே மாதத்தில்தான் ஜியோ சாவன் நிறுவனத்தின் பிர

இன்மொபி நிறுவனத்தை வளர்த்தெடுத்தவர், சொகுசு ஆடம்பர பொருட்களை விளம்பரப்படுத்திய சாதனையாளர்!

படம்
              வஸ்துவா அகர்வால்       இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் வஸ்துவா அகர்வால் இன்மொபி, ஆசியா பசிபிக் இயக்குநர் பிட்ஸ் பிலானியில் படித்தவர். ஐஐஎம் பெங்ளூருவில் படித்த திறமைசாலி. எம்பிஏ முடித்தபிறகு லண்டனிலுள்ள கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்தார். பின்னாளில் யுனிலீவர், குரூப் எம் ஆகிய நிறுவனங்களோடு பணியாற்றினார். இன்மொபி நிறுவனம் பல்வேறு பிரிவுகளில்முதலீடு செய்யவும் 100 மில்லியன் டாலர்கள் வருமானம் பார்க்கவும் வஸ்துவா அகர்வால் செய்த முயற்சிகள் முக்கியமானவர். இன்மொபி நிறுவனத்திற்கு 10 நாடுகளில் பத்து அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 150 பேர் கொண்ட குழுவை மேற்பார்வை செய்து அவர்களை ஊக்கப்படுத்துவது வஸ்துவா அகர்வால்.     அர்ச்சனா ஜெயின்     அர்ச்சனா ஜெயின் ஆர்ஆர் பப்ளிக் ரிலேசன், நிறுவனர், இயக்குநர் 1998ஆம் ஆண்டு அர்ச்சனா ஜெயின் தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது நிறுவனத்தில் 110 பயிற்சி பெறும் மாணவர்கள் இருந்தனர். நடுத்தர பொதுமக்கள் தொடர்பு நிறுவனமாக வளரத் தொடங்கியது. விலைமதிப்பான பொருட்கள் விற்பனை இந்தியாவில் மெல்லத் தொடங்கியது. அதில் பயன் பெற்றவர்களில

டிவி சேனல் வழியாக மக்களைக் கவர்ந்தவர்! அனுராதா பிரசாத்

படம்
        அனுராதா பிரசாத்     அனுராதா பிரசாத் பேக் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவர். நிறுவனத்தின் வணிகம், விற்பனை, புதிய திறமையாளர்களைக் கண்டுபிடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது அனுராதா செயல்பட்டு வருகிறார். இவர் பேக் பிலிம்ஸ் மற்றும் நியூஸ் 24 நிறுவனத்தின் தலைவர். பிபிசி, பிடிஐ, சகாரா, ஜீடிவி ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவங்களைக் கொண்டவர். ஹைனா போலோ போலோ, அந்தாக்சரி என இந்தி பாடல்கள் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார். இன்று உலகம் முழுக்க பேக் நிறுவனத்தின் டிவி சேனல்களை மக்கள் பார்த்து வருகி்ன்றனர். உத்தராஞ்சல் திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தில் உறுப்பினர். கடந்த ஆண்டு இதழியியலில் செய்த சாதனைகளுக்காக விருது வென்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் நியூஸ் 24, இ24 என இரு சேனல்களும் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.  

இந்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் பங்குகொள்ளும் மாஸ்டர்கார்டு நிறுவனம்! - மானசி நரசிம்மன்

படம்
    மானசி நரசிம்மன்      மானசி நரசிம்மன் மாஸ்டர்கார்ட், துணைத்தலைவர், விற்பனைத்துறை தலைவர் தெற்காசியாவில் ஆறு நாடுகளில் தனது நிறுவனத்தை வேரூன்றச் செய்வதற்கான பல்வேற முயற்சிகளை செய்து வருகிறார். நிறுவனத்தின் விளம்பரம், வணிகம், விநியோகம் சார்ந்த முயற்சிகள் என அனைத்தும் மானசியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவர், இந்திய அரசின் பல்வேறு டிஜிட்டல் திட்டடங்களுக்கு ஆதரவளித்து செயல்பட்டு வருகிறார். நிறுவனங்களுடன் இணைந்து நீண்டகாக நோக்கில் வருமானத்தை பெறும் திட்டங்களை வகுத்து வருகிறார். இந்த வேலைகளுக்கு முன்னர் யுனிலீவரில் விற்பனை விநியோகப்பிரிவில் பணியாற்றினார். பின்னர் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகுதான் மாஸ்டர் கார்டு பணி. செல்போனில் மாஸ்டர்கார்டை பயன்படுத்தும் இவரது ஐடியா, எம்வீஸ் என்ற விருதை இவருக்கு பெற்றுத்தந்துள்ளது. ஐஐம் பெங்களூருவில் எம்பிஏ படித்துள்ளார். லேடி ஶ்ரீராம் கல்லூரியில் பிஏ ஹானர்ஸ் முடித்துள்ளார்.

கொககோலாவை டிஜிட்டல் தளத்தில் விளம்பரப்படுத்திய சாதனையாளர்! ஆஷா சேகர்

படம்
      ஆஷா சேகர்     ஆஷா சேகர் கொககோலா இந்தியா, துணைத்தலைவர், டிஜிட்டல் அதிகாரி. புகழ்பெற்ற அமெரிக்க குளிர்பானக்கம்பெனி கொககோலா. அதில் 2005ஆம் ஆண்டு இணைந்து இன்றுவரை ஏறத்தாழ 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் ஆஷா. தன்னுடைய ஊடக வாழ்க்கையை ஆகில்வி நிறுவனத்தில்  பணிபுரியத்தொடங்கி வெற்றிகரமாக தொடங்கினார். அதன்பிறகு குரூப் எம், முத்ரா கம்யூனிகேஷன் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பொருளை விற்பதற்கான எப்படி திட்டமிடுவது என்று திட்டங்களை வடிவமைப்பு ஆஷாவின் பணி. கொககோலாவின் நவீனத்தன்மை நீர்த்து போய்விடாமல் இருக்க ஆஷாவின் பங்களிப்பு பெரிதும் உதவியிருக்கிறது. இவரின் பணி, நிறுவனத்தின் பொருட்களை மக்கள் அணுகுமாறு சூழலை உருவாக்குவதுதான். அதற்காக இவர் உருவாக்கி கோக் டு ஹோம் திட்டம், கிரிக்கெட் விளையாட்டி்க்கு கொக கோலா அளித்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஆகியவை நிறுவனத்திற்கு நல்ல வருவாயை ஈட்டித் தந்துள்ளன. இதன் காரணமாகவே ஆஷா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.  

டிஸ்கவரி சேனலைப் பிரபலப்படுத்த இந்திய பிரபலங்களை பயன்படுத்திய சாமர்த்தியசாலி! மேகா டாடா

படம்
      மேகா டாடா மேகா டாடா தெற்காசிய இயக்குநர், டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் ஊடக நிறுவனங்கள் சார்ந்து மேகா டாடா, 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஹெச்பிஓ, டர்னர் இன்டர்நேஷ்னல், ஸ்டார் டிவி  ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்களின் பௌண்டேஷன் போர்டு தலைவராகியுள்ளார். எம்மிஸ், புரோமேக்ஸ், குழந்தைகளின் திரைப்படவிழா, கோல்டன் மைக்ஸ் விழா, உலக பெண் விற்பனையாளர் விருது என பல்வேறு விருது வழங்கம் நிகழ்ச்சிகளுக்கு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இம்பேக்ட் 50 விருதுக்கு எப்போதும் தேர்வாகிற ஊடகப்பெண்மணி மேகா என்று தாராளமாக சொல்ல முடியும். டிஸ்கவரி சேனல் பல்வேறு தகவல்களை மனிதர்களுக்கு தருவது. அந்த வகையில் டிவியில் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை உருவாக்கி சந்தையில் 54 சதவீதத்தைப் பெற வைத்தது மேகாவின் சாதனை. பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களைப் பங்கேற்கச்செய்து டிவியின் பெருமையையும் வருமானத்தையும் உயர்த்தினார். 43 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் டிவி ஒன்றுக்காக ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆக்சிஸ் வங்கியை டிஜிட்டல்மயப்படுத்தியவர்! - ஆஷா கார்கா, குழும விற்பனை மேலாளர், துணைத்தலைவர்.

படம்
        ஆஷா கார்கா, ஆக்சிஸ் வங்கி   ஆஷா கார்கா, ஆக்சிஸ் வங்கி, விற்பனை மேலாளர் ஆக்சிஸ் வங்கியின்  துணைத்தலைவர், விற்பனை மேலாளார் ஆகிய பொறுப்புகளை ஆஷா வகிக்கிறார். இதற்கு முன்னர் ஃப்ரீசார்ஜ் நிறுவனத்திலும், யுனிலீவரிலும் வேலை செய்தவர். விளம்பரத்துறையில் சிறிதுகாலம் பணியாற்றியுள்ளார். மும்பையில் தாஜ்மஹால் ஹவுஸ் என்பதை கட்டமைத்தவர், பின்னாளில் ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்யத்தொடங்கினார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் வங்கி நவீன காலத்திற்கு ஏற்ப மாறத்தொடங்கியது. டிஜிட்டல் பரிமாற்றங்கள், டெபிட், கிரடிட், பாரக்ஸ் என மூன்றையும் ஒரே கார்டில் செய்யமுடியும் வசதியை இவரே அறிமுகப்படுத்தினார். அடுத்து ஆக்சிஸ் வங்கியை ஆக்சிஸ் கேபிடல், ஆக்சிஸ் பினான்ஸ், ஆக்சிஸ் பௌண்டேஷன் என  விரிவுபடுத்தினர். இவரின் பல்வேறு வணிக முயற்சிகள் பெரு வெற்றியடைந்துள்ளன. வங்கித்துறையில் ஆஷாவின் சாதனைகள் முக்கியமானவை.  

சமூக அக்கறையுடன் உணர்வுகளை குழைத்து விளம்பரங்களை உருவாக்கியவர்!- டிஸ்தா சென்

படம்
  டிஸ்தா சென் டிஸ்தா சென் வொண்டர்மன் தாம்சன், தெற்காசியத் தலைவர். ஆசியாவில் முக்கியமான விளம்பர ஆளுமைகள் பத்து பேர்களை சொல்லச்சொன்னால் டிஸ்தா சென்னின் பெயர் மிஸ் ஆகாது. அந்தளவு பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களையும் தனது விளம்பர படங்களால் ஒன்றாக இணைக்கும் வித்தை தெரிந்தவர். வொயிட்லைட் எனும் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னாளில் வொண்டர்மன் தாம்சன் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்தார். இவர் வெறும் வணிக விளம்பரம் என்றில்லாமல் அதில் மனிதர்களையும் சமூகத்தின் முக்கியமான பிர்சனைகளையும் இணைத்து சொல்லுவார். அதுதான் இவரின் பாணி கூட. ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றவர் டிஸ்தா சென். லக்ஸ் சோப்பிற்காக சோப் வித் லம்ப் என்ற விளம்பரத்தை உருவாக்கினார். பெண்கள் தங்கள் குளியலறையில் மார்பகங்களைத் தாங்களே சோதித்து அதில் மாறுதல் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவேண்டும். இதைத்தான் யுனிலீவருக்காக புற்றுநோய் மையத்துடன் இணைந்து செய்தார். இந்த சமூக கரிசனை லக்ஸ் சோப்பின் வியாபாரத்தையும், அதன் செயல்பாட்டையும், சமூக அக்கறையையும் பெரிதும் மாற்றியது. இதன் விளைவாக பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு ஜூரியாக செயல்படும் வாய்ப்ப

எட்டு ஆண்டுகளாக இம்பேக்ட் பட்டியலில் இடம்பெற்றவர் பிரேமா சாகர்!

படம்
        பிரேமா சாகர், பிசிடபிள்யூ இந்தியா     பிரேமா சாகர் தலைவர், பிசிடபிள்யூ இந்தியா மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பிரேமா சாகர் புகழ்பெற்றவர். 1992ஆம் ஆண்டு இவர் தொடங்கிய ஜெனிசிஸ் பிஆர் நிறுவனம், இன்று இந்தியாவின் டாப் நிறுஊவனங்களில் ஒன்று. தொழில்துறை சிரமமான காலகட்டதில் இருந்தபோதும், இந்த நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பாக கையாண்டார் பிரேமா. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 350க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேமா கடந்த எட்டு ஆண்டுகளாக இம்பேக்ட் 50 பட்டியலில் இடம்பெற்று வருகிறார். 2019ஆம் ஆண்டு  நிறுவனங்களின் இணைப்பிற்கு பிறகு எதிர்மறையான சூழ்நிலை நிறுவனத்தில் நிலவியது. அதையும் பொருட்படுத்தாமல் உழைத்து 85 சதவீத வருமானத்தை பெற்றுத்தந்தவர் இவர். நிறுவனம் பிரேமாவின் செயல்பாட்டுக்காக 45 விருதுகளைப் பெற்றுள்ளது.  

எலிபெண்ட் டிசைன் நிறுவனத்தை உருவாக்கி அங்கீகாரம் பெற்றவர்! - அஸ்வினி தேஷ்பாண்டே,

படம்
          அஸ்வினி தேஷ்பாண்டே அஸ்வினி தேஷ்பாண்டே 1989ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் படித்தவர். அகமதாபாத்தில் இப்படிப்பை முடித்துவிட்டு எலிபெண்ட் டிசைன் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கு இந்தியா சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உண்டு. அஸ்வினி குளோபல் டிசைன் நெட்வொர்க் அமைப்பின் உறுப்பினர் கூட. இந்த அமைப்பு 14 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.அஸ்வினி புனேவில் நடைபெறும் டிசைன் திருவிழாவைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர்.  இவரின் முயற்சியல் எலிபெண்ட் டிசைன்ஸ், தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. உலக சமூக தாக்க மாநாடு, ராக்பெல்லர் பௌண்டேஷன், கோபன்ஹேகன் திட்டம், டேனிஸ் டிசைன் பௌண்டேஷன் ஆகிய நிறுவனங்ங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வடிவமைப்பு பற்றி சாகல் என்ற பத்திரிக்கைக்கை தொடர் எழுதி விரைவில் அவை தொகுப்பாக வெளிவரவிருக்கின்றன. கலர்ஸ் ஆப் ஆசியா என்ற விருது பெற்ற நூலுக்கு ஆசிரியர் இவர். இந்த நூல் ஹாங்காங்கில் வெளியானது.  

ஸ்விக்கி நிறுவனத்தின் வெற்றிக்கு காரணகர்த்தா! - ஷிகா குப்தா

படம்
      ஸ்விக்கி       ஷிகா குப்தா, ஸ்விக்கி கிரியேடிவிட்டி  இயக்குநர் தற்போது ஸ்விக்கி நிறுவனத்தில் பல்வேறு புதிய விளம்பரங்களை உருவாக்கி மக்களை மனம் கவர்ந்து வருகிறார். 2008ஆம் ஆண்டு பெங்களூருவில் ரெஸோனாரி டிசைன் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னாளில் ரெடிப்பியூசன்,ஐடியாஸ் அட் வொர்க் ஆகிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து சில ஆண்டுகள் பணிக்கு சென்றார். பின்னர், வேலையை விட்டு நின்றுவிட்டார். அர்பன் லேடர் என்ற நிறுவனத்தில் வேலை செய்தவர், அந்த நிறுவனம் விளம்பரத்துறையில் வெற்றி பெற்று விருதுகளைப் பெற உதவினார். அப்புறம்தான் நாம் முதல் வரியில் சொன்ன சமாச்சாரம் நடைபெற்றது. 2016இல் வேலைக்கு சேரும்போது, ஸ்விக்கியின் டீமை வழிநடத்தும் தலைவராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது உறுப்பினர் எண்ணிக்கை 6. இப்போத்து 19 என அதிகரித்துள்ளது.  

கிராம மக்களும் ரசிக்கும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கியவர்! சபன்கீத் ராஜ்வந்த்

படம்
    சபன்கீத் ராஜ்வந்த் சபன்கீத் ராஜ்வந்த் வயகாம் 18, இந்தி பொழுதுப்போக்கு விற்பனைப்பிரிவு தலைவர். இவர் சந்தையின் விவரங்களை நன்கு அறிந்தவர் என்பதால், இவரது ஆலோசனையின் பேரில் உருவாக்கப்படும் நிகழ்ச்சிகள் கிராமங்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. டிவி மற்றும் டிஜிட்டல் விஷயங்களிலும் சபன்கீத் சாதனை புரிந்துள்ளார். இவர் உருவாக்கிய இந்தியா காட் டேலண்ட், டான்ஸ் தீவானே, சலீன் அனார்க்கலி, கேசரி நந்தன், கோர்ட்ரூம் ஆகிய நிகழ்ச்சிகள் மக்களால் பார்க்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை. கலர்ஸ் டிவி, ரிஸ்தே, ரிஸ்தே சினிபிளக்ஸ் ஆகிய சேனல்களின் வளர்ச்சிக்கு சபன்கீத் வியர்வை சிந்தியுள்ளார். சபன்கீத் தலைமையில்தான் வயகாம் 18 டிவி நிறுவனத்தின் முதல் இந்தி படங்களுக்கான ரிஸ்தே சினிபிளக்ஸ் தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இவரது தலைமையிலான குழு 46 விருதுகளை தங்களது சாதனைக்காக பெற்றுள்ளனர்.  

விளம்பர ஏஜென்சியை விரிவாக்கிய சாதனைத் தலைவர்! - திவ்யா கரணி

படம்
                                   திவ்யா கரணி திவ்யா கரணி இயக்குநர், டென்ஸ்ட்டு எக்ஸ் இந்தியா விற்பனை, விநியோகம், விளம்பரம் ஆகிய பிரிவுகளில் 36 ஆண்டு கால அனுபவசாலி. இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் யுனிலீவர், சிட்டிவங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். 2011இல் டென்ஸ்ட்டு எக்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். டாடா குழுமம், கோல்கேட், ரெக்கிட்பென்கிஸ்சர், ஹிடாச்சி, ஆகிய நிறுவனங்களுக்காக பணியாற்றியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சியை 22 சதவீதம் உயர்த்தியுள்ளார்.  மூன்று புதிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அதிக பணமதிப்பிலான வியாபாரத்தை தலைமையேற்று நடத்தி டிஸ்கவரி வுமன் அச்சீவர் 2019, சிறந்த நிறுவனத் தலைவர் 2019 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஊடக நிறுவனங்களுக்காக விருது வழங்கும் அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.